மூன்று சதம் அடித்த வனிதாவுக்கு வாழ்த்துக்கள்!

தினமொரு சமையல் குறிப்பு,கைவினைப் பகுதி,சிரியா கட்டுரை,கதை மலர்,என் சமையல் அறையில்,சொல்ல வந்தேன்,கண்ணமா இது புத்தம் பதிது,சமைத்து அசத்தலாம் என அறுசுவையின் எல்லா பகுதிகளிலும் கலக்கி கொண்டிருக்கும்,"அறுசுவையின் நம்பிக்கை நட்சத்திரம்","சகல கலா வல்லி","மெஹந்தி ராணி","நகைச்சுவை திலகம்","வனிதா வில்வாரணிமுருகன்",கூட்டாஞ்சோறு பகுதியில் 300 சமையல் குறிப்புகள் கொடுத்து மூன்று தங்க நட்சத்திரங்களை சொந்தமாக்கி கொண்டுள்ளார்.அறுசுவையில்,இன்னும் நிறைய குறிப்புகள் கொடுத்து மேலும் நிறைய ஸ்டார்கள் வாங்க வாழ்த்தலாம் வாங்க தோழிகளே!!!

வனிதா,
இரண்டு குழந்தைகளை வைத்துக் கொண்டு அறுசுவையை பார்வையிடுவதே பெரிய விஷயம்.இதில்,ஏகப்பட்ட குறிப்புகள்,கைவினை பகுதி,புதிய இழைகள் என்று எப்படி தான் நேரம் கிடைக்கிறது?
மூன்று கோல்ட் ஸ்டார் வாங்கியதற்கு வாழ்த்துக்கள்.இன்னும் நிறைய குறிப்புகள் கொடுத்து அசத்துங்க.

எல்லாத்தையும் நீங்களே சொல்லிட்டீங்களே அன்பரசி நாங்க எல்லாம் என்னத்த சொல்ல.....வனிதா இதெல்லாம் உங்களுக்கு மிக சாதாரணம்.....மேலும் பல ஸ்டார்கள் (மற்றும் பட்டங்கள்) வாங்க மனதார வாழ்த்துகிறேன். உங்க சீக்ரெட் என்னனு எனக்கு மட்டும் ரகசிய சொல்லுங்க......ஓகேவா.......

வாழ்த்துக்கள்
லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

வனிதா, அறுசுவையில் அஷ்டாவதனியாக வலம் வரும் உங்களை,மேலும் பல கலைகளில் சிறக்கவும், மேலும் பல ஸ்டார்களை வாங்கவும் வாழ்த்துகிறேன்.

வனி, மூணு கோல்ட் ஸ்டாரை வச்சுட்டு தனியா எப்படி கஷ்டப்படுவீங்க? போனா போகட்டும் உங்க சுமைய நான் குறைக்கறேன் எனக்கு ஒரு ஒன்றரை ஸ்டார் தந்துடுங்க ;))

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

வனிதா
அறுசுவையில் நான் வியக்கும் சிலரில் ஒருவர்...
எப்படித்தான் உங்களுக்கு மட்டும் நேரம் கிடைக்கிறதோ...?? தொடாத பக்கங்களே இல்லையெனலாம்.

அருசுவையோடான உங்களது பற்றும்
விதம் விதமான சமையல் குறிப்புக்கள் தருவதில் காட்டும் ஆர்வமும்
பிரம்மிக்க வைக்கிறது...

வனிதா இன்னும் பல ஸ்டார்கள் பெற்று, தொடரட்டும் உங்கள் பயணம் தமிழ் நதியின் எல்லை வரை என வாழ்த்துகின்றேன்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

அருசுவையின் அழகு ராணி, மூன்று சதம் அடித்திருக்கும் சகலகலாவல்லி வனியே....,
உங்களை வாழ்த்த வார்த்தைகளை தேடி கொண்டிருக்கின்றேன்.
எனினும் எனக்கு தெரிந்தவற்றிலேயே வாழ்த்துக்கிறேன்.
இன்னும் உங்கள் பணியில் மென் மேலும் அசத்த வாழ்த்துகிறேன்.

உங்களின் மற்ற அசத்தல்களை (கட்டுரை ஆகட்டும்,கைவண்ணம் ஆகட்டும்....)கணக்கிட்டு பார்த்தால் இன்னும் அதிக ஸ்டார் வாங்கி இருப்பின்றீர்கள் என நினைக்கிறேன்.
நான் ஒரு சிலரிடம் ஏதெனும் ஒரு விஷயத்தை கற்றுக்கொள்ள நினைப்பேன்.அந்த லிஸ்ட்டில் நீங்களும் உண்டு.

