தாய்மை அடைவதற்கான வழிமுறைகள் பற்றி ய புத்தகம்

தோழிகள் அனைவர்க்கும் வணக்கம் .எங்களுக்கு திருமணம் முடிந்து இரண்டு வருடம் ஆகிவிட்டது .இன்னும் குழந்தை இல்லை. குழந்தை வேண்டுவோர் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் பற்றி ய நல்ல மருத்துவர்கள் எழுதிய புத்தகங்கள் இருந்தால் தெரியபடுத்துங்கள் .மிகவும் உதவியாய் இருக்கும் .எதிர்பார்ப்புடன் சௌமியன் .

செளமியன் அவர்களுக்கு.......
உங்கள் திருமணம் முடிந்து 2வருடம் என்று சொல்லியுள்ளீர்கள். உங்கள் மனைவிக்கு ரெகுலர் பீரியட்ஸ் என்றால் இந்தக் கேள்வியை துவங்கிய பகுதியிலேயெ டெய்ஸி என்பவர்(கருத்தரிக்க,கருத்தரிக்காமல் இருக்க)என்ற பகுதியைப் பாருங்கள்.. முதல் நாளிலிருந்து 16வது நாள் சரியாக இருக்கும்.
அவருக்கு இர்ரெகுலர் பீரியட்ஸ் என்றால் நீங்கள் மருத்துவரை அனுகுவதுவே சரியான வழிநடத்தலைத் தரும். புத்தகங்கள் அடிப்படையைத் தெரிந்து கொள்ள மட்டுமே உதவும்.கவலைப்படாதீர்கள் டாக்டரைப் பாருங்கள் சரியாகிவிடும்........

புத்தகம்:"கரு முதல் குழந்தைவரை"
எழுதியவர்:டாக்டர்.ஜெயரானி காமராஜ்
பப்லிசர்:நலம்,

சௌமியன், ரொம்ப நாளைக்கு அப்பறம் நாம பேசறோம்..... கீழ இருக்க லிங்க் ல எல்லா தமிழ் புக்ஸ் உம கிடைக்கும், நீங்க உங்க பிரிவு வ சரியா கண்டுபுடுச்சு, புக் வாங்கிகோங்க....
http://www.udumalai.com/

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

தகவல்கள் தந்த தோழிகள் ரேணுகா மற்றும் சுகந்தி க்கு என் மனம் நிறைந்த நன்றிகள். சௌமியன்

நன்றியெல்லாம் எதற்கு செளமியன் அண்ணா? நாளைக்கு எங்களுக்கு குட்டி மருமகனோ,மருமகளோ வந்தா கண்டிப்பா சொல்லுங்க ,அதுபோதும்.........

குட்டி மருமகன் அல்லது மருமகள் வந்தவுடன் நிச்சியம் சொல்றேன் .உங்களது வார்த்தைகளை படிக்கும்போது சந்தோஷத்தில் என் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது .மகிழ்வுடன் சௌமியன்

செளமியன் அண்ணா மனதை சஞ்சலமில்லாமல் அமைதியாகவும்,மகிழ்ச்சியாகவும் வைத்திருங்கள். 2வருடம்தானே ஆகிறது.இன்னும் கொஞ்ச நாளில் சத்தம் போட்டு சிரிக்க குட்டிப் பையன் வந்திடுவான்......
அண்ணி என்ன செய்கிறார்கள்?நீங்கள் கோவையில் உள்ளீர்கள் என்று தெரியும். திருப்பூரில் இருந்ததாக நினைவு.அப்படியா?

kavalai vendam sakothara 4,5,10 varudam kalithu silaruku kulanthai piranthu erukirathu innum kalangal erukirathu kavali vendam udal balam mana balm erunthal pothum thalara vidathir kudiya viraivill balan adaiya vendukiren vanangu kiren Indrum yendrum anbudan jayalakhmi sahish

jayalakshmi sathish

பொதுவாக இது போன்ற டாபிக்கில் நான் நுழைவதில்லை. மிகவும் சென்ஸிட்டிவான விசயம். நான் எதாவது சொல்லி, அது மற்றவர்களை காயப்படுத்திவிடுமோ என்ற பயம் எனக்குள் இருக்கும். இப்போதுகூட இங்கே சொல்கின்ற விசயத்தை உங்களுக்கு தனி மின்னஞ்சலில் அனுப்பலாம் என்றுதான் டைப் செய்தேன். இதே நிலையில் உள்ள மற்றவர்களுக்கும் இந்த தகவல் செல்லட்டுமே என்ற எண்ணத்தில், துணிந்து இங்கேயே அதை தெரிவிக்கின்றேன். ஏதேனும் தவறு இருந்தால் தெரிவிக்கவும்.

பொதுவாக மருத்துவர்கள் தெரிவிக்கும் விசயம் இது. சமீபத்தில்கூட தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், ஒரு பிரபல மருத்துவர் மிகத் தெளிவாக இதனைக் குறிப்பிட்டார்.

இப்போதைக்கு குழந்தை வேண்டாம் என்று நினைத்திருப்பவர்களைத் தவிர, குழந்தைக்காக முயற்சி செய்யும் தம்பதியருக்கு, உடல் நலப் பிரச்சனைகள் எதுவும் இன்றி ஆரோக்கியமாக இருக்கும்பட்சத்தில், ஒரு வருட காலத்திற்குள் குழந்தை பேறு உண்டாக வேண்டும். ஒரு வருடம் என்பதை அதிகப்பட்ச காலமாக குறிப்பிடுகின்றனர்.

