தேதி: December 2, 2010
பரிமாறும் அளவு: 5 நபர்களுக்கு,
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
கோதுமை ரவை - ஒருகப்
சர்க்கரை - ஒன்னரை கப்
ப்ளைன் கோவா - கால் கப்
பாதாம் - 10
நெய் - அரை கப்
ஏலப்பொடி - அரை டீஸ்பூன்
பாதாமை கொதி நீரில் 10 நிமிடங்களுக்கு போட்டுவைக்கவும்.
பிறகு அதைஎடுத்து,தோல் நீக்கி மெல்லிய நீளத்துண்டுகளாகச்சீவிக்கொள்ளவும்.
கடாயில் கொஞ்சம் நெய் ஊற்றி காய்ந்ததும் கோதுமை ரவையைச்சேர்த்து நன்கு வாசனை வரும்படி வறுக்கவும்.
அதில் 3 கப் தண்ணீர் ஊற்றி நன்கு வேக விடவும்.
வெந்ததும் சர்க்கரை கோவா சேர்த்து மிதமான தீயில் 10 நிமிடங்களுக்கு கிளறவும். கலவை இளகி மீண்டும் கெட்டியாகும்போது பாக்கி நெய்யையும் ஊற்றி சுருள கிளறி இறக்கி பாதாம், ஏலப்பொடி சேர்த்துகலக்கவும்.
மிகவும் சத்தான, சுவையான இனிப்பு இது. அனைவரும் விருமி உண்பார்கள்.
Comments
கோமு
இந்த கேசரி செய்தேன் சிறிது நேரத்தில் எல்லாம் காலியாகிவிட்டது
எல்லா பாராட்டும் உங்களுக்கே ((படங்களுடன் அனுப்பிஉள்ளேன்))வாழ்த்துக்களும் என் நன்றியும்..
வாழு, வாழவிடு..