தேதி: December 13, 2010
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
பெரிய வெங்காயம் - 4
தக்காளி - 3
மிளகாய் தூள் - தேவையான அளவு
மஞ்சள் தூள் - சிறிது
உப்பு - தேவைகேற்ப
தாளிக்க:
கடுகு - சிறிது
உளுந்து - சிறிது
பெருங்காயம் - சிறிது
எண்ணெய் - தாளிக்க
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தேவையான பொருட்கள் அனைத்தையும் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

கொதிக்கும் நீரில் தக்காளியை போட்டு 5 நிமிடம் மூடி வைக்கவும்.

தக்காளியை தோல் உரித்து சிறிது தண்ணீர் விட்டு நன்கு கரைத்துக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு போட்டு பொரிந்தவுடன் உளுந்து போட்டு வறுக்கவும், பிறகு சிறிது பெருங்காயம் போடவும்.

பிறகு பொடியாக நறுக்கின வெங்காயத்தை போட்டு சிறிது உப்பு சேர்த்து நன்கு வேகும் வரை வதக்கவும்.

அதனுடன் தக்காளி கரைசலை ஊற்றி மிளகாய் தூள், மஞ்சள் தூள், மீதி உப்பு சேர்த்து நன்கு வேக விடவும்.

பொடியாக நறுக்கின கொத்தமல்லி சேர்த்தால் சுவையான சட்னி தயார்.

