வெப்ப கட்டி

ஹாய் தோழிகளே எப்படி இருக்கீங்க ?
நான் நல்லா இல்லை .
எனக்கு உக்காரும் இடத்தில் வெப்ப கட்டி . ஏதாவது வீட்டு வைத்தியம் சொல்லுங்க . ப்ளீஸ்

ஹாய்மா? நலமா?கவலைபடாதீர்கள்ப்பா.நிறைய தண்ணீர் குடியுங்கள். குளிர்ச்சி மிகுந்த உணவுகளை எடுத்து கொள்ளவும் (பால் கஞ்சி,இள்நீர்,பழரசம்,முதலியன)நாமக்கட்டி என நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் வாங்கி அரைத்து போட்டுக்கொள்ளுங்கள்.மஞ்சள்,வேப்பில்லை அரைத்து போட்டுக்கொள்ளுங்கள்

தேங்க்ஸ் ப்பா
நீங்க சொல்லறபடி செய்யறேன் ரொம்ப வலி தாங்கமுடியல அதான்

ராதிகா
கடுகு அரைச்சு அம்மா போட சொன்னங்க. ஒண்ணு உடையும். இல்லேன்னா அமுங்கி விடுமாம். ட்ரை பண்ணி பாருங்க.
சீக்கிரம் சரி ஆயிடும். கவலை படாதீங்க.

எதிர்பார்ப்புகள் குறைவாக இருந்தால் ஏமாற்றம் குறைவாக இருக்கும்.

என்றும் அன்புடன்
கிருத்திகா

ராதிகா எங்க வீட்டுல யாருக்கு இப்படி வந்தாலும் துவைக்கிற சோப்பும் ,மஞ்சள் கிழங்கில் அரைத்த மஞ்சளும் சேர்த்தால் சிகப்பு கலரில் வரும்.அதைதான் அந்த இடத்தில் பூசுவோம் அதை செய்தல் குளிர்ச்சியாக இருக்கும் சீக்கிரம் உடைந்து விடும்.உடைததுகு அப்புறம் மஞ்சள் கிழங்கை மட்டும் அரைத்து போட்டால் போதும் சீக்கிரம் ஆறி விடும் .கவலை வேண்டாம். குணமாகியதும் சொல்லுங்கள் .

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

ஹாய் தோழிகளே
உங்க ஆலோசனைக்கு நன்றி நாமகட்டி வைத்து பார்த்தேன் வலி குறைந்தது, மஞ்சள் வைத்தேன் கொஞ்சம் எரிசேல் இருந்தது. இங்கு (ஹைதராபாத் ) மல்லம்பட்டி அதாவது கட்டிக்கு போடுற band-aid கிடைகிறது அதை போட்டேன் கட்டி உடைந்து இப்பபரவைல்லை
regards
radhika

ரெடிமேட் மஞ்சளை வைத்தால் எரியும்.மஞ்சள் கிழங்கை அரைத்து பூசினால்.குளுமையாக இருக்கும் .என்க்கு ஸ்கூட்டி ஓட்டி பழகும் போது மிக பெரிய ஆக்சிடன்ட் ஆகி முகமே தோல் சீரைத்து பார்க்கவே கர்ண கொடுரமாக இருந்தது .அதற்க்கு பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணனும்னு சொன்னாங்க.அதற்குள் அம்மாவே இந்த மஞ்சளைத்தான் அரைத்து பூசி விட்டாங்க .வேறு எதுவும் செய்யவில்லை .20 நாள்களில் தோலின் நிறம் மாறி 30 நாளில் பழைய முகம் வந்ததில் அனைவருக்குமே ஆச்சிரியமான உண்மை.எங்கள் டாக்டரே வியந்து விட்டார் .அதிலிருந்து எதற்குமே மஞ்சள்தான் உபயோக படுத்துவேன்.மஞ்சளின் மகிமையை உணர்ந்தவள் நான் தோழியே

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

மேலும் சில பதிவுகள்