7 மாத kullathai என்ன சாப்பிட ......

7 மாத kullathai என்ன சாப்பிட குடுகல்லம்.. plz உதவி செய்யுகள்? தாய் பால் குடுகேறேன் செரலாக் குடுகேறேன் , வேற என்ன சாப்பிட குடுக்க வேண்டும், அதை எப்படி தயார் செய்வது ?

ஹாய் ஜெயந்தி...,தாய் பாலை கொடுப்பது மிகவும் நல்ல விஷயம்.அதை நிறுத்தி விட வேண்டாம்.
சாப்பிட செரலாக் ஒரு வேளை கொடுத்தால்...மதியம் 12 மணியளவில் சாதம் 2 ஸ்பூன் அளவுடன் வேக வைத்த பருப்பு,கேரட் அல்லது உருளை கிழங்கு சிறிய துண்டு இவைகளை சேர்த்து மிக்ஸியில் அடித்து ஊட்டுங்கள்.முதலில் கொஞ்சம் கொஞ்சமாக தான் ஆரம்பிக்க வேண்டும்.ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றாக சேர்க்க வேண்டும்.அப்போதுதான் குழந்தைகளுக்கு போர் அடிக்காது.
அதே போல் டிபன் வகைகளில் இட்லி இடியாப்பம் வகைகளை பால் ஊற்றி ஊர வைத்து மசித்து ஊட்டலாம்.ஆப்பிளை வேக வைத்து கொடுக்கலாம்.வாழைபழத்தையும் மசித்து சிறிது ஊட்டலாம்.இவையெல்லாம் ஐந்து மாதங்களிலேயே ஆரம்பித்திருக்கலாம்.வெயில் காலம் ஆரம்பித்தால் ஜூஸ் வகைகளை கொடுக்கலாம்.ஓட்ஸ் கஞ்சி,ரவை கஞ்சி இவைகளும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.மிகவும் நல்லது.ஒவ்வொரு நாளும் இது இது என்று மாற்றி மாற்றி கொடுத்து வந்தால் நிச்சயம் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
ஒரு வயதிற்க்குள் நாம் சாப்பிடும் ஒரு சில முக்கிய உணவுகளை குழந்தைகளுக்கு சேர்த்து விடுவது நல்லது.
இன்னும் ஏதும் தகவல் வேண்டுமெனில் முதல் பகுதியில் குழந்தை வளர்ப்பு என்று இருக்கும்.அதில் க்ளிக் செய்து பார்த்தீர்களேயானால் தாளிக்கா நிறைய விபரங்களை சொல்லி இருப்பார்.பார்த்து பயன்பெறவும்.

என்றும் அன்புடன்,
அப்சரா

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

நன்றி, ரொம்ப நல்ல குறிப்பு சொன்னிங்க, நான் கண்டிப்பா செஞ்சி கொட்டுகிறேன்...

http://arusuvai.com/tamil/node/14968

இது கொஞ்சம் எழுதியிருப்பேன் படிச்சு பாருங்க jayanthi

மேலும் சில பதிவுகள்