கத்தரிக்காய் பொரியல்

தேதி: December 1, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

நீளவாக்கில் நறுக்கிய கத்தரிக்காய் - 250 கிராம்
சின்ன வெங்காயம் - 15
பூண்டு - 10 பல்
பச்சை மிளகாய் - 3
சீரகம் - அரை தேக்கரண்டி
தேங்காய் துருவல் - 3 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு


 

வாணலியில் தாளிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
அதில் பொடியாக நறுக்கின சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் பூண்டு சேர்த்து வதக்கவும்.
பிறகு கத்தரிக்காய் சேர்த்து நன்கு வதக்கவும்.
சிறிது நிறம் மாறியதும் அதனுடன் பச்சைமிளகாய் மற்றும் சீரகத்தை அரைத்து சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும். கடைசியாக உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் தெளித்து கத்தரிக்காய் வெந்ததும் அடுப்பை அணைத்து தேங்காய் துருவல் சேர்த்து பரிமாறவும்.
சுவையான கத்தரிக்காய் பொரியல் ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அன்பு லாவண்யா

கத்தரிக்காய் பொரியல், எங்க வீட்ல எனக்கு மட்டும்தான் பிடிக்கும். அதனால் எப்பவாவது செய்தாலும், உப்பு, மிளகாப்பொடி மட்டும் போட்டு, வேக வைத்து, தாளிப்பேன்.

இந்த முறையில் செய்து பார்க்கிறேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

கத்தரிக்கா பொரியல் விளக்கமும், செய்முறையும் சூப்பரா இருக்கு.

லாவண்யா,
உங்க கத்தரிக்காய் பொரியல் பார்க்கவே பச்சையாய் அழகாய் இருக்கு.பக்கத்தில் இருப்பது விளக்கா?கத்தரிக்காய் பொரியல் வெறும் பச்சைமிளகாய் சேர்த்து செய்தது இல்லை.செய்து பார்க்கிறேன்.வாழ்த்துக்கள்.

எனது இந்த குறிப்பையும் வெளிட்ட அட்மினுக்கு நன்றி.

சீதாலக்ஷ்மி அம்மா,
எனக்கும் கத்தரிக்காய் என்றால் ரொம்பவே இஷ்டம்.......அரை கிலோ செய்தாலும் நானே காலி பண்ணிடுவேன்....அதை வைத்து என்ன செய்தாலும் சாப்பிடுவேன். உங்களை மாதிரி தான் என் வீட்டிலே என் கணவருக்கும் பிடிக்காது......நல்லதா போச்சுன்னு அதையும் நானே சாபிடிடுவேன் :) இது என் மாமியார் எனக்காக செய்த பொரியல் உங்களுடன் பகிர்ந்து கொண்டேன். செய்து பார்த்துவிட்டு பின்னூட்டம் கொடுங்கள்.

திருமதி கோமு,
உங்களின் பின்னூட்டத்திற்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி.

அன்பரசி,
நமக்கு இங்கே எப்போவாவது தான் இப்படி பட்ட காய்கறிகள் கிடைக்கும் அப்போ எப்படி எல்லாம் ட்ரை பண்ணிட வேண்டியது தான். நானும் எப்பொழுதும் மிளகாய் தூள் அல்லது மிளகு தூள் சேர்த்து தான் செய்வேன். இந்த முறையில் செய்தாலும் நன்றாக இருக்கும். செய்து பார்த்துவிட்டு பின்னூட்டம் கொடுங்கள். அது விளக்கே தான்.....கார்த்திகை தீபம் அன்று செய்தேன் ;)

நன்றி
லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

அலங்காரம் பக்காவா இருக்கு பா!!!

வாழ்த்துக்கள்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

மிக்க நன்றி அமீனா.....இது கார்த்திகை ஸ்பெஷல்....

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!