3 year speech problem

என் மகனுக்கு 3வயது3மாதம் ஆகிறது அவன் இன்னும் சரியாக பேசவில்லை நான் சொல்லும் வார்த்தைகளை சொல்கிறான் ஆனால் sentenceபேசமாட்டிகிறான் அது போல் வார்த்தைகளும் சில தெளிவாக இல்லை என்க்கு மிகவும் கவலையாக உள்ளது அவன் பேச நான் என்ன செய்ய வேண்டும்?

கவலை வேண்டாம் .பொதுவாகவே ஆண் பிள்ளைகளுக்கு சற்று தாமதமாகத்தான் பேச வரும். பள்ளிக்கு சென்றவுடன் சரியாகி விடும் . நீங்கள் அவனுடன் பேசும் போது மழலை கலக்காது தெளிவாக பேசுங்கள் நாளடைவில் ஈஸிஆக சரி பண்ணி விடலாம். என் மகன் கூட இப்படித்தான் இப்போது நன்கு பேசுகிறான்.

ராஜி நீங்க பையனோட பேசிகிட்டே இருங்க. இப்போ நிறைய rhymes cd வருது அதை daily 1or 2 times போட்டு விடுங்க. கொஞ்ச நாள்ல நல்லா பேசிடுவான். dont worry.வெளியே பசங்களோட நிறைய விளையாட விடுங்க சரியாயிடும்.

ஹாய் ஸ்ரீசுபா நலமா ?
தங்களின் பதிலுக்கு மிக்க நன்றி அவன் இங்கு 1 மாதமாக பள்ளிக்கு செல்கிறான் முன்பை விட இப்போது கொஞ்சம் பரவாயில்லை தங்களின் பதில் என்க்கு கொஞ்சம் ஆறுதலாக உள்ளது நன்றி

ஹாய் anjutvl நலமா?
தங்களின் பதிலுக்கு மிக்க நன்றி
அவனுக்கு நீங்கள் சொல்வது போல் செய்து பார்கிறேன் அவனுக்கு இங்கு விளையாட ஆட்க்ள் இல்லை so sometimes he feel very bore

மற்ற தோழிகளும் எனக்கு உதவவும்

ராஜி,
நீங்கள் சொல்லும் அதே பிரச்சனை தான் என் மகனுக்கும்.அவனுக்கும் 3yr+2m ஆகிறது.சில மாதங்கள் முன்பு இந்தியா சென்றிருந்தபோது அவனுக்கு உடல்நிலை சரியில்லாததால் டாக்டரிடம் காண்பித்தோம்.அப்போது அவன் சரியாக பேசாததையும் சொன்னோம்.அவனை டெஸ்ட் செய்ததில் அவனுக்கு tongue tie இருப்பதாக சொன்னார்.மறுநாளே ஆஸி.திரும்புவதால் இங்கே பார்த்துக்கொள்ளலாமென்று வந்துவிட்டோம்.இங்கே அவனுக்கு hearing test செய்தார்கள்.அதிலே அவ்னுக்கு காதில் வாக்ஸ் இருப்பதாக சொன்னார்கள்.2 மாதங்கள் அதற்கு ear drops விட்டு அதனை நீக்கிவிட்டு திரும்பவும் டெஸ்ட் செய்ததில் அவனுக்கு ear infection இருப்பது தெரியவந்தது.அவன் காதிலுள்ள ear drum ல் காற்றுக்கு பதில் நீர் இருப்பதாகவும் அதனால் அவனுக்கு mild hearing loss உள்ளதாகவும் அதனாலேயே அவன் நாம் பேசுவதை சரிவர புரிந்துகொள்ள முடியாமல் பேச்சுவர தாமதமாகிறது என்று சொன்னார்கள்.அதற்கு அவனுக்கு சர்ஜரி செய்யவேண்டும்.அவன் காதில் grammites பொருத்தி நீரை இறுக செய்யவேண்டுமாம்.Tongue tie க்கும் சேர்த்து ஜனவரியில் செய்யப்போகிறோம்.
பொதுவாகவே ஆண்பிள்ளைகளுக்கு தாமதமாக பேச்சு வரும் என்பார்கள்.ஆனால் எதற்கும் உங்கள் மகனை டெஸ்ட் செய்வதில் தப்பில்லையே.என் மகனும் இன்னும் வாக்கியமாக பேசுவதில்லை.இரு வார்த்தைகளை சேர்த்து பேசுவதற்கு மிகவும் கஷ்டப்படுகிறான்.
தாமதம் செய்யாதீகள் ராஜி.இது காது சம்பந்தப்பட்டதாகவும் இருக்கலாம்.என் அனுபவத்தில் சொல்கிறேன்.
அன்புடன் அனு

டியர் அனுஷாராஜு நலமா?
தங்களின் பதிலுக்கு நன்றி நீங்கள் சொன்ன பிறகுதான் எனக்கும் அந்த யோசனை வருகிறது இவனுடைய டாக்டர் 21/2 வயதில் test செய்ய
சொன்னர்கள் நாங்கள்தான் அலட்சியம் செய்துவிட்டோம் இனி அவனுக்கும் test செய்ய வேண்டியதுதான் எனக்கு மிகவும் கவலையாக உள்ளது

ராஜி... குழந்தைகள் தாமதமாக பேசுவது வழக்கம் தான் ஆனால் அதிகபட்சம் 2 1/2 வயது வரை பார்க்கலாம். அப்படி பேசாதபட்சத்தில் நிச்சயம் டாக்டரை காண வேண்டும். காதும், நாக்கும், உதட்டு அசைவையும் சரி பார்ப்பார்கள். அவை சரியாக இருந்தும் பேசவில்லை என்றால் கவலை தேவை இல்லை, நாம் முழுசாக முயற்சி செய்தால் வந்துவிடும். ஆனால் பிரெச்சனை ஏதும் இருந்தால் அதுக்கான சரியான மருத்துவம் வேண்டுமே. அது தாமதமாக கூடாது. முதலில் மருத்துவரை பாருங்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் வனிதா நலமா?
தங்க்ளின் பதிலுக்கு மிக்க நன்றி 3 நாட்களாக எனக்கு உடல்நிலை சரியில்லை அதனால்தான் உடனடி பதில் போட முடியவில்லை நான் என் மகனை கண்டிப்பாக டாக்டரிடம் காட்டுகிறேன் நன்றி

pallikodam pona sikiram seri ayidum

en maganaku 1 vayathu 2 matham agirathu. avan tv pathu kondu than sapiduvan. en kanavar ennai thitrar. anal avan sapidum pothu matum tv parpan. tv advertisement matum than. matha neram avan vilayadi kondae irupan. avanaku pesa soli kodakalam nu kopital vara matan. vilayatu matum than interest. enaku enna seiyuvathu endru theriyala. please help me.. please please please

மேலும் சில பதிவுகள்