உதவவும்- எலும்பு முறிவு.

என் 4 1/2 வயது பையனுக்கு கையுல் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. டாக்டரிடம் சென்று கட்டு போட்டுள்ளேன். எலும்பு வளர்ச்சிக்கு தேவையான வெஜ் உணவு பற்றி சொல்லுங்களேன்.
அவனுக்கு வலது கை பழைய மாதிரி வந்து விடுமா?

முல்லை
கால்சியம் சத்து நிரைந்த பால், தயிர், பசலை கீரை, பாதம், கால்சியம் சத்து கலந்த பழசாறு தாங்க. எனக்கு வேறு எதுவும் தெரியல. சீக்கரம் குணமாக கடவுளிடம் பிராத்திக்கிறேன். மற்ற தோழிகள் என்ன சொல்றாங்கன்னு பார்ப்போம்

கால்சியம் சத்து நிறைந்த உணவு குடுக்கவும்.
வீட்டில் உறைய வைத்த தயிர், கொழுப்பு சத்து அதிகமில்லாத பால், சோயா மாவு, ஆரஞ்சு ஜூஸ், பச்சை காய்கறிகள், கீரை, பிரொக்கோலி, எள், காரட், பூசணிக்காய், சீனிக் கிழங்கு, கோதுமை, ஓட்ஸ், ஆப்பிள், டோபு, அப்ரிகாட்ஸ், ப்ருன்ஸ், பேரிச்சை, சிகப்பு திராட்சை, பம்ப்ளிமாஸ், சுத்தமான தேன், கொண்டக்கடலை, வேர்கடலை, அக்ரூட், பாதாம்.

குழந்தைகள் தானே சீக்கிரமே குணமாகும்.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

அன்பு வித்யா & லாவண்யா,
நீங்கள் சொன்ன மாதிரி உணவு முறைகளை கொடுத்து பார்க்கிறேன்.நல்லதே நடக்கட்டும்

Mother's Grace.

என் மகனுக்கு 2 வயது . 12 பற்கள் தான் இருகிறது . பற்கள் நன்றாக வலர என பன்னனும்

மேலும் சில பதிவுகள்