டோஸ்ட் சாண்ட்விச்

தேதி: December 1, 2010

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ப்ரௌன் ப்ரெட்ஸ்லைஸ் - 12
பச்சை சட்னி - அரை கப்
வெண்ணெய் - ஒரு கப்
துருவிய பனீர் - அரை கப்
துருவிய கேரட் - அரை கப்
துருவிய கோஸ் - அரை கப்
நருக்கிய மல்லித்தழை - கால் கப்
சில்லி கார்லிக் சாஸ் - கால் கப்
உப்பு - தேவையான அளவு


 

ப்ரெட் ஸ்லைசின் இருபுறமும் வெண்ணெய் தடவவும்.
அதன்மேல் பச்சை சட்னியைத்தடவிக்கொள்ளுங்கள்.
துருவிய காய் கறிகள்,பனீர்,சாஸ், உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
இந்தக்கலவையை ப்ரெட்டின் ஒருபுறம் பரத்தினால் போல வைத்து மற்றொருப்ரெட்ஸ்லைசால் மூடி தோசைக்கல்லில் போட்டு,சுற்றிலும் வெண்ணெய் போட்டு, இருபுறமும் நன்கு மொறு மொறுப்பாக வேகவிட்டு இறக்கி, சூடாகப்பரிமாறவும்.


தக்காளி கெச்சப்புடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

மிகவும் சுவையாக இருக்கும் என நினைக்கிறேன்.கண்டிப்பாக செய்கிறேன்.ஆனால் பச்சை சட்னிஎன்பது என்ன? மல்லி ,புதினா சட்னியா ?நன்றி சித்ரா!

aamaangka malli puthinaa satniyaiththaan passai satninnu sonneen. seythupaarungka. rompa nallaa irukkum