சிம்பிள் மட்டன் பொரியல்

தேதி: December 6, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.3 (3 votes)

 

மட்டன் - கால் கிலோ
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
பச்சை மிளகாய் - ஒன்று
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
மசாலாதூள் - கால் தேக்கரண்டி
எண்ணெய் - 5 தேக்கரண்டி
உப்பு - கால் தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - கால் தேக்கரண்டி
மல்லிதழை - சிறிதளவு
தண்ணீர் - சிறிதளவு


 

கறியை சுத்தம் செய்து குக்கரில் போட்டு அதில் இஞ்சி பூண்டு விழுது கால் தேக்கரண்டி மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மசாலாதூள், உப்பு, சிறிது தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
வெங்காயம், தக்காளியை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும்.
கறி நன்றாக வெந்ததும் எடுத்து விடவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வேக வைத்த கறியை அதில் போட்டு அதில் சிறிது மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சேர்த்து பொரியவிடவும் (நன்றாக இல்லை)
பாதியிலேயே வெங்காயம், தக்காளி, மிளகாய் போட்டு நன்றாக கிளறவும்.
வெங்காயம், தக்காளி ஒன்றாக சேர்ந்தவுடன் மல்லிதழை தூவி இறக்கவேண்டும்.
சுவையான பொரியல் ரெடி. ரசம், தேங்காய்பால் ஆணம் இதனுடன் சேர்த்து சாப்பிடலாம். சப்பாத்தி, பரோட்டாவுடனும் சாப்பிடலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

உங்க மட்டனும் சூப்பர் & உங்க ரோஸ் டெக்கரேஷனும் சூப்பர்,நானும் இப்படித்தான் மட்டன் ரோஸ்ட் செய்வேன்

Eat healthy

இதனை அழகாக வெளியிட்ட அட்மின் அண்ணாக்கும்,மற்றவர்களுக்கும் என் நன்றிகள் பல.

ஹசீன்

ரொம்ப நன்றி ரசியா உங்கள் வாழ்த்துக்கு. இது என் முதல் குறிப்பு.நீங்கள் முதலாவதாக வாழ்த்தியதற்கு என் நன்றி.

ஹசீன்

ரொம்ப நன்றி ரசியா உங்கள் வாழ்த்துக்கு. இது என் முதல் குறிப்பு.நீங்கள் முதலாவதாக வாழ்த்தியதற்கு என் நன்றி.

ஹசீன்

ஹாய் lulu நலமா ?உங்க முதல் குறிப்பே சூப்பர் பார்க்க ரொம்ப நல்லா இருக்கு மேலும் பல குறிப்பு கொடுக்க வாழ்த்துக்கள்

ஹசீனா, சிம்பிள் மட்டன் பொரியலை ரொம்ப சிம்பிளான பொருட்களை வைத்தே சிம்பளான குறிப்புகளோட ரொம்ப அழகா சிம்பிளா புரியும் படி தந்துருக்கீங்க. உங்களுக்கு கிராண்டா ஒரு வாழ்த்து சொல்லிடறேன். தொடர்ந்து சிம்ப்ளா கலக்குங்க :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ஹசீனா... ரொம்ப சூப்பரா இருக்கும் போலிருக்கே!! அடுத்த முறை மட்டன் வாங்கும் போது இது தான் செய்ய போறேன். குறிப்புக்கு மிக்க நன்றி :) வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹசீனா!உங்க முதல் குறிப்புக்கு முதல் ஆளா வந்து நான் அட்டன்டன்ஸ் குடுத்ததற்கு மகிழ்ச்சி!தொடர்ந்து குறிப்புகள் கொடுங்க,உங்களுக்கு என் புது வருட வாழ்த்துக்கள்.

Eat healthy

முதல் குறிப்பே ஈசியா சிம்பிளான குறிப்பு கொடுத்திருக்கீங்க வாழ்த்துக்கள்.இன்னும் நிறைய குறிப்புகள் கொடுங்க.இதில் மசாலா தூள்ன்னு சொல்லியிருப்பது,கரம் மசாலாவா??

rasiya,நஷ்ரீன்,கல்பனா,வனிதா , ரீம் உங்கள் அனைவருக்கும் நன்றிபா.
உங்கள் அனைவரின் ஊக்கத்தினால் இன்னும் குறிப்புகள் கொடுக்க ஆசையாக உள்ளது.
உடல் நலம் சரிள்ளததால் தனித்தனியாக பதில் போடா இயலவில்லை sorry.
ரீம் மசாலா தூள் என்றால் கரம் மசாலா தான்பா.
வனிதா செய்து பாருங்கள்.சுவையாக இருக்கும்.கோழி,இரால்லில் கூட இது போல் செய்யலாம்.

ஹசீன்

பார்த்தால் சாப்பிடத்தோனுது.ஹஸீனா..
நானும் செய்து பார்க்கிறேன்.. முதல் குறிப்பே அசத்திட்டிங்க.
..தொடரட்டும் உங்கள் பணி....நன்றி... ...

வாழு, வாழவிடு..

நல்லாயிருக்கு மட்டன் பொரியல் ரோஜுடன்...தொடர்ந்து குறிப்புகள் கொடுக்க வாழ்த்துக்கள்..:-

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.