மறக்க முடியாத மனிதர்கள்

தோழிகளே! வாழ்க்கையில் நாம் பலரை சந்தித்திருப்போம். அது போன்று சந்தித்தவர்களில் நம்மை பாதித்தவர்கள்,உணர்ச்சிவசப்படவைத்தவர்கள்,மிகவும் மதிக்க வைத்தவர்கள், வெறுக்க வைத்தவர்க்ள்,மறக்க முடியாதவர் போன்ற வகையினர் அடங்கியிருப்பர். அது போல நீங்கள் சந்தித்தவர்கள் பற்றி இங்கே எங்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்களேன். மேற்கூறியவர்களை எந்த மாதிரி சூழ்நிலையில் சந்தித்தீர்கள். அந்த நிகழ்ச்சிகளையும் இங்கே பகிருங்களேன் :)

ஹாய் கல்ப்ஸ் என்ன பண்ணிட்டு இருக்கீங்க ,உங்க பசங்க உடல் நலம் எப்படி இருக்கு ..

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

HAI FRIENDS,

Naan priya, arusuvaiku naan pudhusu. ennaium unga friends list la sethukongapa. enaku ippathan marriage agi 4 month aguthu. en native place cuddalore. ipa en husband kuda QATAR la irukan. enaku novels na romba pudikum. ungakita ethavathu novels iruntha en mail id ku anupunga pls. en mail id priyar43@yahoo.com. unga kuda friends aga aasai padaran.

நாளை என்றால் தாமதம் ஆகிவிடும்; இன்றே வாழ்ந்து விடுங்கள்.

அன்புடன்,
பிரியாகார்த்திக்.

கல்ப்ஸ், ரொம்ப நல்ல தலைப்பு தான்பா... எனது வாழ்க்கையில் மறக்க முடியாத நபர் என பட்டியலிட்டால் அதற்கு கணக்கிடவேண்டும்... ஒவ்வொன்றாக விவரிக்கிறேன்... முதல் மறக்கமுடியாத நபர் எனது அப்பா தான்..
எனது அப்பாவை அப்பாவகாக ம்ட்டுமே அறிந்த வயது 12, அதற்கு மேல் தான் அவர் ஒரு நல்ல சமூக உணர்வுள்ள மனிதர் என்பதை அறிந்து மிக பெருமைப்பட்டேன்... நான் பிறந்தது ஸ்ரீரங்கத்தில் நாங்கள் குடியிருந்த நகருக்கு அவர் தான் அசோசியேசன் செகரட்டரியாக இருந்தார்... நான் ஏற்கனவே ஒரு இழையில் இதைப்ப்ற்றி ரம்ஸ்சிடம் சொல்லியிருக்கிறேன்... அவரின் தூண்டுதலில் நாங்கள் அனைவரும் எங்களது பழைய நோட்டு, புத்தகம், பென்சில், பேனா, ரப்பர், பொம்மை, துணிகளை சேகரித்து... யார் அதிகம் சேகரிக்கரார்களோ அவர்களின் கையாலே ஒரு இல்லத்திற்கு சென்று வழங்க்ச் செய்வார்கள்.. இரண்டாவது முறை சேகரிக்கும் போது நான் தான் முதலிடம்... எனவே எனது அப்பாவும் நண்பரும் என்னை அழைத்துச் சென்று என் கையால் குழந்தைகளுக்கு நான் சேகரித்த பொருட்களை வழங்கவைத்தார்.... அப்போது அங்கே நான் சந்தித்த ஒவ்வொரு சிறுவர், சிறுமியரும் என் மனதில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தினர்... அவர்களின் முகத்தைப் பார்த்து என் மனம் ஏனோ புரியாத ஒரு சஞ்சலம் கொண்டது. அது இன்னதென்று எனக்கு அப்பொழுது விளங்கவில்லை... ஆனால் இப்பொழுது இன்றும் அந்த காரியத்தை நான் செய்யக்காரணம் எனது தந்தை... எனது சமூக உணர்விற்கு பிள்ளையார் சுழி போட்டவர். எனது என் வாழ்நாளில் மிக முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியவர் எனது தந்தை....

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

கல்பனா... நல்ல தலைப்பு. கண்ணில் படாம உள்ளே போயிட்டுது. வேறு ஏதோ தேடும்போது கண்ணில் பட்டது. வாழ்த்துக்கள். நிச்சயம் நேரம் கிடைக்கும்போது வந்து சொல்றேன்.

ரங்கலஷ்மி... உண்மையில் உங்க பதிவு படிச்சு மனசுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. காரணம் என் அப்பா'வும் வருடா வருடம் எந்த ஊரில் இருந்தாலும் ஒரு குழந்தையின் படிப்பு செலவை ஏற்று செய்வார். அன்று பார்த்து பழகிய விஷயம், இன்றும் நான் இது போல் குழந்தைகளூக்கு உதவ முடியும்போதெல்லாம் முயற்சி செய்ய காரணமாக இருக்கிறது. எல்லாருக்குமே அவங்க அப்பா, அம்மா தான் முதலில் பிடித்த மனதை பாதித்த மனிதர்களாக இருப்பாங்கன்னு நினைக்கிறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Hi naanum intha paguthikku romba puthusu taan,innum marrige aagala .ennayum unga friend la sethukonga.Enakku romba pidichamanathu vitiyasamana manitharin vaalkai kathaim,asatalana jokes.Ungaluku therinta puthumaya vitiyasamana visiyangala share pannikunga.Ok va friend?my email meena_jaya@ymail.com

Unmaiyil sirappana thalaipu.naan sila intresting aana manithargalai paarthirukiren.Kandipaga adutha visit kuripidukiren.

