பாலக் சப்பாத்தி

தேதி: December 8, 2010

பரிமாறும் அளவு: 3

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

கோதுமை மாவு - 2 கப்

பாலக் கீரை - 1 கட்டு

சின்ன வெங்காயம் - 5

தக்காளி - 1

பச்சை மிளகாய் - 2

பூண்டு - 3 பல்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு


 

கீரை வெங்காயம் தக்காளி பூண்டு பச்சை மிளகாயை வேகவைத்து தண்ணீர் இல்லாமல் உப்பு சேர்த்து அரைத்து வைக்கவும்.

அந்த தண்ணீரில் ரசம் வைக்கலாம்.

அரைத்த விழுதை கோதுமை மாவுடன் பிசைந்து சப்பாத்தியாக செய்யவும்.


இதற்க்கு தொட்டு கொள்ள எதுவுமே தேவை இல்லை. அப்படியே சாப்பிடலாம். கீரை சாப்பிட மறுக்கும் குழந்தையும் இந்த கலரான சப்பாத்தியை வாங்கி சாப்பிடும். எல்லா வகை கீரையும் இப்படி செய்யலாம். இந்த கீரையில் அதிக அளவு இரும்பு சத்துள்ளது.

மேலும் சில குறிப்புகள்


Comments

இந்த சப்பாத்தி வித்யாசமான சுவையில் மிகவும் நன்றாக வந்தது.

செய்து பார்த்து உடனடியாக பின்னூட்டம் தந்ததற்கு மிக்க நன்றி.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

super sappathi