கத்திரிக்காய் பிரட்டல்

தேதி: December 13, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.7 (9 votes)

 

கத்திரிக்காய் - 5
வெங்காயம் - 2
தக்காளி - பாதியளவு
மிளகாய்தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
வேர்க்கடலை - 2 தேக்கரண்டி
தேங்காய் துருவல் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - மூன்று தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து


 

தேவையான பொருட்களை தயார் நிலையில் வைத்து கொள்ளவும்.
கத்திரிக்காயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியையும் பொடியாக நறுக்கி கொள்ளவும். வேர்கடலையையும், தேங்காய் துருவலையும் தனித் தனியே வாணலியில் வறுத்து வேர்கடலையை தோல் நீக்கி விட்டு இரண்டையும் மிக்ஸியில் பொடித்து கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
வதங்கியதும் மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
பின்பு நறுக்கின கத்திரிக்காய்களை சேர்த்து நன்கு பிரட்டி சிறிதளவே தண்ணீர் தெளித்து தேவையான அளவு உப்பும் சேர்த்து மூடி போட்டு மிதமான தீயில் இரண்டு நிமிடம் வேக விடவும்.
பின்பு மூடியை திறந்து கிளறி விட்டு நன்கு வெந்து இருக்கும் நிலையில் பொடித்த வேர்க்கடலை பொடியை தூவி பிரட்டி விட்டு சிம்மிலேயே இரண்டு நிமிடங்கள் விடவும்.
நன்கு எல்லாம் பிரண்டு வாசமாக இருக்கும். அதன் பின் அடுப்பிலிருந்து இறக்கவும். இதை சாம்பார், ரசம், தயிர் சாதத்திற்கு தொட்டு கொள்ள மிகவும் நன்றாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அன்பு தோழி அப்சரா,

கத்தரிக்காய் பிரட்டல் பார்க்கும் போதே சுவையும் தெரிகிறது பா. எனக்கு நீண்ட நாளாக ஒரு ஆதங்கம் உண்டு. கத்தரிக்காயில் மட்டும் அந்த அளவுக்கு குறிப்புகள் இல்லையே என்று. அந்த குறையை தீர்த்தவர்களில் நீங்களும் ஒருவர். நல்ல டேஸ்டான குறிப்பை தந்துள்ளீர்கள் அப்ஸ். உங்க வீட்ல எல்லாரும் குடுத்து வச்சவங்க தான். உங்க வீட்டு பக்கம் நானும் ஒரு வீட்டை பார்த்துக்கறேன் பா. தினமும் நானும் உங்க வீட்டு சமையலை ருசிக்கலாம் அல்லவா? :) வாழ்த்துக்கள் பா.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

என் குறிப்பினை வெளியிட்ட அட்மின் அவர்களுக்கு மிகவும் நன்றி.

கல்பனா நலமாக இருக்கின்றீர்களா..?வீட்டில் அனைவரும் நலமா...?
முதல் ஆளாக வந்து கருத்து தெரிவித்தமைக்கு மிகவும் நன்றி தோழியே....
\\\\ உங்க வீட்ல எல்லாரும் குடுத்து வச்சவங்க தான்.//////
அப்படியெல்லாம் ஒன்றுமில்லை கல்பனா...இப்படி யெல்லாம் பாராட்ட நல்ல மனசு வேணும்.அது உங்கள்ட்ட இருக்கு...
நீங்க நிறைய இப்படி பாராட்டிசொல்வது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்தாலும்,அதற்க்கு முழு தகுதியானவளா என தெரியவில்லை.இருப்பினும் சந்தோஷமாக உள்ளது.
வீட்டிற்க்கு வாருங்கள் ஒரு பெரிய விருந்தே வைக்கின்றேன்.
உங்கள் பாராட்டுக்கும் ,வாழ்த்துக்கும் நன்றிகள் பல பல...

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

வெளியே பாக்கும் போது கோழி மாதிரியே இருந்தது. நானும் தலைப்பை தப்பா கொடுத்துட்டாங்களோன்னு பாத்தேன்!!!

செய்து பார்த்துட்டு சொல்றேன் அப்சரா

வாழ்த்துக்கள்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

அப்சரா, எனக்கு கத்தரிக்காய் ரொம்ப பிடிக்கும், கூட்டு, பொரியல். கொஸ்து, சாம்பார் என எப்படி செய்தாலும் பிடிக்கும். இனிமேல் உங்க கத்தரிக்காய் பிரட்டலும் என்னோட favorite தான்.

அப்சரா எனக்கு வாழக்காய் வைத்து ஒரு டிஷ் சொல்லுங்களேன் .

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

தோட்டத்தில் நிறைய கத்தரிக்காய் ...இந்த சமயத்தில் இந்த குறிப்பு வந்தது பொருத்தமாக இருக்கு....இந்த முறையில் நான் செய்ததேயில்லை...
செய்து பார்க்கிறேன்..உங்க குறிப்புகள் பார்க்கறப்ப ரொம்ப ரசிச்சு செய்வது தெரிகிறது...ருசித்து ருசித்து சாப்பிடும் உங்கள் வீட்டு அதிர்ஷ்ட சாலிகளுக்கும் என் வாழ்த்துக்களை சொல்லுங்கள்..

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

உங்கரெசிப்பி செய்துபாத்தாச்சு.சப்பாத்திகூட பெஸ்ட் காம்பினேஷன்.

