எங்க வீட்டில் தீ விபத்து

ஹாய் தோழீஸ் தயவு செய்து, வீட்டில் உபயோகம் இல்லாத சுட்ச் களை போட்டு வைக்காத்திங்க, அப்புரம் எக்ஸாஸ் பேன், ஓட்டர் கீட்டர் போன்றவை தேவையான நேரத்தில் போடுங்க, மற்ற நேரங்களில் ஆப் பன்னி வைங்கபா. இப்படி தான் எங்க வீட்டு எக்ஸாஸ் பேன் ஓடாமல் இருந்து நானும் தெரியாம அந்த சுட்ச் போட்டு வைத்து இருந்தேன். அது என்னாச்சினா அதிலில் இருந்து கரண்ட் ஸாட் ஆய் நேற்று எங்க வீடு முழுவது தீ பிடித்து எரிந்து விட்டது. அப்புரம் தீ அனைப்பு துறை வந்துதான் சரி செய்தாங்க, வீடு தீ பிடிக்கும் போது நான் மட்டும் தான் வீட்டில் இருந்தேன். மதியம் மாத்திரை சாப்டு நன்றாக தூங்கி கொண்டு இருந்தேன். அந்த நேரம் அந்த விபத்து நடந்து. நல்ல தூக்கத்தில் மூச்சி தினறி எழுந்து பார்த்தேன்பா. ஒன்னும் புரியல. வீடு முழுவது புகைபா. ஒரு நிமிடம் என்ன பன்ரது தெரியல. அலரி கொண்டே வெளியில் ஓடி வந்தேன். நல்ல நேரம் நான் காலில் படுத்து இருந்தேன்பா. பெட் ரூம்ல இருந்தா இன்று நான் இல்லை. வீட்டில் இருந்த எல்லாம் எரிந்து விட்டது. கடேசியாக தான் ஹாலில் புகை வந்து. அப்புரம் ஓடி வந்து பக்கத்து வீட்டுக்கு தெரிய படுத்தினேன். அவர்களும் வீட்டை போட்டு விட்டு வெளியே ஓடி விட்டாங்க. 15நிமிடத்தில் தீ அனைப்பு துறை வந்து. அதற்க்கு பில்டிங் முழுவது புகை மண்டலமாக மாறியது. யாராலும் உள் செல்ல முடியாது. கடவுளின் கிருபையில் இன்று நான் இருக்கேன்பா. தயவு செய்து யாரும் இப்படி பொருப்பு இல்லாமல் இருந்து விடாதிங்க. எந்த சுட்ச் இருந்தாலும் அது தேவை இல்லை என்றால் ஆப் பன்னி வைத்து விடுங்க. நான் செய்த தவரை நீங்கள் செய்து விடாதிங்கபா. ப்ளீஸ். இப்போது பக்கது வீட்டில் தான் இருக்கிரோம்.

சோனியா, வீடு தீப்பிடிச்சு எரிஞ்சு இவ்வளவு வருத்தத்துலயும் மற்ற தோழிகள் அது போன்ற விபத்துகளை சந்திக்க கூடாதென்று இங்குள்ள அனைத்து தோழிகளுக்கு எடுத்து சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்திட்டீங்க பா. மிக்க்க்க்க்க நன்றி பா.நீங்க சொன்ன பிறகு தான் எங்க வீட்ல ஓட சீலிங்க் பேனை ஆன் பண்ணியே வச்சிருந்தாங்க, உங்களோட இந்த இழையை பார்த்தவுடன் தான் ஆப் பண்ணேன். ரொம்ப தேங்க்ஸ் பா. நீங்க உடம்பை பார்த்துக்குங்க.நல்லவேளை உங்களுக்கு எதுவும் ஆகாததே பெரிய விஷயம். அதற்கே கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

படிப்பதற்கு மிகவும் வருத்தமாக உள்ளது. நீங்கள் நலமுடன் இருப்பது அறிந்து மிக்க மகிழ்ச்சி. பொருட்கள் இன்று போனால் நாளை வாங்கிக் கொள்ளலாம். நீங்கள் எதைப்பற்றியும் கவலைப் படாமல் உங்கள் உடல் நலத்தை கவனத்துடன் பார்த்துக் கொள்ளுங்கள்.

தோழி சோனியா...,உங்க பதிவை படித்ததும் ஒரு நிமிடம் ஆடி போய்ட்டேன்.
நினைத்து பார்க்கவே கஷ்ட்டமாக இருக்கு.இந்த பதட்டத்திலும் இந்த அருசுவை மூலம் பலருக்கும் விழிப்புணர்வை தந்ததற்க்கு நன்றி பா சோனியா....
இந்த சம்பவம் கண்ணை விட்டு அகலவே ரொம்ப நாளாகும்.
உடம்பை கவனித்து கொள்ளுங்கள்.பொருட்களோடு போனதே என்று நாம் கடவுளுக்கு நன்றி சொல்லுவோம்.கவலைபடாதீர்கள் சரியா தோழி.....
இச்சம்பவம் நம் எல்லோருக்கும் ஒரு பாடமாகும்.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

உங்களது பதிவை படிக்கையில் அதிர்ச்சியாக உள்ளது. உங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு வருத்தத்தை தருகின்ற போதிலும், கர்ப்பிணியான தாங்கள் நலமாக இருக்கின்றீர்கள் என்ற தகவல் மட்டும் மனதிற்கு சந்தோசத்தைத் தருகின்றது. பொருள் இழப்பு குறித்து இந்த நேரத்தில் வருத்தம் கொள்ள வேண்டாம். உடல்நலனை கவனித்துக் கொள்ளுங்கள்.