குழந்தை பிறப்பதற்கான ப்ராசஸ் மிகவும் எளிதானது. எல்லோரும் அறிந்தது. கருமுட்டையில் உயிரணு சேர வேண்டும். கருமுட்டையும், உயிரணுவும் குறையில்லாமல் இருக்க வேண்டும். அவ்வளவுதான். சரியான காலத்தில் நடைபெறாமல் சில நேரங்களில் இது தவறிப் போக வாய்ப்புள்ளது. ஒரு வருடம் முழுவதும் தவறான காலமாக இருக்க வாய்ப்புகள் மிகவும் குறைவு. அதற்குதான் அதிகபட்சமாக ஒரு வருடம் என்று குறிப்பிடுகின்றனர்.

இது சரியாக நடைபெறவில்லையென்றால் எங்கோ தவறு நடக்கின்றது, எதிலோ பிரச்சனை இருக்கின்றது என்றுதான் அர்த்தம். அது என்ன என்பதை கண்டறிய கண்டிப்பாக புத்தகங்கள் உதவாது. கடவுள் இன்னும் கருணைக் காட்டவில்லை, காலம் கூடவில்லை என்றெல்லாம் காத்திராமல், நீங்கள் நல்ல மருத்துவரை நாடுவதுதான் சிறந்த தீர்வு.

ஐந்து வருடங்கள், பத்து வருடங்கள் கழித்து குழந்தை பெற்றவர்கள் இருக்கின்றார்கள். வெளியில் இருந்து பார்க்கும் நமக்கு வெறும் வருட எண்ணிக்கை மட்டும்தான் தெரியும். ஏன் ஐந்து வருடமாயிற்று, என்ன செய்து அவர்களுக்கு ஐந்து வருடங்கள் கழித்து குழந்தை பிறந்தது என்ற விபரங்கள் தெரியாது. என்னுடைய சகோதரிக்கும் திருமணமாகி ஐந்து வருடங்கள் கழித்துதான் குழந்தை பிறந்தது. ட்ரீட்மெண்ட் எடுத்துதான் அவருக்கு குழந்தை பிறந்தது என்ற விபரம், பல வருடங்கள் கழித்துதான் எனக்கு தெரிய வந்தது.

நார்மலாய் நடக்க வேண்டிய ஒரு விசயம் நடக்கவில்லை என்றால், எங்கோ பிரச்சனை இருக்கின்றது என்றுதான் அர்த்தம். பிரச்சனை என்றவுடன் உடல் குறைபாடு என்று எண்ணிவிட வேண்டாம். எல்லாம் நல்ல நிலையில் இருப்பவர்களுக்கும், மிகச் சிறிய தவறுகளால்கூட இப்படி தாமதம் ஆகலாம். அவை என்னவென்று கண்டறியப்பட்டால் மிக எளிதாக அதனை நிவர்த்தி செய்துவிடலாம். எனது நண்பர் ஒருவர், உறவுக்காக விசேட உணவுப் பழக்கத்தை வைத்திருந்தார். அதுவே அவருக்கு பிரச்சனையாக இருந்தது. மருத்துவர் ஆலோசனைக்குப் பிறகு அதைக் கண்டறிந்து, பழக்கத்தை மாற்றி, சில காலத்தில் தந்தையானார்.

இன்றைய மருத்துவத்தில், ஏறக்குறைய இது சம்பந்தமான எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு உள்ளது. சிகிச்சை உள்ளது. நீங்கள் இரண்டு வருடங்களாக முயற்சி செய்திருப்பின், அது அதிகமான காலம்தான். இதற்கு மேலும் தாமதியாமல் இந்த துறையில் நிபுணராக இருக்கும் ஒரு மருத்துவரை நாடுங்கள். தயவுசெய்து புத்தகங்களைப் படிக்க வேண்டாம். மருத்துவ பரிசோதனைகள் செய்து, எதனால் தாமதம் என்பதற்கான காரணத்தை மட்டுமாவது கண்டறிய முயற்சி செய்யுங்கள்.

விரைவில் உங்கள் வீட்டில் குழந்தை சத்தம் கேட்கட்டும். அடுத்த கோவை கெட்டுகெதருக்கு உங்கள் குழந்தை(கள்) உடன் வருவீர்கள் என்று நம்புகின்றேன். வாழ்த்துகின்றேன்.

அட்மின் மற்றும் செளமியன் அண்ணா.....
அட்மின் அண்ணா நீங்கள் கூறியது மிகவும் சரி.சரியான வழிநடத்தல் இல்லையெனில் தவறுகள் மீண்டும் வர வாய்ப்புள்ளது.அதிகமாக பதிவிடாத நீங்கள் இதனைக்கூறியிருப்பது பலரைத் தெளிவு படுத்தும்.
செளமியன் அண்ணா ஆசானில்லாமல் வித்தையைக் கற்றுக்கொள்வதில் பிழைகள் வரலாம்.2வருடம் ஆயிற்றல்லவா.. இனி சரியான ஆசானை கண்டறிந்து சிறு பிழைகலைக்கூட சரியாக்கிடுங்கள். நான் மீண்டும் கேட்டுப் பார்க்கிறேன் டாக்டர்களைப் பற்றி..

மேலும் சில பதிவுகள்