பாடல்களை டவுன்லோட் செய்வது எப்படி..

வீடியோ பாடல்களை செல்போனுக்கு எப்படி டவுன்லோட் செய்வது? இதற்கு என்ன சாப்ட்வேர் use பண்ண வேண்டும் ?

எனக்கும் தெரியாதுபா. இந்த கேள்வி எனக்கும் உபயோகமா இருக்கும் நிச்சயமா உங்க மூலமா நானும் பதில் தெரிஞ்சுக்கிறேன். எனக்கு சில விஷயம் சுகன் சொல்லி கொடுத்து இருக்காங்க அவங்களுக்கு தெரிஞ்சிருக்கும் இருங்க அவங்களே கூப்பிடுவோம். அதற்காக சுகந்தி தான் பதில் சொல்லனும்னு இல்ல யார் வேண்டுமானாலும் பதில் சொல்லலாம்.

செல் போனில் இருக்கும் மெமரிகார்டை கம்யூட்டரில் கார்டு ரீடர் மூலம் இணைத்து ஆடியோ அல்லது வீடியோக்களை மெமரி கார்டில் இறக்கி கொள்ளலாமே.

அன்புடன்
THAVAM

தவமணி அண்ணா நலமா அண்ணி, பாரதி, கார்த்திலாம் எப்படி இருக்காங்க? அது இல்ல அண்ணா சாதாரண ஆடியோ பாடல்கள்னா சரி அண்ணா அப்படி தான் இப்போ ஏற்றிக் கொண்டிருக்கிறேன். இதுவே வீடியோ பாடலக இருந்தால் என்ன செய்வது. அதுவும் அதுப்போல தானா. அண்ணா முதலில் வீடியோ பாடல்களை எப்படி டவுன்லோட் செய்வது என்றே எனக்கு தெரியாதே. நான் கொஞ்சம் மக்கு அண்ணா

எல்லோரும் நல்லா இருக்கோம்மா, நானும் கூட யாழை போல மக்குதான். வீடியோ பாடல்கள் இயங்க சப்போர்ட்டிங் பைல் வேனும்னு நினைக்கிறேன். நானும் கூட வீடியோ பாடல்களை மெமரி கார்டில் ஏற்றியதில்லை.

அன்புடன்
THAVAM

தவமணி அண்ணா நீங்க சொன்ன மாதிரி நான் முயற்சி பண்ணி இருக்கேன் ஆனால் கார்ட் ரீடர் வழியா இல்லை டேட்டா கேபிள் வழியா அப்படி பண்ணால் வீடியோ வர மாட்டுது வெறும் பாட்டு தான் வருது...தெரிஞ்சவங்க யாராவது சொன்னா உபயோகமா இருக்கும்

இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம். இழந்த காலத்தையோ, ஒருபோதும் பிடிக்க முடியாது

Hai, How are you. ‍நீ்ங்க எந்த மொபைல் யூஸ் பண்றீங்க. Samsung mobile ஆக ,இருந்தால் samsung pc studio என்கிற சாப்ட்வேர் யூஷ் பண்ணி USB cable மூலமாக ஏற்றலாம். என்ன மொபைல் யூஸ் பண்றீங்க என்று சொல்லுங்கள்.

வீடியோ சாங்கை சிஸ்டமில் 3gp file ஆக மாற்றி மொபைலுக்கு மாற்றுங்க. ஒரு வீடியோவை 3gpக்கு மாற்ற TOTAL VIDEO CONVERTER போன்ற softwareஐ இன்ஸ்டால் செய்து அதில் போய் அந்த வீடியோ மாற்றிட்டு அப்புறம் send பண்ணுங்க வீடியோ சாங்க் மொபைலில் பார்க்கலாம்:))

அன்புடன்
பவித்ரா

1.www.http://masti4mobiles.com/videos/3GP_Videos/Tamil_Video_songs/

2.http://www.oruwebsite.com/tamil-3gp-mobile-videos-download.html

3.http://www.themusicalharris.com/tamilmobile/songs_3gp.htm

4.http://tamilmobileworld.blogspot.com/.இதில் 3gp வீடியோ சாங்க்ஸ் இருக்கு.டைரக்டா சிஸ்டம்க்கு ட்வுன்லோட் பன்னி செல்லுக்கு மாற்றிக்கொள்ளவும்

அன்புடன்,
விஜயகுமார்.

உண்மையான அன்புக்கு ஏமாற்ற தெரியாது,ஏமாற மட்டுமே தெரியும்.

தோழிகளே... நான் மைக்ரோ மேக்ஸ் எக்ஸ் 600 மொபைல் யூஸ் பண்ணுகிறேன்.... அதற்கான் பி.சி. ஸ்யூட் நெட்டில் தேடிப்பார்த்தேன் கிடைக்கவில்லை... ஒரு இடத்தில் இருந்தது ஆனால் அதை டவுன்லோட் செய்தால் எரர் என வருகிறது...

எனவே யாருக்காவது மைக்ரோமேக்ஸ் எக்ஸ் 600 மொபைலுக்கான பி.சி.ஸ்யூட் டவுன்லோடு செய்யும் லின்க் தெரிந்தால் கூறவும்.... அல்லது யாராவது அதற்கான ஸாப்ட்வேர் வைத்திருந்தால் எனக்கு தெரிவிக்கவும்.....

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

தோழிகளே நான் மைக்ரோ மேக்ஸ் பற்றி தகவல் கேட்டிருந்தேன்... இப்பதிவு யார் கண்ணிலும் படவில்லை என நினைக்கிறேன்... தயவு செய்து எனக்கு கூறுங்கள். இந்த இழையை மேலே கொண்டுவர இப்பதிவிட்டேன்... இதற்கு முன் பதிவில் எனது கேள்வியை கேட்டிருக்கிறேன்....

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

மேலும் சில பதிவுகள்