Nanri.

வனிதா, மறக்க முடியாத மனிதர்களை பற்றி சொல்றேன்னு சொல்லிட்டு இன்னும் சொல்லவே இல்லை??? :P

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

நான் இங்கே என் குடும்பம், என் பெற்றோரை பற்றிலாம் பேச போறதில்லை.. ஏன்னா அவங்களை மறந்தா தான் தப்பு... :) நம்ம ரத்தத்தில் கலந்து ஜீவன்கள்.

மற்றவர்கள் பழகிய மனிதர்கள்.... மறக்க முடியாத இருவர் உண்டு வாழ்வில்.

ஒருவர் என் தந்தையின் நெறுங்கிய நண்பர். மருத்துவராக இருந்தவர். மற்றவருக்கு எந்த எதிர் பார்ப்பும் இல்லாமல் உதவுவது எப்படின்னு எனக்கு கற்று தந்தவர். எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் பந்தா இல்லாம சாதாரணமா வாழ்வது எப்படின்னு கற்று தந்தவர். என்னிடம் தாய் மாமன் போல அளவில்லா அன்பு காட்டியவர். இன்று அவர் உயிரோடு இல்லை... சந்தர்ப்ப சூழ்னிலை... அவர் குடும்பத்துக்கு உதவவும் ஆளில்லை. அவர்களை நினைக்காத நாளில்லை.

மற்றொருவர்... மகன்கள் மட்டுமே உள்ள குடும்பத்தில் மூத்த மகளாய் என்னை நேசித்து கார்த்திகை மாதம் மாலையிட்டிருந்த போதும் நான் வருகிறேன், எனக்கு பிடிக்கும் என்ற காரணத்துக்காக அசைவம் சமைத்து வைத்திருந்த அன்பான சகோதரனின் குடும்பம். அன்பே கடவுள்னு எனக்கு உணர்த்திய அன்பு குடும்பம். ரத்தபந்தம் ஏதுமின்றி, உறவென்றும் ஏதுமின்றி உறவாக இன்று வரை துணை நிற்பவர்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஆஹா வனிதா ஒரே டச்சிங்க்ஸ்... டச்சிங்க்ஸ்... ரொம்ப பீல் பண்ணாதீங்க...

ஆனாலும் உங்களுக்கு பிரெண்ட் சர்கிள் ரொம்ப ஜாஸ்தி போல இருக்கு எனக்கு ரொம்ப கம்மி :) அம்மா அப்பா விட்டால் அக்கா அப்புறம் கணவர் அவர் குடும்பம் தான் :P

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

நான் சந்தித்த மறக்க முடியாத நபர்கள்னா அது என்னோட அண்ணாவின் நண்பர்கள்தான். அண்ணா இந்தியாவில் இல்லென்னாலும் ஃபோனில் பேசும் போது அப்பா அம்மாவின் குரலில் சின்ன வருத்தம் தெரிந்தாலும் உடனே அவங்க ஃப்ரெண்ட்சுக்கு ஃபோன் பண்ணிட்டான்னா போதும். அந்த நண்பர்களில் யாராவது ஒருவர் உடனேயெ எங்க வீட்டுக்குப் போய் அப்பா அம்மாவைப் பார்த்து அவங்க கூட உட்கர்ந்து எதுவுமே தெரியாத மாதிரி பேசி பிரச்சினை ஏதாவது இருக்கான்னு தெரிஞ்சுகிட்டு அதுக்கு என்ன ஹெல்ப் பண்ணனுமோ அதை செய்துன்னு நல்லா கவனிச்சுப்பாங்க. அப்பா அம்மாவோட இந்த வருட திருமண ஆண்டு விழாவிற்கு சர்ப்ரைஸ் பார்ர்ட்டி அரேஞ்ச் செய்து அவங்களை சந்தோஷப் படுத்திட்டாங்க. இப்படி ஒரு நட்பு நிச்சயமா என்னால மறக்கவே முடியாது. என்னோட கல்யாணத்துக்கு கூட அத்தனை பேரும் சகோதரர்களா நின்னு வேலைகளை இழுத்துப் போட்டு செய்தது எங்கள் உறவுக்காரங்களையே ஆச்சரியப் பட வச்சிடுச்சு. அவங்கவங்களுக்கு சகோதரிகள் இருக்கும் போதும் என்னையும் சகோதரியாக நினைச்சு அவங்க தங்கச்சியாவே என் மேல பாசத்தைக் கொட்டறதை நினைச்சா இப்பவும் பெருமையா இருக்கு.

அடுத்து மறக்க முடியாத நபர்னு சொல்றதை விட மறக்கமுடியாத சந்திப்புன்னு சொல்லலாம். பதினான்கு வருட இடைவெளிக்கு பின் கல்லூரி நண்பர்களை கடந்த வாரம் சிங்கப்பூரில் சந்தித்தது. மறக்கவே முடியாத படி அத்தனை சந்தோஷம்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மேலும் சில பதிவுகள்