சம்பவம் நடந்தது பஹ்ரைனிலா அல்லது ராமன்புதூரிலா?

எனக்கும் அதிர்ச்சியாகத் தான் இருக்கிறது. எப்படியோ நீங்கள் நலமாக இருப்பது சந்தோஷமாக இருக்கிறது குட்டிப்பெண்ணே. கடவுளுக்கு நன்றி. இது போதும். மீதி எல்லாம் மெதுவே தேடிக் கொள்ளலாம். கவலைப் படாமல் உங்கள் உடல் நலனைப் பார்த்துக் கொள்ளுங்கள். இதைப் பற்றியே யோசித்துக் கொண்டு இராமல் மேலே ஆகவேண்டியதைப் பாருங்கள். உங்கள் குடும்ப நலனுக்காக என் பிரார்த்தனைகள்.

அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

சோனியா படித்ததும் ரொம்ப கஷ்டமா இருக்கு கவலை படாதிங்க உங்க உடம்ப
பாத்துகங்க இந்த நேரத்திலும் அறுசுவை தோழிகளை மறக்காமல் சொல்லி இருக்கீங்க ரொம்ப நன்றி சோனியா

,
நடந்தது அதிர்ச்சியான சம்பவம் தான். நீங்கள் பாதுகாப்பாக இருப்பது பெரிய ஆறுதல். கடவுளுக்கு நன்றி. கவலையை விட்டு உடல் நலனைக் கவனித்துக் கொள்ளுங்கள். இந்த வேளையிலும் மற்றவர் நலனைப் பற்றி நினைக்கும் உங்களைப் பாராட்டுகிறேன்.
அன்புடன் செபா.

இதை படித்தவுடன் அதிர்ச்சியில் என்ன சொல்வதென்ரே புரியவில்லை அந்த கடவுலால் உங்களுக்கு ஏதும் நடக்கவில்லை என்று தெரிந்தவுடனே தான் நிம்மதி மூச்சு விட்டேன் பா பொருட்க்களை பற்றி நீங்கள் கவலை கொள்ள வேண்டாம் உங்கள் உடம்பை பார்த்து கொள்ளுங்கள் ஆனால் இனிமே சிரு விஷயத்திலும் கவனம் சிதராமல் பார்த்து கொள்ளுங்கள்.மிக்க்க்க்க்க்க்க்க்க்க்க நன்றி பா இந்த சூழ்நிலையிலும் இதுபோல் வேரு யாரும் செய்து விடக்கூடாது என்பதற்க்காக இந்த பதிவை போட்டதர்க்கு நன்றி எங்க வீட்லயும் எக்ஸக்ட் சுவிட்ச் ஆன்ல தான் பா இருந்தது செல் போன் சார்ஜரும் ஆன்லதான் பா இருக்கும் ஆனா இனிமே அப்படி பன்னவே மாட்டேன்.

அன்புடன்
ஸ்ரீ

காலையில அறுசுவைய ஓபன் செய்ததும் உங்களுடைய இழை தான் கண்ணில்பட்டது படித்ததும் ரொம்ப மனதுக்கு கஷ்டமாகிடுச்சு. சோனியா நீங்கள் நலமாக இருக்கிறீர்கள் என்றதும் தான் நிம்மதியாக இருக்கு. போனது போகட்டும் அதை எல்லாம் நினைத்து உங்கள் மனதை போட்டு குழப்பிக் கொள்ளாதீர்கள். உங்கள் உடல் நலனில் கவனத்தை செலுத்துங்கள். வீடு சரி செய்ததும் ஒரு மனமாற்றதிற்கு வெளியில் எங்காவது சென்று வாருங்கள் மனதுக்கு புத்துணர்ச்சியா இருக்கும். hats off to u சோனியா இந்த சூழ்நிலையிலும் மற்றவர்களுக்கு இந்த சூழ்நிலை வந்துடகூடாதுனு பதிவிட்டிருக்கிறீங்க நன்றி.

நினைக்கும் போதே படப்பக்குது,,,,,,,

என்ன சோனி,,,,

என்னங்க எப்படி இருக்கீங்க,,,,

சரி தவறு நடந்துடிச்சி விடுங்க,,

இனிமேல் பாத்து இருங்க,,,,,,

ரொம்ப கவலையா இல்லாம தலைக்கு வந்தது தலை பாகையோட போச்சினு நினைச்சிகங்க,,,,,

ஒடம்ப பாத்துகோங்க,,,,

உண்மையிலேயி ரொம்ப பயனுல்ல இழை எல்லோருக்கும் பயன் படும்,,,,,,,,,

அறுசுவைக்கு இந்த சூழ்னிலையிலும் பதிவிட்டமைக்கு நன்றி,,,,,,,,,

உங்கள் நலனுக்கா நாங்கள் கடவுளிம் வேண்டிக்கொள்கிறோம்,,,,,

என்றென்றும் அன்புடன் கீதா (விமலகீதா)

நாம் கோபத்தில் பேசும் வார்த்தைக்கு ஒரு அர்த்தம்,,,
பேசாத வார்த்தைக்கு பல அர்த்தம்!!!

மேலும் சில பதிவுகள்