பருப்பில்லாத சாம்பார்

தேதி: December 3, 2010

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 1.7 (3 votes)

 

வெங்காயம் -- 2
தக்காளி - 4
பச்சைமிளகாய் - 3
பூண்டு - 4பல்
கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சப்பொடி - அரைடீஸ்பூன்
கறி வேப்பிலை - ஒரு ஆர்க்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க
எண்ணை - 2ஸ்பூன்
கடுகு - 1ஸ்பூன்
பெருங்காயம் - சிறிதளவு


 

வெங்காயம், தக்காளியை மெல்லிசாக நீளவாக்கில் கட்செய்யவும்.
பச்சைமிளகாய், பூண்டு நறுக்கவும்.
கடாயில் எண்ணை வைத்து கடுகு, பெருங்காயம் தாளித்து காய்கள்,பூண்டு மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
காய்கள் நன்கு வதங்கியதும்மஞ்சப்பொடிஉப்பு,ஒருகப் தண்ணீர் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
நன்கு கொதித்து காய்கள்மிருதுவானதும்,கடலை மாவிலொருகப் தண்ணீரூற்றி கரைத்து அதில் விடவும்.
5 நிமிடம் கொதித்ததும்கறிவேப்பிலை தூவி இறக்கவும்.


புளி,பருப்பு எதுவும் சேர்க்காத வித்யாசமான சாம்பார் இது.அனைவரும் விரும்புவார்கள்.

மேலும் சில குறிப்புகள்