மீண்டும் என் வாழ்த்துக்கள்*********

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

அன்பு வனிதா

மூன்று தங்க நட்சத்திரங்கள் வாங்கியாச்சு, பாராட்டுக்கள், மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள், உங்களுக்கு.

சொல்லணும்னு நினைக்கறதில், நிறைய விஷயங்களை, ஹர்ஷா, பட்டங்கள் வழங்கி, பாராட்டி, சொல்லிட்டாங்க. நன்றி, ஹர்ஷா.

வனிதா, அறுசுவையில் உங்களுடைய பங்களிப்பு என்று எத்தனையோ விஷயங்களைக் கொடுக்கறீங்க. உங்களுடைய சிறப்பாக நான் நினைக்கிறது, இந்தத் தளத்தை, நாம் பொழுது போக்குக்காக வரும் இடம் என்று நினைக்காமல், எல்லாத் தோழிகளையும் ஆர்வத்துடன் இன்வால்வ் ஆக வைக்கறீங்களே, அதைப் பாராட்ட, எனக்கு வார்த்தைகளே இல்ல. பட்டிமன்றம் தொய்வில்லாம நடக்குது என்றால் அதற்கு நீங்க எடுத்துக் கொண்டிருக்கும் முயற்சிகள் நிறைய. உங்களுடன் இணைந்து கை கொடுப்பவர் நம்ம குட்டித் தலை கவிசிவா. அவருக்கும் எனது பாராட்டுக்கள்.

அதே போல, எல்லாருக்கும் பின்னூட்டம் கொடுத்துப் பாராட்டுறீங்களே, அதுக்கு உங்களுக்கு தனியாக ஒரு தங்க நட்சத்திரம் தரணும்.

புதிய புதிய சுவாரசியமான இழைகள், அதில் பங்கு கொள்கிறவங்களை உற்சாகப்படுத்தி பதிவுகள், இதிலெல்லாம், அறுசுவையை சிறப்பாக நடத்தி செல்வதில் நாம் எந்த அளவுக்கு முயற்சி எடுக்கணும், என்கிற உங்கள் அக்கறை வெளிப்படுகிறது.

இதை விட என்னைக் கவர்ந்த விஷயம், பொதுத் தளத்தில் பதிவுகள் கொடுக்கறப்போ, தோழிகள் எப்படிப் பேசணும், எந்த எந்தப் பதிவுகள் கொடுக்கலாம், கொடுக்கக் கூடாது என்பதில் நீங்களும் கவிசிவாவும் அப்பப்போ எடுத்து சொல்றீங்க, அந்த அக்கறை எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிச்சுருக்கு.

வனிதா, சமையல் குறிப்புகள் கொடுப்பதில் தங்க நட்சத்திரம் வாங்கியிருக்கீங்க. அறுசுவையின் அற்புத உறுப்பினர்கள் என்று சொல்லும்போது, சில தோழிகளுக்கு பிளாட்டினம் ஸ்டாரே கொடுக்கலாம். அந்த வரிசையில் பளிச்சென்று மின்னுகிறீர்கள்.

மீண்டும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!

அன்புடன்

சீதாலஷ்மி

வனிதாக்கா உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். சீக்கிரமாகவே அடுத்த கோல்ட் ஸ்டார் பெற வேண்டுகிறென்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

வனி, உங்க திறமைய வாழ்த்த வார்த்தை கிடைக்க வில்லை.....இன்னும் பல பல சாதனை புரிந்து, வெற்றி கிரீடம் சூட்ட வாழ்த்துக்கள்!!!!!!!!!!!!

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

வனிதா வாழ்த்துக்கள். இன்னும் நிறைய கோல்ட் ஸ்டார் பெற வாழ்த்துக்கள்.

அன்புடன்
மகேஸ்வரி

மனமார்ந்த வாழ்த்துக்கள்..பெரியவங்க எல்லோரும் சொல்ல வேண்டியதை எல்லாம் சொல்லி வாழ்த்திட்டாங்க.. :) சின்ன சொண்ணு நான் என்ன சொல்ல?!

உங்களுக்கு 2 குழந்தைகள் இருக்காங்கன்ற விஷயம் இப்போதான் தெரியும்..உங்களிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் பல பல.. அதில ஒன்னே ஒன்னு மட்டும் சொல்லுங்க.. “தொய்வே இல்லாமல் வாழ்வில் ஆர்வமுடன் ஓடிக் கொண்டே இருக்க முடிவதின் ரகசியம் என்ன? “ :)

மேலும் சில பதிவுகள்