ஸ்ப்ரௌட்ஸ் சாலட்

தேதி: December 7, 2010

பரிமாறும் அளவு: 5 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

முளைகட்டிய பச்சைபயறு - கால்கப்
முளைகட்டிய கொண்டைக்கடலை - ஒருகைப்பிடி
முளைகட்டிய வெந்தயம் - ஒரு டேபிள்ஸ்பூன்
துருவிய கேரட் - ஒன்று
பொடிதாக நறுக்கிய வெள்ளரிக்காய் - ஒன்று
பொடிதாக நறுக்கிய தக்காளி - ஒன்று
மிளகுபொடி - அரைடீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்


 

முளைகட்டிய தானிய வகைகளுடன் மேற்சொன்ன எல்லா பொருட்களையும் சேர்த்துக்கலக்கவும்.
ஃப்ரெஷாக பரிமாறவும்.


நொடியில் தயார்செய்துவிடமுடியும்.அதிகசத்தினைக்கொண்டது.டயட்டில் உள்ளவர்கள் காலை 2 ப்ரௌன்ப்ரெட்டுடன் இந்த சாலட் சேர்த்துசாப்பிட்டால் முழு உணவு எடுத்துக்கொண்டசக்தி கிடைக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

இவைகளை எப்படி முளை கட்ட வைப்பது?

Eat healthy

பயிறு வகைகளை ஒரு நாள் முழுவதும் ஊரவைத்து பின்பு அதை ஒரு துனியில் இருக கட்டி வைக்கவேனடும்.ஒரு நாள் கழித்து திற்ந்து பார்த்தால் பயிறெல்லாம் முளைத்துருக்கும்.(எனக்கு தெரிந்து இப்படிதான் செய்வோம்)பார்க்கலாம் தோழிகள் என்ன சொல்ராங்கன்னு.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

செய்து பார்துட்டு சொல்ரேன்,நன்றி!

Eat healthy

இந்த பயறுவகைகளை முளைகட்டுவது எப்படி என்று பலருக்கும் சந்தேகம் இருக்கு.
பயறுகளை நன்கு கழுவி 8 மணி நேரங்கள் ஊற விடவும். பிறகு தண்ணீரை வடித்துவிட்டு ஹாட்பேக்(கேசரோல்) இருந்தால் அதில்போட்டு இரவுபூராவும் வைத்திருந்தால் காலை நன்கு முளை விட்டிருக்கும். இப்படி சாப்பிடுவது மிகவும் சத்து நிறைந்ததாகும்.