அஸ்ஸலாமு அலைக்கும் ஆமினா...நலமாக இருக்கின்றீர்களா?
எங்கே உங்களை அருசுவையில் பார்த்து நாளானது போல தெரிகின்றது...
தங்கள் பின்னூட்டம் கண்டு மிக்க மகிழ்ச்சி.நன்றி ஆமினா....
செய்து பார்த்துட்டு சொல்லுங்க.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

ஹாய் ரம்யா எப்படி இருக்கீங்க?
உங்கள் பின்னூட்டம் கண்டு மிக்க மகிழ்ச்சி.
மிகவும் நன்றி ரம்யா.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

பாரதி வாழைக்காயில் நிறைய குறிப்பு இந்த அருசுவையிலே இருக்கின்றது.
அது உங்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் என்றே நினைக்கிறேன்.
நானும் முடிந்த போது அதில் குறிப்பு தருகின்றேன்.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

ஆஹா...தோட்டத்தில் ஃபிரஷ்ஷா கத்திரிக்காயை பறித்து சமைத்து பார்க்கும் சுவையே தனிதான் போங்க....மிகவும் நன்றாக இருக்கும் இல்ல....
அப்படி தோட்டத்தோட பார்த்து ரொம்ப நாளாச்சு பா....
செய்து பார்த்துட்டு சொல்லுங்க இளவரசி.
உங்கள் பாராட்டும்,வாழ்த்தும்,எனக்கு பெருமையாக இருந்தது.
மிக்க நன்றி இளவரசி.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

என்ன உடனே செய்து பார்த்துட்டீங்களா கோமு...
உங்களுக்கு பிடித்திருந்ததா....ஆமாம் சப்பாத்திக்கு ரொம்ப நன்றாகவே இருக்கும்.
செய்து பார்த்துவிட்டு என்னோடு பகிர்ந்து கொண்டமைக்கு மிகவும் நன்றி கோமு.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

அப்சரா,
கத்தரிக்காய் பிரட்டல் சாப்பிட கூப்பிடுது.....
கத்தரிக்காய் என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும்.கண்டிப்பா செய்து பார்க்கிறேன்.குறிப்புக்கு வாழ்த்துக்கள்.

அஸ்ஸலாமு அலைக்கும் அப்சரா...
அந்த கத்தரிக்காய் போட்டோவுல பார்க்கும்போது.மின்னுது அப்சரா..
அதனால டேஸ்ட்டும் சூப்பரா இருக்கும்..
வாழ்த்துக்கள்... அப்சரா...நன்றி..

வாழு, வாழவிடு..

ஹாய் ஹர்ஷா..,
கத்திரிக்காய் பிரியரா நீங்க....அப்ப உங்களுக்கு நிச்சயம் இது பிடிக்கும்.
செய்து பார்த்துட்டு சொல்லுங்க.
நன்றி ஹர்ஷா.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

வ அலைக்கும் சலாம் ருக்‌ஷானா...,நலமாக இருக்கின்றீர்களா?
தாங்கள் கருத்து தெரிவித்ததில் மிக்க மகிழ்ச்சி.
நன்றி ருக்‌ஷானா...

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

அப்சரா... நானும் இதே போல் வேர்கடலை சேர்த்து செய்வேன். பார்ட்டிக்கு நல்லா இருக்கும் பிரியாணி கூட சாப்பிட. நினைவுபடுத்திட்டீங்க. வாழ்த்துக்கள் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி இதுவரை நான் பிரியாணிக்கு சைட் டிஷ் ஆக செய்து பார்த்ததில்லை.
நல்ல ஐடியா கொடுத்திருக்கீங்க.நன்றி வனி.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

வேர்க்கடலை மணத்துடன் அருமையாக இருக்கும் போல..அளவாய் பொருட்கள் சேர்த்திருப்பதால் டேஸ்ட் நல்லாயிருக்கும்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஆசியா மேடம் எப்படி இருக்கீங்க?
இதில் வேர்கடலை மணம் தான் ப்ளஸ்ஸே......
சாப்பிட நல்ல சுவையாக இருக்கும்.
தாங்கள் கருத்து தெரிவித்தமைக்கு மிகவும் நன்றி.

அப்புறம் ஆசியா மேடம்,ஒரு முறை தம் அடை குறிப்பை செய்து வெளியிடுகிறீர்களா என்று கேட்டிருந்தீர்கள் நினைவு இருக்கின்றதா....?
அதை இப்போதுதான் எனக்கு இந்த அருசுவையில் வெளியிட முடிந்தது.
முடிந்த போது பாருங்கள்.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

அப்சரா,உங்களுடைய கத்தரிக்காய் பிரட்டல் மிக மிக சுவையாக இருந்தது. அத்துடன் சாதத்துடன் சாப்பிட நல்லாய் இருந்துச்சு. வீட்டில் எல்லோரும் விரும்பிச் சாப்பிட்டார்கள்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

வாங்க யோகா மேடம்,இந்த குறிபினை செய்து பார்த்தீங்களா..?மிகவும் சந்தோஷம்.
வீட்டில் எல்லோருக்கும் பிடித்து விட்டதை படிக்கும் போது சந்தோஷமாக இருந்தது.
இந்த சந்தோஷமான கருத்தை என்னோடு வந்து பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிங்க...

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.