தோழிகளே உதவுங்கள் பிறந்த கொழந்தைக்கு சளி இருமல் pls urgent pls

உங்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான் எனக்கு இப்பொழுதுதான் ஒரு பெண் கொழந்தை
பிறந்தது.அவளுக்கு இப்போ 1 1/2 மாதம் ஆனால் 2 நாட்களாக சளி இருமல் பெரியவங்க மாதிரி
இருமுரா ரொம்பா கஷ்டப்பட்ரா.பால் குடிக்க முடியல அவ்லோ சளீ மருந்து குடுத்தும் கொறையல
உங்களுக்கு தெரிந்த கைவைத்தியம் இருந்தா சொல்லுங்க அவ பாக்கவே கஷ்டமா இருக்கு pls pls

உங்களுக்கு சளி இருந்தா முதலில் அதை குணபடுத்துங்க, என்னா உங்களுக்கு சளி இருந்தா குழந்தைக்கும் சளிபிடிக்க வாய்ப்பு அதிகம். பெரியவங்க சும்மாவா சொன்னாங்க வாயகட்டி, வயித்தகட்டி பெத்தோம்னு. நீங்க எதசாப்பிட்டாலும் கொஞ்சம் சுடா சாப்பிடுங்க.தண்ணிரில் ரொம்ப நேரம் கை வைக்காதீங்க.
குழந்தைக்கு தேங்காய் எண்ணை சுடுபன்னி, சிறிது கற்பூரம் போட்டு , மார்பு, அக்குல், என்று அடிக்கடி தடவவும். நீங்களும் தடவிக்கலாம், நெற்றி,காது பின்புறம், கழுத்து பின்புறம், தடவிக்கவும்.
நானும் இதேபோல் அவஸ்தைபட்டிருகேன், எனக்கு சொன்னதை உங்களுக்கு சொல்கிறேன்.

தண்ணிரில் அதிகநேரம் நிற்கவேண்டாம்.கவலை படாதீங்க, சீக்கிரம் சரியாயிடும்.

எதிர்பார்த்தால்தானே எமாற்றம்

நீங்க கொஞ்சம் தேங்காய் எண்ணெயில் சின்ன வெங்காயம், சிறிது மஞ்சள் தூள் சேர்த்து சூடாக்கி கொஞ்சம் இளம்சூட்டில் பாப்பாவின் நெஞ்சில்,முதுகு பக்கத்தில் தடவி விடுங்க. என் குழந்தைக்கு என் பாட்டி இப்படிதான் செய்தாங்க. கவலை வேண்டாம். பாப்பாவுக்கு சீக்கிரம் சரியாகிவிடும்

அன்புடன்
மகேஸ்வரி

சின்ன கொழந்தை குரது நால docter யை பாருக அது தான் நால்லது

உங்களிடம் cologne இருந்தால் அதில் டால்கம் பவுடர் மிக்ஸ் செய்து குழந்தையின் மார்பு, விலா பகுதிகளில் தேய்த்து விட்டு விடுங்கள் தொடர்ந்து 3 நாட்கள் இதே போல் செய்து பாருங்கள் கண்டிப்பாக சளி குறையும் இரவு தூங்கியதும் வெத்தலையில் சிறிது விக்ஸ் தடவி மெழுகுவர்த்தியில் லைட்டாக சூடு பண்ணி(குழந்தை தாங்கும் சூடு)மார்பு, இரண்டு விலா பகுதி, முதுகு பகுதியில் ஒட்டி விடுங்கள் சளி ஓரளவாவது குறையும்.சிறிது தண்ணீரில் வெத்தலை, துளசி, பூண்டு கொதிக்க விட்டு சுண்ட காய்ச்சி அரை பாலாடை அளவு சுண்டியதும் ஆற விட்டு, விருப்பபட்டால் கொஞ்சம் சர்க்கரை சேர்த்து குழந்தைக்கு கொடுங்கள்.

இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம். இழந்த காலத்தையோ, ஒருபோதும் பிடிக்க முடியாது

குழந்தைகளுக்கு சிறு வயதில் சளி பிடிப்பது மிகவும் சாதாரணம். அதுவும் அவளுக்கு சின்ன அக்கா இருக்கிறாள் அவளிடமிருந்து கூட வந்திருக்கலாம். சரி விஷயத்திற்கு வரேன்....குழந்தைக்கு பால் புகட்டும் முன் சிறிது பாலை அவளின் மூக்கில் பீச்சி விடுங்கள். சிறிதளவு பால் எடுத்து அவளின் மூக்கின் மேல் தடவுங்கள். இப்படி செய்த பின்னர் பால் கொடுங்கள்....குடிப்பாள். தாய்பாலில் எல்லாமே உள்ளது....இது நான் செய்து பலன் தந்த முறை.
ஒரு சிட்டிகை கற்பூரம் எடுத்து ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணையில் குழைத்து நல்ல எண்ணெய் விளக்கில் லேசாக சூடாக்கி குழந்தையின் முதுகில் நெஞ்சில் தடவுங்கள்.

ஒரு நாள் விட்டு ஒரு நாள் அரை மிளகு ஒரு சீரகம் ஒரு துளசி இலை அரை கற்பூர வள்ளி இலை எல்லாவற்றின் சாறு பிழிந்து தாய் பாலுடன் சேர்த்து புகட்டுங்கள்.

வீட்டில் humidfier இருந்தால் அதில் இரண்டு சொட்டு விக்ஸ் சேர்த்து ஆன் செய்து பாருங்கள். இல்லையேல் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்கவிட்டு அதில் இரண்டு சொட்டு விக்ஸ் அல்லது யுகலிப்டஸ் தைலம் சேர்த்து குழந்தை இருக்கும் அறையில் வையுங்கள்.

எதற்கும் நீங்கள் குழந்தை நல மருத்துவரையும் ஆலோசித்து பாருங்கள்.

உங்கள் முதல் குழந்தையின் வயற்று போக்கு எப்படி இருக்கு???

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

மேலும் சில பதிவுகள்