Microwave oven

எங்க வீட்டில் samsung microwave oven இருக்கு..இப்ப கேக் பண்றதுக்கு 325degree nu இருக்கு..எங்க வீட்ல உள்ள microwave oven ல 600w ,450w,300w,150w இப்படி தான் வைக்க முடியிது...அதனால் 325degree எப்படி வைக்க வேண்டும்... தோழிகள் யாருக்காவது தெரிந்தல் செல்லுங்க.....

டிகிரிக் கணக்கு மைக்ரோவேவுக்கு இல்லை. இதற்கான குறிப்பில் 'ஹை', இத்தனை நிமிஷம் என்பது போல தான் எழுதி இருப்பார்கள். கூடவே 'ஸ்டாண்டிங் டைம்' இருக்கும்.

நீங்கள் மைக்ரோவேவுக்கான குறிப்பு ஒன்றை மற்றதில் சமைத்தாலோ, சாதாரண அவண் குறிப்பை மைக்ரோவேவில் சமைத்தாலோ சரிவராது. மாற்றங்கள் செய்யவேண்டியது இருக்கும்.

ஹாய் லக்‌ஷ்மி..,நீங்கள் மைக்ரோவேவ் என்றே குறிப்பிட்டு உள்ளீர்கள்.
அதில் நிறைய உள்ளது.நார்மலாக சமைக்க,சூடு படுத்த மட்டுமே பயன்படுத்துவதற்க்கான மைக்ரோவேவ் உள்ளது.சில மைக்ரோவேவில் க்ரில் மோட் எக்ஸ்ட்ராவாக ஆட் ஆகியிருக்கும்.
சில மைக்ரோவேவில் க்ரில் மற்றும் கன்வென்ஷன் பேக் என்ற ஆப்ஷன் செர்ந்து இருக்கும்.
இதில் நான் கடைசியாக சொன்ன மாடலாக இருந்தால் மட்டுமே கேக்,பிஸ்கட் வகைகள் செய்ய முடியும்.
வெறும் மைக்ரோவேவ் (முதலில் சொன்னது) என்றால் அதில் முட்டையில்லாத லேசான கேக் வகையைதான் செய்யலாம்.அதன் குறிப்புகள் கூட நம் அருசுவையிலேயே உள்ளது.
நீங்கள் சொல்லியிருக்கும் அளவு வெறும் மைக்ரோவேவ் power high,mid-high,low,mid-low...இவைதான்.இதில் சாதம்,குழம்பு,நூடுல்ஸ் வகைகள்,காய்களை வேக வைத்தல்,சமைத்து ஆறியவைகளை சூடுபடுத்துதல் இவைகளைதான் செய்ய முடியும்.
இந்த விளக்கம் உங்களுக்கு போதுமானதாக இருக்கும் என்றே நினைகிறேன்.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

என்னுடைய மைக்ரோவேவ் அவனில் grill option இருக்கு..conventional mode இல்லை...இப்ப கேக் செய்யும் போது 300F முற்சுடு செய்யனும்...இதை எப்படி செட் பண்ணணும் என்று தெரியலை.. powerlevel option click பண்ணினால் 750w,600w இப்படி தான் வருது..

இன்று உன்னால் கூடிய மட்டும் நன்றாக செய்...
நாளை அதனினும் நன்றாக செய்யும் ஆற்றலை நீ பெற கூடும்.

அப்ப உங்க மைக்ரோவேவில் க்ரில் ஐட்டம் மட்டுமே செய்ய முடியும்.கேக் வகைகள் செய்ய வராது பா....
http://www.arusuvai.com/tamil/node/11407
http://www.arusuvai.com/tamil/node/5437
இப்போது நான் கொடுத்திருக்கும் லின்க்கில் பாருங்கள்.இந்த குறிப்புகளை தான் நீங்கள் உங்கள் மைக்ரோவேவில் செய்யலாம்.இன்னும் சில குறிப்புகளும் உங்கள் மைக்ர்ரோவேவில் செய்வது உள்ளது.இந்த அருசுவையிலேயே வலக்கை பக்கம் சமையல் குறிப்பு ஆப்ஷன்ஸ் இருக்கும்.அதில் மைக்ரோவேவ் என்று இருப்பதை க்ளிக் செய்து தேவையான வற்றை முயன்று பாருங்கள்.
ஆனால் நிச்சயம் உங்கள் மைக்ரோவேவில் பேக் செய்யும் ஐயிட்டங்கள் செய்ய முடியாது.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

செல்வ லெட்சுமி,

முற்சூடு எல்லாம் மைக்ரோவேவில் வராது, செட் பண்ண முடியாது. அந்தக் குறிப்புகளை மைக்ரோவேவில் முயற்சி செய்வது வீண் என்பேன்.

நீங்கள் மைக்ரோவேவ் குறிப்புகளை மட்டும் முயற்சி செய்து பாருங்கள், மேலே சகோதரி கொடுத்து இருக்கிறார்கள். இன்னும் நிறையக் குறிப்புகள் இங்கு கிடைக்கும்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்