முருங்கை வெண்டை குழம்பு

தேதி: December 2, 2010

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.3 (3 votes)

 

முருங்கைக்காய் – 2
வெண்டைக்காய் – 8
புளி- ஒரு சிறு உருண்டை
தக்காளி – 1
வெங்காயம் - 1
பூண்டு – 5 பல்
கறிவேப்பிலை – ஒரு கீற்று
கொத்தமல்லி இலை – ஒரு கைப்பிடி
மிளகாய்த்தூள் – 1 1/2 டீஸ்பூன்
தனியாத்தூள் – 3 டீஸ்பூன்
சீரகத்தூள் -1/4 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை
வேர்க்கடலை-2 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த்துருவல்- 2 டேபிள்ஸ்பூன்
உப்பு- தேவைக்கு
தாளிக்க :
கடுகு,
கறிவேப்பிலை,
கறிவடகம்(1)


 

முதலில் தக்காளி மற்றும் தூள் வகைகளை மைய அரைத்து கொள்ளவும்.
பின் தேங்காய் மற்றும் வேர்க்கடலையை மைய தனியாக அரைத்து வைக்கவும்
வெண்டைக்காய் மற்றும் முருங்கையை ஒரே நீளமுள்ள துண்டுகளாக நறுக்கவும்
வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும்
வாணலியில் எண்ணை விட்டு ,கடுகு கறிவேப்பிலை மற்றும் கறிவடகம்
இவற்றை வறுத்து அதில் வெங்காயம் பூண்டு சேர்த்து வதக்கவும்.
பின் தக்காளி அரைப்பை போட்டு வதக்கி 2 கப் நீர் விட்டு கொதிக்கவிடவும்.
காய் வெந்ததும் புளியை ஒரு கப் நீரில் கரைத்து ஊற்றி பச்சை வாசனை போக கொதிக்க விடவும்..தேவையான உப்பு சேர்க்கவும்
பின் தேங்காய் அரைப்பை போட்டு 5நிமிடம் (எண்ணை மேலே மிதக்கும்வரை கொதிக்க விட்டு) மல்லித்தழை தூவி இறக்கவும்
சுவையான குழம்பு தயார் .


இது சாதம் ,இட்லி,தோசை,சப்பாத்திக்கு சுவையாக இருக்கும்

மேலும் சில குறிப்புகள்


Comments

மிக நல்ல குறிப்பு. செய்துபாத்துட்டு சொல்ரேம்மா.

சுவை நல்லா இருக்கும் .செய்து பாருங்க
உங்களின் அன்பான பின்னூட்டத்திற்கு நன்றி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

ஹாய் இளவரசி,அருமையான குறிப்பு.முருங்கைக்காய்,கத்திரிக்காய் காம்பினேஷன்லதான் குழம்பு வைப்போம்.நீங்க முருங்கைக்காயோட,வெண்டைக்காயை சேர்த்திருக்கீங்க.சாதத்துக்கு ரொம்ப நல்லாயிருந்துச்சு இளவரசி.நன்றி,இளவரசி.

அன்புடன்
நித்திலா

நீங்கதான் என்னோட நிறைய குறிப்புகள் செய்திருக்கீங்கபோல
ரொம்ப சந்தோசம்...முருங்கையும் வெண்டையும் ஒரே சைசில் உள்ளது போல் வெட்டி செய்தால் எனக்கு பிடிக்கும்
தவறாம பின்னூட்டம் கொடுத்ததுக்கு மிக்க நன்றிங்க

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.