சத்துமாவு கஞ்சி

தேதி: December 5, 2010

பரிமாறும் அளவு: 5 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கோதுமை - 200 கிராம்
உளுந்து - 200 கிராம்
கேழ்வரகு - 200 கிராம்
கம்பு - 200 கிரம்
சோயா - 200 கிராம்
புழுங்கல் அரிசி - 200 கிராம்
பாசிப்பயறு - 200 கிர் ம்
பொட்டுக்கடலை - 100 கிராம்
ஜவ்வரிசி - 100 கிராம்
ஏலக்காய் - 10


 

தானிய வகைகள் அனைத்தையும்சுத்தம்செய்து,தனித்தனியாக ஊறவைக்கவும்.
நீரைவடியவைத்துமுளைக்கவிடவும்.
பிறகு இவற்றை நிழலில் உலர்த்தி,வறும் வாணலியில் வாசனை வரும்படி,தனித்தனியாக வறுத்துஎடுக்கவும்.
புழுங்கலரிசி,ஜவ்வரிசி,பொட்டுக்கடலையும் தனியாக வறுத்துக்கொள்ளவும்.
நன்கு ஆறியதும் இத்துடன் ஏலக்காயும்சேர்த்து மிக்சியில் நைசாகப்பொடிக்கவும்.
2டேபிள் ஸ்பூன் மாவை ஒருகப்தண்ணீரில் கரைத்துக்கொண்டுவைக்கவும்.
ஒருகப் பாலைக்கொதிகவைத்து,அதில் கரைத்துவைத்திருக்கும் மாவுக்கரைசலையுமூற்றிசர்க்கரையும்சேர்த்து5 நிமிடங்கள் கொதிக்கவிட்டுஇறக்கவும்.


இதுபோல சத்துமாவுப்பொடி தயார்செய்து வைத்துக்கொண்டால் எப்பொழுதுவேண்டுமானாலும்,இனிப்பாகவோ, உப்புகலந்தோ சத்தான கஞ்சி செய்துவிடலாம்.அனைவருக்குமே ஏற்ற சத்தானகஞ்சி இது.

மேலும் சில குறிப்புகள்


Comments

கோமு மேடம்,
சௌக்யமா? எப்படி இருக்கீங்க? நீங்க கொடுத்திருக்கும் இந்த குறிப்பில், மாவுடனேயே ஏலக்காயும் சேர்த்து பொடிக்க வேண்டுமா?