Comments
ரம்யா,
ஹாய் ரம்யா... நலமா...?
நான் இரண்டையுமே அரைத்து தாளித்து இது போன்று மிளகாய் தூள் சேர்த்து கொதிக்க விட்டு இறக்குவேன்.
இந்த முறை சற்றே வித்தியாசமாக உள்ளது.ஃபோட்டோவும் பார்க்கவே நா ஊரும்படி கலர்ஃபுல்லாக உள்லது ரம்யா...
இதை முயன்று பார்க்க வேண்டியதுதான்.
பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும் ரம்யா...
என்றும் அன்புடன்,
அப்சரா.
எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.
அருமை ரம்யா
அடடே கலர்க்க்காகவே சாப்பிடலாம் போல....நாக்கு ஊற வெச்சுடீங்க ரம்யா..... ரொம்ப அருமை. இன்னும் நிறைய குறிப்புகள் தர வாழ்த்துக்கள்...
சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***
வெங்காயம் தக்காளி சட்னி
தெலீவான படங்கள். பார்க்கும் போதே சாப்பிட தூண்டி விடும் அளவுக்கு அழகா கொடுத்துருக்கீங்க
செய்து பார்த்துட்டு சொல்றேன்
மேலும் பல குறிப்புகள் தர வாழ்த்துக்கள்
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
Super
ஹாய் ரம்யா உங்க receipe ரொம்ப அருமை. பார்க்க கூட ரொம்ப அழகு. i will try this.
சுபாஷினி
எனது குறிப்பை வெளியிட்ட
எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அவர்களுக்கு நன்றி.
அப்சரா, இது போல் செய்து
அப்சரா, இது போல் செய்து பாருங்கள். மிகவும் நன்றாக இருக்கும். இட்லி, தோசைக்கு நல்ல SIDE DISH . நன்றி.
நன்றி, சுகந்தி செய்து
நன்றி, சுகந்தி செய்து பாருங்கள்.
வாங்க ஆமினா, செய்து
வாங்க ஆமினா, செய்து சாப்பிட்டு பாருங்கள். எப்படி இருந்தது என சொல்லுங்கள். மிக்க நன்றி.
ஹாய் சுபா, வருகைக்கு நன்றி
ஹாய் சுபா, வருகைக்கு நன்றி ரொம்ப thanksபா. try this and give me the feedback.
parkumpothe colourfullaga
parkumpothe colourfullaga ullathu mam. sapital superaga irukkum endru thonukirathu.
ரம்யா
சட்னி சூப்பர்சுவை சாதமுடனும்சரி, இட்லியுடனும்கூட நல்லா இருந்தது,
ரம்யா
உங்க குறிப்பு சூப்பர் நான் தக்காளி சட்னி செய்து இருக்கேன் ஆனா இந்த மாதிரி செய்ததில்லை பாக்கவே கலர்புள்ளா இருக்கு ட்ரய் பன்னி பாத்துட்டு சொல்ரேன்
அன்புடன்
ஸ்ரீ
நன்றி ராதிகா, கட்டாயம்
நன்றி ராதிகா, கட்டாயம் செய்துபாருங்கள்.
கோமு மேடம், செய்து
கோமு மேடம், செய்து பார்தமைக்கு நன்றி.
ஸ்ரீ மிக்க நன்றிபா,
ஸ்ரீ மிக்க நன்றிபா, செய்துபாருங்க,இது நான் அடிக்கடி செய்யும் சட்னி.
ரம்யா
இன்று காலைல தோசைக்கு தக்காளி சட்னி செய்றேன்னு சொன்னதும் எங்களுக்கு என்னவரும் என் குட்டியும் லன்ச்கு வைத்த சாம்பாரே தோசைக்கு போதும்னு சொல்லிடாங்க இந்த சட்னி செய்ததும் எப்பொதும்1/2 தோசை சாப்பிடரவன் இன்னைக்கு 2 சாப்டான் பா என்னவரும் விரும்பி சபிட்டார் சூப்பர் பா
நல்லது செய்யாவிட்டலும் தீமைசெய்வதையாவது
கை விட வேண்டும்
அன்புடன்
புவனேஸ்வரிசெந்தில்முருகன்
ரம்யா
நலமா ரம்யா?
ரொம்ப கலர்ஃபுல்லா இருக்கு சட்னி..
செய்து பார்க்கிறேன்... வாழ்த்துக்கள் ரம்யா..
வாழு, வாழவிடு..
நன்றி புவனா, rukshana
நன்றி புவனா, rukshana
ரம்யா
ரம்யா... சுவையான குறிப்பு. நாங்க இது போல் செய்வோம், ஆனா வெறும் மிளகாய் தூள் இல்லை, சாம்பார் தூள் சேர்ப்போம். உங்க முறையில் செய்து பார்க்கிறேன். வாழ்த்துக்கள்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
ரம்யா
ரம்யா தக்காளி சட்னி வித்தியாசமாக இருக்கு. நீங்க வெங்காயம் பொடியாக அரிந்து இருப்பது அழகாக இருக்கு. நாங்க தக்காளி அரைக்காம, வெங்காயத்தை பெரிதாக நீளமாக நறுக்கி சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள ஈஸியா செய்வதற்கு இந்த முறைப்படிதான் செய்வோம்.
நன்றி வனிதா மேடம், வினொஜா,
நன்றி வனிதா மேடம், வினொஜா, சப்பாத்திக்கு செய்யும்போது தண்ணீரே சேர்க்காமல் தக்காளியில் உள்ள நீரே வற்றும் அளவுக்கு வதக்கவேண்டும். அது தொக்கு போல இருக்கும். வெங்காயம் எண்ணையிலேயே வதங்கவேண்டும். அதுவும் நன்றாக இருக்கும்.
hello! Ramya It's very nice.
hello! Ramya
It's very nice. I like this chatini.My husband and my child like to eat different type of chatini. Thank for the different type of tomato chatini.
ரம்யா
ஹாய் ரம்யா...,இன்று உங்கள் சட்னி செய்து ருசித்து சாப்பிட்டு வருகின்றேன்.
மிகவும் நன்றாக இருந்தது.நிஜமாவே நாங்கள் செய்வதற்க்கு சற்றே வித்தியாசபடுகின்றது.
எனது நன்றியும்,வாழ்த்துக்களும் ரம்யா...
என்றும் அன்புடன்,
அப்சரா.
எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.