2 வயது குழந்தைக்கு அயர்ன் சத்து மிகுந்த உணவு

என் மகளுக்கு 2 வயது ஆகிறது. அவளுக்கு அயர்ன் குறைபாட்டினால் முன் 2 பற்களில் brown கலரில் புள்ளி போன்று உள்ளது அதை எப்ப்டி நீக்குவது,எதாவது கிட்ஸ் toothpaste உபயோகிப்பதால் அந்த பற்களில் உள்ள கறையை நீக்கமுடியுமா.நான் தினமும் peposodent கொண்டு பல் துலக்குகிறேன் அவளுக்கு, இப்போழுதே மஞ்சள் பிடிப்பது பொல் உள்ளது. மேலும் அவளுக்கு எந்த மாதிரியான அயர்ன் சட்து மிகுந்த உணவு குடுப்பது, அவள் பால் மட்டும்தான் குடிக்கிராள், காலை எப்பொதாவது இட்லி, தோசை சாப்பிடுவாள், மதியம் சாதம் சாப்பிட மறுக்கிறாள், மிகவும் கவலையாக உள்ளது, எப்படி அவளை உணவு உண்ண வைப்பது, எப்படி பால் பாட்டிலை மறக்கடிப்பது , இதனால் அவளுக்கு இன்பெக்ஷன் அடிக்கடி ஏற்படுகிறது, அவளுக்கு எந்த வகையான கால்சியம், அயர்ன் சத்துமிகுந்த உணவுகளை குடுப்பது, ப்ளீஸ் உதவுங்கள் தோழிகளே...

ஹாய் மீனா...,உங்கள் கவலை நியாயமானதுதான்.
இரும்பு சத்திற்க்கு நாம் சாப்பிடும் உணவிலேயே கொடுக்கலாம்.
கீரையில் இரும்பு சத்து உள்ளது.எனவே அதை பருப்பு கூட்டாக செய்து சாதத்தில் மசித்து ஊட்டிவிடலாம்.அதே போல் பழங்கள் குழந்தைகளுக்கு அவசியம் கொடுங்கள்.வாழைபழம்,கொய்யா,ஆப்பிள் இவையெல்லாம் நல்ல சத்துள்ளவை.இவற்றை சாப்பிட பழக்குங்கள்.
முதலில் குழந்தைகள் சாப்பிட முரண்டுதான் பிடிப்பார்கள்.நாம் கொஞ்சம் சோர்ந்து விடாமல் சிறிது சிறிதாக கொடுத்து பார்க்க வேண்டும்.
சாக்லேட்,சிப்ஸ் சாப்பிடும் குழந்தையாக இருந்தால் அவற்றை எல்லாம் முடிந்தவரை கொடுக்காதீர்கள்.ஏனென்றால் குழந்தைக்கு நல்ல பசிக்கும் தன்மையை ஏற்படுத்தவும்.பசிக்கவிட்டு சாதம் ஊட்டவும்.நம் மனசு கஷ்ட்டபடும் இருப்பினும் கொஞ்சம் எதையும் பகல் நேரத்தில் தராமல் அவளுக்கு பசிக்கும் போது இது போன்ற உணவையோ,பழங்களையோ தரலாம்.ஐந்து மணி நேரம் ஆனாலும் கூட அவளை பசிக்க விட்டே கொடுக்கவும்.அவளுக்கு பழங்களை சாப்பிட ஆர்வம் வர அவற்றை மிக சிறிய பீஸாக கட் செய்து ஒரு பவுலில் போட்டு சின்ன ஃபோர்க்கை கொடுத்து அவளையே சாப்பிட சொல்லி பாருங்கள்.
எல்லாவற்றிற்க்குமே நமக்கு பொறுமைதான் வேண்டும்.

பாட்டில் பழக்கத்தை நிச்சயம் மறக்கடிக்க வேண்டும்.சின்ன டம்ளரிலோ,ஏதாவது பொம்மை படம் போட்ட மாதிரி உள்ள கப்கள் எல்லாம் இப்போது கிடைக்கின்றன அவற்றில் பாலை கொடுக்க பாருங்கள்.வெறும் பாலை விட பாலில் ஹெல்த் ட்ரிங்ஸ் கலந்தே கொடுங்கள்.ஏனெனில் அதிலேயே எல்லா ஊட்ட சத்துக்களும் கலந்திருப்பதால் அதனுடனே கொடுக்கவேண்டும் என்று எனக்கு டாக்டர் சொன்னார்கள்.

