என் குழந்தைக்கு இப்போதான் 4மாதம்தான் முடிஞ்சிருக்கு...இவளுடைய pediatrician இப்போவே fruits&vegetable puriees குடுக்க சொல்றாங்க இப்போவே அதெல்லாம் குடுக்கலாமா....தெரிந்தவர்கள் சொல்லுங்கள் ப்ளீஸ்,
என் குழந்தைக்கு இப்போதான் 4மாதம்தான் முடிஞ்சிருக்கு...இவளுடைய pediatrician இப்போவே fruits&vegetable puriees குடுக்க சொல்றாங்க இப்போவே அதெல்லாம் குடுக்கலாமா....தெரிந்தவர்கள் சொல்லுங்கள் ப்ளீஸ்,
4 மாத குழந்தைக்கு வெஜ்
4 மாத குழந்தைக்கு வெஜ் ப்யூரீஸ் தரலாமா?
Kalai
கலா,
கலா,
நானும் எனது மகளுக்கு purees தந்தேன்ஆனால் 5 வது மாதம்தான் கொடுத்தேன் காய்கறிகள் முதலில் என் மகளுக்கு செட் ஆகவில்லை ஆனால் பழங்கள் செட் ஆனது ஆப்பிள்,வாழை,plums ,nectarine முதலில் ட்ரை செய்யுங்கள் organic வகைகளை தேர்வு செய்யுங்கள் பேபி puree கடையில் நிறைய brand இருக்கும் ஆனால் அதைவிட நீங்களே செய்து கொடுங்க
முதலில் பழங்கள்,பின்பு காய்கறிகள் அப்புறம் முதலில் தண்ணியா ஓட்ஸ்,பார்லி,ரைஸ் ன்னு கொடுங்க
என்றும் அன்புடன்,
கவிதா
kala -mam
எனக்கு 8மாத குழந்தைஇருக்கிறான், அது என்ன veg purees எனக்கு அப்படினா என்னனு தெரியாதே. தயவு செய்து விளக்கமாக சொல்லவும் .pls....
எதிர்பார்த்தால்தானே எமாற்றம்
கலா
கலா
தாராளமாக தரலாம். earth's best முதலில் ட்ரை பண்ணுங்கள் அல்லது organic எதுவோ அதை தாங்க. நான் என் மகளுக்கு முதலில் peas தான் கொடுத்தேன். இங்குள்ளது எல்லாத்துலேயும் சிறிதளவு இனிப்பு சுவை தான் இருக்கும். அதனால் நீங்கள் தாராளாமாக தரலாம். உங்கள் மருத்துவரின் ஆலோசனை படி தரவும். நான் என் முதல் மகளுக்கு நான்கு முடிந்து 5 மாதத்தில் ஆரபித்தேன். இரண்டாவது குழந்தைக்கு ஏழாவது மாதத்தில் தான் ஆரம்பித்தேன். இங்குள்ள first foods நான்காவது மாதத்திலிருந்தே தரலாம்.
சாந்தி
veg puree என்பது காய்கறிகளை அரைத்து பதப்படுத்தி ஒரு டப்பாவில் போட்டு விற்ப்பார்கள். நாம் இந்தியாவில் அதையே வேகவைத்து மசித்து தருகிறோம். அப்படி தரும்போது உப்போ அல்லது சர்க்கரையோ சேர்க்க கூடாது. காய்கறியோ அல்லது பழமோ அதற்கென்று தனி சுவை இருக்கும். நாம் தான் உப்பு சர்க்கரை சேர்த்து கீடு போய்விட்டோம். குழந்தைகளாவது நல்ல இருக்கட்டும்.
லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!
கவிதா,லாவண்யா உங்களுக்கு என்
கவிதா,லாவண்யா உங்களுக்கு என் நன்றிகள்...எனக்கு குடுக்கலாம்னுதான் எண்ணம். ஆனால் இந்தியாவில் அம்மா,மாமியார்லாம் இப்போ பால் மட்டும் போதும்னு சொன்னாங்க..அதான் கேட்டேன்,இன்னைக்குதான் ஆப்பிள் குடுத்தேன்..
சாந்தி,, லாவண்யா சொல்லிட்டாங்க.வேற ஏதாவது சந்தேகம்னா இங்க கேளுங்க
Kalai
குழந்தை துணிகளுக்கு போடும் சலவை பொடி!!!
லாவண்யா,கவிதா.. மற்ற தோழிகளும் சொல்லுங்கள்..
நான் இந்தியா செல்லவிருக்கிறேன்.என் மகளுடைய துணிகளுக்கு Dreft போடுகிறேன்.இந்தியாவில் எது use பன்னலாம்.இல்லை இங்கே இருந்து எதாவது detergent powder வாங்கிபோகலாமா.
Kalai
கலா,
நான் இந்தியாவிலிருந்த போது Amway ப்ரொடக்ட் தான் உபயோகித்தேன். அதன் பெயர் s8 என்று நினைக்கிறன். இங்குள்ள மெஷினுக்கும் அங்குள்ளதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். நீங்கள் எங்கே செல்ல இருக்குறீர்கள் என்று சொல்லுங்கள். ஏனென்றால் அங்குள்ள சில கடைகளில் குழந்தைகளுகேன்ற வெளிநாட்டு பொருட்கள் எல்லாம் கிடைக்கும்.
லாவண்யா
லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!
லாவண்யா நான் சென்னை
லாவண்யா நான் சென்னை செல்கிறேன்...அங்கே உள்ள மால்களில் கிடைக்கும் என நினைக்கிறேன்.நான் இதுவரைக்கும் மாலில் baby section மட்டும் சென்றதில்லை..இனி மேல் அங்கு ம்ட்டுமே சுத்தனும்..அதான் சரியா தெரியலை..இங்கே detergent powder எதுவுமே இல்லையா..
Kalai
veg-puree-vr scorp
ரொம்ப நன்றி...., நான் வீட்டில் apple வேகவைத்து தோலுரித்து கொடுக்கிறேன், carrot வேகவைத்து mixயில் runசெய்து பால்விட்டு கொடுக்கிறேன், என்னஎன்ன vegitable, fruits, dryfruit (dates, nuts) கொடுக்கலாம்னு சொல்லுங்கபா. வாழைபழத்தில் என்ன வகை கொடுக்கலாம்.
எதிர்பார்த்தால்தானே எமாற்றம்
(baby foods including
(baby foods including cereals)Stage-1 க்கும் Stage 2கும் thick consistency தவிர வேறு என்ன வித்தியாசங்கள் இருக்கு.
இப்போது இவளுக்கு 5மாதம் ஆரம்பம். நான் Stage-1 குடுக்கிறேன்.எப்போது Stage-2 ஆரம்பிக்கவேண்டும்.இந்தியா போகும்போது இங்கிருந்தே கொஞ்சம் வாங்கி போகலாம் என நினைக்கிறேன் அதான் கேட்க்கிறேன்
Kalai