வயிறு புண்

Anbu friends,

vyiru punnaga ulladhu.. ennum 3 naalil veliyuur payanam poga vendum... elidhil gunamaga enna seiyavendum.. tholigal thayavu seidhu help me.. ungal vendudhal enkku vendum..

காரம் இல்லாத உணவாக சாப்பிடுங்க ரியா. அதோடு காலையில் சூடான இட்லியில் நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிடுங்க. 2 அல்லது 3 நாட்களில் சரியாகும். தயிர் சாதம், இடியாப்பம், பால், பால்சாதம் இதைப் போலவே சாப்பிடுங்க. அப்பறம் காலையில் எழுந்ததும் ப்ரஷ் செய்து முடித்தடனே சிறிது வெந்தயம் சாப்பிடுங்க. நீங்கள் இப்போ இருக்கும் இடத்தில் மணத்ததக்காளி இலை கிடைத்தால் காலையில் வெறும் வயிற்றில் இலைகளை கழுவி சுத்தம் செய்து சாப்பிடுங்க. அல்லது தண்ணி சாறு வைத்து சாப்பிடுங்க. சீக்கிரம் சரியாகிடும் கவலை வேண்டாம் நல்லபடியா ஊருக்கு போய்ட்டு வாங்க.

வயிறு புண்ணாக இருப்பது உங்களுக்கு எப்படி தெரிந்தது?சுக்குட்டி கீரை தினமும் செய்து சாதத்தில் பிசைந்து சாப்பிடுங்க..தயிர் மோர் மட்டும் சேத்துக்குங்க ..சரியாகிடும்..இளநீர் வாங்கி குடிங்க.நேரத்துக்கு சரியா சாப்பிடனும்

சுக்குட்டி கீரை எப்படி இருக்கும். நான் இதுவரை இந்த கீரைப்பற்றி கேள்விப்பட்டது இல்லை. அதை பற்றி சொல்ல முடியுமா.

ஹ்ம்ம் அதில் குட்டி குட்டி சுக்குட்டிக் காய்கள் இருக்கும்..மிளகு சைசில் இருக்கும்..பழுத்தால் இனிப்பாக இருக்கும்...இலைகள் கீரைக்கு பயன்படுத்துவார்கள்..வயிற்றுப் புண் உள்ளவர்களுக்கு நல்லது என்பார்கள்.உங்க ஊரில் கீரை விற்பவரிடம் கேட்கலாம்.இதனை வீடுகளில் நட்டு வைத்தால் நல்லது

நீங்கள் சொல்வது மிளகு தக்காளி கீரை அல்லது மணதக்காளி கீரை என்றே கூறுவார்கள்

வயிற்றுப் புண், வாய் புண்ணு சொன்னாலே இந்த மணத்தக்காளிக்கீரையை தான் முதலில் எல்லோரும் சொல்லுவார்கள். அந்த கீரையோட காய் அப்படித்தான் இருக்கும். சுக்குட்டிக் கீரை என்று எந்த ஊர்ல இப்படி அழைப்பார்கள்.

migavum nandri tholigale. vayiru erigiradhu... adhanal thaan vayiru punn endru kandupdithen.. carrot juice saapidalama?

தோழியே, பச்சை வாழைப்பழம்,வெள்ளரிக்காய்,இளநீர்,மணதக்காளி கீரை,தேங்காய் பால் நிறைய சாப்பிடுங்கள். வயிற்று புண் குணமாகும்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மனத்தக்காளி கீரையின் காய்களை நன்கு பழுக்க விட்டு அதை வெயிலில் காய வைத்து அதை போட்டு குழம்பு வைத்தும் சாபிடலாம் .கடையில் இந்த காய் வத்தலும் கிடைக்கும் .இது உடனடியாக வயிற்று புன்னை ஆற்றும்

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

migavum thanks friends..

மேலும் சில பதிவுகள்