******* அர்த்தமுள்ள அரட்டை - 82 *******

தோழிகளே ! அரட்டையோடு கூடிய அவரவர்க்கு தெரிந்த பயனுள்ள அனைத்து தகவல்களையும்,செய்திகளையும்,அனுபவங்களையும் இங்கே பகிர்ந்து கொள்ளலாம். வாங்க :)

கோழிகளே, எல்லாரும் இங்கே வந்து எங்களுக்கு, மத்தவங்களுக்கும் தெரியாத, உங்களுக்கு தெரிந்த செய்திகளை ஷேர் பண்ணிக்கோங்கோ.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

தோழிகளே அனவரும் அர்த்தமுள்ள அரட்டைக்கு வாங்க>>>>>>>> நீங்க கூப்ப்டதும் நான் வந்துட்டேன் கல்ப்ஸ்

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

என்னப்பா சொல்லாம கொல்லாம வந்துடீங்களே .நான் அங்க தேடிக்கிட்டு இருக்கேன்

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

ரெடிமேட் மஞ்சளை வைத்தால் எரியும்.மஞ்சள் கிழங்கை அரைத்து பூசினால்.குளுமையாக இருக்கும் .என்க்கு ஸ்கூட்டி ஓட்டி பழகும் போது மிக பெரிய ஆக்சிடன்ட் ஆகி முகமே தோல் சீரைத்து பார்க்கவே கர்ண கொடுரமாக இருந்தது .அதற்க்கு பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணனும்னு சொன்னாங்க.அதற்குள் அம்மாவே இந்த மஞ்சளைத்தான் அரைத்து பூசி விட்டாங்க .வேறு எதுவும் செய்யவில்லை .20 நாள்களில் தோலின் நிறம் மாறி 30 நாளில் பழைய முகம் வந்ததில் அனைவருக்குமே ஆச்சிரியமான உண்மை.எங்கள் டாக்டரே வியந்து விட்டார் .அதிலிருந்து எதற்குமே மஞ்சள்தான் உபயோக படுத்துவேன்.மஞ்சளின் மகிமையை உணர்ந்தவள் நான் தோழியே

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

ஆமா கல்ப்ஸ் தோழிகளா இல்ல கோழிகளா விளக்கவும் pls

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

ஹாய் கல்ப்ஸ்... வந்துட்டேன்.... பொதுவாக காலை உணவு டயட் அது இது என்று காசு கொடுத்து வாங்கி சாப்பிடுவார்கள்.. ஆனால் அதை விடுத்து நம் இயற்கை உணவுகளையே உண்டால் உடம்பும் ஒல்லியாக, ஆரோக்யமாக, நோய் நொடி இல்லாமல் இருக்கும்... நான் காலை சாப்பிடும் உணவு என்னவென்றால்...

ஏதாவது ஒரு பயிறு வகை ( கொ.கடலை, காராமணி, மொச்சை) போன்றவை.... முளை கட்டியதாக இருந்தால் நல்லது.... முதல் நாள் இரவே வெந்நீரில் ஊறவைத்துவிட வேண்டும்... மறுநாள் காலையில் அதை தண்ணீர் இருத்திவிட்டு அதில் வெல்லத்தை துருவி போட்டு பச்சையாக சாப்பிடுங்கள்... ஒரே வாரத்தில் உங்களுக்கு மாற்றம் தெரியும்.... மதிய உணவு சீக்கிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும்....

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

முளை கட்டின பயறுகளை சாப்பிட்டால் மிகவும் நல்லது.ஆனால் அதை எப்படி பண்ணுவது

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

அஸ்வதா, தோழிகள் மேல பாசம் அதிகமாகிட்டதால செல்லமா கோழிகள்னு கூப்பிடுவேன். இங்கே யாரும் அப்படி கூப்டதில்ல.நான் மட்டும் தான் கூப்பிடுவேன். அதனால கோழிங்கன்னு கூப்டாவே நாந்தான் கூப்பிடறேன்னு எல்லார்க்கும் நல்லா தெரியும் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

அஸ்வதா மஞ்சள் கிழங்குலே இரண்டு, மூனு வகை இருக்கே. எந்த வகை மஞ்சள் பயன்படுத்தினீங்க.

ரங்கா பச்சையா சாப்பிடனுமா ரொம்ப கஷ்டமாச்சே. அரை வேக்காடா வேகவைச்சு சாப்பிடலாமா. நானும் வெயிட்ட குறைக்கனும் ட்ரை பண்ணிக்கிட்டு இருக்கேன். ஆசைக்கு ஒரு கிலோ கூட குறைய மாட்டுது. நிறுத்துனா மாதிரி ஒவர் வெயிட்டாவே இருக்கு:-)

கல்ப்ஸ் நீங்கள் சொன்னது போல் கஷாயம் கொடுக்கலாம்... ஆனால் அதை குழந்தைகள் விரும்பமாட்டார்கள் எனவே தான் இதை கூறினேன்.. அங்கே கற்பூரம் கிடைக்காதா? பனைவெல்லம் கிடைக்குமா? கிடைக்குமென்றால் அதிலும் ஒரு வைத்தியம் இருக்கிறதுபா.... சொல்கிறேன்..

ஸ்ரீசுபா... தக்க சமயத்தில் சொன்னீர்கள்..... என் மகளுக்கும் நாளையிலிருந்து அரையாண்டுத் தேர்வுகள்பா.... உங்களின் ப்ரார்த்தனைக்கும் தக்க சமயத்தில் கூறியதற்கும் நன்றி...

அரையாண்டு தேர்வு எழுதவிருக்கும் அனைத்து குட்டீஸ்கும் வாழ்த்துக்கள்... அனைவ்ரும் நன்றாக எழுத இறைவனை ப்ராத்திக்கிறேன்.

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

மேலும் சில பதிவுகள்