பற்களுக்கு நானும் நார்மல் டூத்பேஸ்ட் தான் என் குழந்தைகளுக்கு உபயோகித்தேன்.இப்போது நிறைய குழந்தைகளுக்கான பேஸ்ட் கிடைக்கின்றது அதை உபயோகித்து பாருங்கள்.மற்றபடி இந்த பற்களுக்கான வழி எனக்கு தெரியவில்லை.வேற தோழிகள் வந்து நிச்சயம் அவர்கள் கருத்தை இங்கே பகிர்ந்து கொள்வார்கள்.

என்றூ அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

மிக்க நன்றி தோழி, உங்கள் பதில் எனக்கு கொஞ்சம் மன அமைதியை தருகிறது. பொறுமையுடன் முயற்சித்து பார்க்கிறேன்.. ஹெல்த் ட்ரிங்க்ஸ் என்றால் எந்த மாதிரியான ட்ரிங்க்ஸ் என்று சொல்ல முடியுமா

இரும்புசத்தை பற்றி பிறகு வருகிறேன்..டாக்டர் குறைபாட்டை கண்டுபிடித்தாரா இல்லை பெரியவர்கள் சொன்னதா..பற்களுக்கு டென்டிஸ்ட்டிடம் போய் எதுக்கும் கேட்டு பாருங்க..ஆனால் நிறைய குழந்தைகளுக்கு முதல் பல் இப்படியெல்லாம் வரும் பிறகு ஆறேழுவயதில் விழுந்து முளைக்கையில் சரியாகிடும்

தோழி தளிகா, டாக்டர் தான் சொன்னார் இரும்புசத்து குறைவால் தான் என்று, அதான் என்ன மாதிரியான இரும்புசத்து நிறைந்த உனவு கொடுப்பது என்று கேட்டேன். பற்களின் மஞ்சள் தன்மயை போக்க என்ன செய்வது ப்ளீஸ்ஸ்ஸ்

pls help me friends

இரும்பு சத்து நிறைந்த உணவுகள் : மீன்,ஈரல், கீரை(புளிச்ச கீரை, வெந்தய கீரை) ,உலர் திராட்சை, உலர் ஆப்ரிகாட்,புரோக்கலி,டேட்ஸ்,முட்டை(மஞ்சள் கரு)

இரும்பு சத்தை உடம்பு ஏற்று கொள்ள விட்டமின் C அவசியம். அது குறைந்தால் நாம குடுக்கற Iron வீணாகும். அதனால் ஆரஞ்சு,எலுமிச்சை,சாத்துகுடி,ஸ்ட்ராபெரி, தக்காளி சேர்த்துக்கோங்க.

உங்க குழந்தைக்கு எத்தனை முறை பால் குடுக்கறீங்க? ஏன்னா பால் அதிகமா குடிச்சா சரியா பசிக்காது. 2 வயதுக்கு மேல 2 கப் பால் போதும்.தயிர், சீஸ்,பட்டர் இதெல்லாம் குடுக்கனும்.அப்ப தான் தேவையான புரோட்டின் கிடைக்கும். பசும்பாலில் இரும்பு சத்து குறைவு தான்.

முட்டை சாப்பிடற குழந்தையா இருந்தா தினமும் வேக வைத்த முட்டை 1 குடுங்க. பிடிக்காதுனா குறைந்தது வாரத்தில 3 - 4 முட்டை குடுங்க.

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

hi friend
pappa ku iron strength irukara fruit dates. dates soak pani milk vitu grind pani filter panitu antha milk kudunga athu sweeta irukum, appadiye athukuda dry grapes grind pani filter pani kudunga, pappa nalla kudipa, pasi yedukum nalla sapiduva, try pannuga. ye baby ku 2yrs aguthu na ippadi than kudukaren.

மாற்றம் ஒன்றே மாறாதது....
வாழ்க வளமுடன்.....

hi friend
reply panala, try pani parthingala. pappa yepadi sapidura.

மாற்றம் ஒன்றே மாறாதது....
வாழ்க வளமுடன்.....

சாரிப்பா கொஞ்சம் பிசி அதான், அவள் இனிப்பு சாப்பிடமாட்டிக்கிறாள். அவளுக்கு பாதாம் பால் குடுக்கலாமா, எப்படி பாதாம் பால் செய்துகுடுப்பது. சொல்லுங்கள் plsss

ye friend sorry solringa, athu yellam venam, badam milk pathi yanaku theriyathu pa. ava nonveg sapidara mathiri iruntha mutton kudunga, mutton blood nalla rich iron irukum. na ye pappa ku kuduthu iruken. try pani parunga. athu namba poriyal pantra mathiri pannaum. neenga nonveg, veg pa.
nonveg ituntha kuduthu parunga.

மாற்றம் ஒன்றே மாறாதது....
வாழ்க வளமுடன்.....

மேலும் சில பதிவுகள்