சமைத்து அசத்தலாம் - அசத்தலான பகுதி - 3

புது உறுப்பினர்கள், புது குறிப்புகள்... புது சமைத்து அசத்தலாம்.

தோழிகள் அனைவருடைய உதவியோடும், ஒத்துழைப்போடும் சென்ற வார சமைத்து அசத்தலாம் பகுதி மெகா வெற்றி கண்டது. இந்த முறையும் எல்லாருடைய ஒத்துழைப்பும் இருக்கும் என்ற நம்பிக்கையோடு... இதோ துவங்கிட்டோம். வாங்க வாங்க... வந்து சமைத்து அசத்துங்க.

"கூட்டாஞ்சோறு" பகுதியில் இருந்து இம்முறை நாம் சமைக்க இருக்கும் குறிப்புகள்:

srividhyaiyer - 30
harshaa - 34
mptindira - 34
ஜுபைதா - 32

இவற்றில் இருந்து வரும் Dec 13ஆம் தேதி முதல் Dec 20அம் தேதி வரை சமைக்கும் குறிப்புகளை தினம் தினமும் யாருடைய குறிப்பு என்பதையும் சேர்த்து இங்கு குறிப்பிடுங்கள். குறைந்தது 2 குறிப்பாவது சமைக்க வேண்டும். அதிகபட்சம்.... எவ்வளவு விரும்பினாலும் செய்யலாம்... அதிகம் குறிப்புகள் சமைப்பவருக்கே வெற்றி மாலை.

விருப்பம் உள்ளவர்கள் குறிப்புகளை சமைக்கும்போது ஸ்டெப் ஸ்டெப்பாக படம் எடுத்து "யாரும் சமைக்கலாம்" பகுதிக்கு arusuvaiadmin@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம். கடைசியாக சமைத்து முடித்ததும் ஒரு படமாக அனுப்ப வேண்டாம் என்று அன்போடு கேட்டு கொள்கிறோம். அவற்றை இணைப்பதில் கஷ்டம் இருப்பதாக அட்மின் அறிவிப்பு.

இம்முறை நமது கணக்குபிள்ளை யாழினி.... செல்ல கொட்டு வாங்க தயாராக காத்திருக்கார். அவருக்கும், சமைக்க இருக்கும் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும், நன்றிகளும் பல.

சமைத்து அசத்தலாம் - இதுவரை

முதல் பகுதி:

சமைக்கப்பட்ட குறிப்புகள் யாருடையது:

இந்திரா, மைதிலி பாபு, தயாபரன் வஹிதா, சுமதி

பங்குபெற்றவர்கள் - 17 பேர் (வனிதா, யோகராணி, ஹர்ஷா(அன்பரசி), ஆமினா, பவித்ரா, சங்கீதா, லாவண்யா, கெளரி, கவிசிவா, வினோஜா, யாழினி, மகேஷ்யுவா, இளவரசி, சுஸ்ரீ, வின்னி, பொன்னி, சீதாலஷ்மி)

வெற்றி பெற்றவர்கள்:

அசத்தல் ராணி திருமதி. லாவண்யா - 22

அசத்தல் இளவரசி திருமதி. பொன்னி - 20

அசத்தல் இளவரசி திருமதி. அன்பரசி பாலாஜி - 16

இரண்டாம் பகுதி:

சமைக்கப்பட்ட குறிப்புகள் யாருடையது:

மஹிஸ்ரீ, சாந்தி, சந்தியாரவி, ரஸியாநிஸ்ரினா

பங்குபெற்றவர்கள் - 19 பேர் (இளவரசி, நித்திலா, கோமு, மஞ்சுளா அரசு, ரீனா, ஹமீது பாத்திமாம்மா, மகேஷ்யுவா, அப்சரா, சுஸ்ரீ, சீதாலஷ்மி, சாந்தினி, பவித்ரா, யோகராணி, லாவண்யா, மீராகிருஷ்ணன், வினோஜா, சுந்தரி அர்ஜுன், யாழினி, வின்னி)

வெற்றி பெற்றவர்கள்:

அசத்தல் ராணி திருமதி. கோமு (46)

அசத்தல் இளவரசி திருமதி. இளவரசி (28)

அசத்தல் இளவரசி திருமதி. லாவண்யா (25)

இப்போ... இந்த வாரம் யார் யார் வெற்றி பெற போறாங்கன்னு பார்ப்போம் ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் வனி,அடுத்த சமைத்து அசத்தலாம் தொடங்கிட்டீங்களா?சிறப்பாய் கொண்டு செல்லும் உங்களுக்கும்,யாழினிக்கும் வாழ்த்துக்கள்.கலக்கவிருக்கிற சமையல் ராணிகளுக்கும் வாழ்த்துக்கள்.

அன்புடன்
நித்திலா

ஆரம்பம் ஆகிவிட்டது சமையல் கலாட்டா..
நானும் கலந்து கொள்கிறேன் இம்முறை..
பார்க்கலாம் வெற்றிமாலை யாருக்கு? என்று சரியா வனிக்கா..

வாழு, வாழவிடு..

இந்த முறை நானும் கலந்து கொள்கிறேன்.என் பேரையும் சேர்த்துகோங்க.

சமைத்து அசத்தலாம்-3 ஆரம்பம் செய்தாச்சா.....வெரி குட்...
நான் இந்த முறையும் கலந்துக்க போறேன்.வழக்கம்போல் என்னால் முடிந்தவரை செய்ய முயற்ச்சி செய்கிறேன் வனி....
கணக்கு பிள்ளைக்கு **** யாழினிக்கு**** ஒரு ஹலோ சொல்லிக்கிறேன்......
தலை **** வனிக்கு **** ஒரு ஹலோ....
கலந்து கொள்ளவிருக்கும் அனைத்து தோழிகளுக்கும் ஒரு ஹாய் சொல்லிக்கிறேன் பா.....
இந்த முறையும் கலகலப்பாக வண்டி செல்ல வேண்டும்.
வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

நானும் இந்தமுறை வெளாட்டுக்கு சேர்ந்துக்கறேன் பா. என்னையும் உங்களோட சேர்த்துக்குங்க. நான் நல்லா வெளாட ட்ரை பண்றேன் :))

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

இந்தவாட்டி நானும் இருக்கேனே.

நானும் களத்ல குதிக்கிரேன்.

கணக்கப்பிள்ளை என்னையும் சேத்துக்குங்க.

இதுவரை கவனிக்கவே இல்லியே. இப்ப கவனிச்சுட்டேன். இனி சும்ம இருக்க முடியுமா.

மேலும் சில பதிவுகள்