RO system

தோழிகளே உப்புநீரை நல்ல தண்ணீராக மாற்றும் உபகரணங்கள் பற்றி,எந்த பிராண்ட் நன்றாக இருக்கும் என்றும் சொல்லுங்கள்

நல்ல கேள்வி..நானும் இதற்கான பதிலை படிக்க ஆசைப்படுகிறேன்

ஹாய்..
நான் இருகும் இடத்தில் தண்ணீரில் உப்பு அதிகம். அதற்காக நான் நிறைய பேரிடம் கேட்டு இப்போது வாங்கீருப்பது Aquaguard total SENSA with SMP+. தண்ணீர் மிக சுவையாகவும் நன்ராகவும் உள்ளது. இதில் RO+UV, UF+UV உள்ளது. விலை 17500 ஆகிறது.

புன்னகையுடன்...
சிவகாமி சுப்ரமணியன்.

சிவகாமி சொல்ல்யிருக்கிற அதே முறைதானான்னு தெரியல. ஒரு உறவினர் வீட்டில் குடி தண்ணீர் நல்ல சுவையாக இருந்தது. எந்த பிராண்ட் கேன் வாட்டர்னு கேட்டேன். வீட்டிலேயே, மொத்த தண்ணீர் சப்ளைக்குமே ஃபில்ட்ர் மெதட் போட்டிருப்பதாக சொன்னாங்க. அக்வா கார்ட் என்று சொன்னதாகத்தான் நினைவு.

இதைப் பற்றி இன்னொரு உறவினரிடம் சொன்னப்போ அவங்க சொன்னது, இது செய்யறது கரெக்ட்தான், தண்ணீரும் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கும். ஆனா, முக்கியமானது, இந்த ஸிஸ்டத்துல ஐந்து குடம் தண்ணீரில் ரெண்டு குடம் தண்ணீர்தான் ஃபில்டர் ஆகி வரும், மீதமுள்ள 3 குடம் தண்ணீரை, தோட்டத்துக்கு மட்டும்தான் ஊற்ற்லாம், அல்லது அது வேஸ்டேஜ்தான், பாத்திரம் கழுவவோ, துணி துவைக்கவோ, குளிக்கவோ யூஸ் செய்ய முடியாதுன்னாங்க. அப்படி பாதிக்கும் மேலே தண்ணீர் உப்யோகிக்காமல் வேஸ்ட் பண்ற அளவுக்கு, டாங்க்ல தண்ணீர் இருக்கணும், அல்லது வீட்டுக்கு வெளியில் இடம், தோட்டம் இருந்தால், அதை திருப்பி விடலாம்னும் சொன்னாங்க.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு சிவகாமி

SENSA with SMP+. RO+UV, UF+UV இதைப் பற்றி கொஞ்சம் விவரமாக சொல்ல முடியுமா? இந்த ஸிஸ்டம் பராமரிப்புக்கு என்ன செய்யணும்? நாமே க்ளீனிங் எல்லாம் செய்துக்கலாமா? எத்தனை மாதத்துக்கு ஒரு முறை சர்வீஸ் செய்யணும்?

அன்புடன்

சீதாலஷ்மி

ஹாய் மேம்..
இந்த SENSA with SMP+. RO+UV, UF+UV ஸிஸ்டம் ரொம்ப ஈஸி. இது ஆட்டோமெட்டிக். தேவையான தண்ணீரை அதுவே எடுதுண்டு ஆட்டோ ஆப் ஆய்டும். கியார்ண்டி முடியரவர அவங்களே வந்து கீளின் பண்ணி குடுத்துடுவாங்க. 10 லி பிடிக்கும். 5 லி வேஸ்டா போகும். இத உபயோகிக்கரது ரொம்ப ஈஸி. தண்ணீர் ரொம்ப சுவையா இருக்கும்.

புன்னகையுடன்...
சிவகாமி சுப்ரமணியன்.

எங்கள் வீட்டில் அக்குவாகார்ட் க்ளாசிக் மாடல் இருக்கு. 12 வருடங்கள் உழைத்து இப்போழுது அடிக்கடி மக்கர் பண்ணுது. வரபோகிற புது வருடத்தில் நீங்கள் சொல்லுகிற மாடல் வாங்களாம் என்று நினைக்கிறேன். நீங்கள் சொல்வதுதான் டோட்டல் ஆர் ஓ ஸிஸ்டம் என்ற மாடல் தானா? மேலும் இதன் வருட மெய்ன்டன்னஸ் செலவு க்ளாஸிக் மாடல் விட டபுள் ஆக இருக்கும் என்று சர்விஸ்க்கு வரும் பையன் சொன்னான். இது எந்த அள்வுக்கு உண்மை? தெளிவு படுத்தவும்.

தளிகா, சிவகாமி, சீதாலக்ஷ்மி,கவிதா
நன்றி சகோதரிகளே. நான் வேல்பூல் பூராப்ரஷ் பற்றிக் கேட்கும்போது மற்ற ப்ராண்டில் யூவி லைட் உடம்புக்கு கெடுதி என்று சொன்னார்கள். அவுங்க ப்ரான்டுக்கு கோல்டு ஷீல்டு இருக்காம். விலை 14500, 15500 என இருக்காம். யூவி லைட் பற்றி இன்னும் தெளிவாக தெரிந்தால் சொல்லுங்களேன்.

idhuvum kadandhu pogum.

வணக்கம், உங்கள் பதிவுக்கு நன்றி. நீங்கள் குறிப்பிட்டுள்ள வேர்ல் பூல் பிரேன்டில் கிண்ற்றுனீரைக்கொண்டே கன்க்கஷ்ன் கொடுக்கலாமா? இதைப்பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள் பீளிஸ்.

ஹாய் கவிதா
கிணற்று தண்ணீரையும் இதன் முலம் சுத்தப்படுத்தலாம். ஆனால் கிணற்றிலிருந்தே நேராக எடுக்க முடியாது

idhuvum kadandhu pogum.

மேலும் சில பதிவுகள்