அர்த்தமே இல்லாத அரட்டை - 84

இதுவரை என்னைக்கு நம்ம அறுசுவையில் அரட்டை அர்த்தமுள்ளதா இருந்தது??? எப்பவும் பொழுது போகாம வந்து நல்ல இருக்கீங்களா, சமையல் ஆச்சா, சாப்ட்டாச்சா, தூங்கியாச்சா கேள்வி தானே ;) அதான் தலைப்பை மாத்திட்டேன். தொடருங்க கச்சேரியை.

தவமணி சாரே கேட்ட பிறகு எதுவும் சொல்லலேண்ணா நல்லா இருக்காது. :-) எதுவும் சொல்லக்கூடாதுன்னு எல்லாம் இல்லை. பெரிசா சுவாரஸியமா ஒண்ணும் இல்லை. கொஞ்சம் சினிமாத்தனம் இருக்கும்..

வசதி குறைவான, படிப்பில்லாத, வேலை வெட்டி இல்லாத, பார்க்க நல்லாவும் இல்லாத ஆளுக்கு பொண்ணு கொடுக்க எந்த அப்பாதான் முன்வருவாரு. அதே கதைதான் இங்கேயும். :-) பெரிய எதிர்ப்பு.

இதுதான் நடக்கும்னு தெரிஞ்சதால, கொஞ்சம் கொஞ்சமா அவங்க வீட்டில இருக்கிற அத்தியாவசிய பொருட்கள் (பருப்பு, மிளகாய் எல்லாம் இல்ல.. சர்டிபிகேட்ஸ், மார்க் ஷீட்ஸ், ரேசன் கார்டு... etc.) எல்லாத்தையும் ஒவ்வொண்ணா எடுத்து வந்து, இங்கே லாக்கர்ல வச்சாச்சு. :-) அப்புறம் ஒரு நல்ல நாள்ல, பக்கத்து ஊர்ல முறைப்படி ரெஜிஸ்தர் மேரேஜ் பண்ணி, ரெக்கார்ட்ஸ் எல்லாம் கிரியேட் பண்ணியாச்சு. ஊர்ல யாருக்கும் தெரியாது.

அதுக்கு அப்புறம் அலைபாயுதே நாயகி மாதிரி பொண்ணு அவங்க வீட்டுக்கு போய் வந்துக்கிட்டு இருந்தது. கொஞ்ச நாள் கழிச்சு அவங்க அப்பாவை கூப்பிட்டு, நான் நேரடியா பேசி, ரெஜிஸ்தர் மேரேஜ் நடந்த விசயத்தை சொல்லாம, பொண்ணு கேட்குறேன். ரெண்டாவது பாராவில சொல்லி இருக்கிறதுதான் நடந்துச்சு.

என்கிட்டே பொறுமையா பேசிட்டு, வீட்டுல போய் பெரிய பிரச்சனை பண்ணி, பொண்ணை கூட்டிட்டு வர ஆள் அனுப்பிட்டாரு. பொண்ணோ, வீட்டுக்கு போனா என்னை கொன்னு போட்டுடுவாங்கன்னு அழ, என்ன செய்யறதுன்னு ஒரு குழப்பம். எனக்கு ரெண்டு ஆப்சன் தான் இருந்துச்சு.. ஏற்கனவே ரெஜிஸ்தர் மேரேஜ் ஆனதால, பொண்ணை வீட்டுக்கு அனுப்பிட்டு, அப்புறம் சர்டிபிகேட்ஸ் எல்லாம் காட்டி கூட்டிக்கிட்டு வர்றது. இல்லேன்னா இப்போதைக்கு இந்த இடத்தை விட்டு வேற எங்காவது அழைச்சிக்கிட்டு போறது. வீட்டுக்கு அனுப்பி திருப்பி அழைச்சிட்டு வர்றது சட்டப்படி முடியும்னாலும், அனுப்பினா அங்க அடி உதை நிச்சயம் கிடைக்கும். எதாவது விபரீதமாக்கூட நடக்கலாம். அனுப்பாம இங்கேயே வீட்டிலேயே இருந்தா, தெருவில வந்து நின்னு நாலு பேர் பேச, சண்டை போடுற மாதிரி இருக்கும். அதனால இது எதுவுமே வேண்டாம், இப்ப வீட்டை விட்டு வெளியே போயிடுவோம்னு முடிவு பண்ணினோம். என் பக்கம் எல்லாருமே அதைத்தான் சொன்னாங்க.

அவங்க வீட்டுல இருந்து கூப்பிட்டு போக வந்த ஆட்களை முன்னாடி போகச் சொல்லி, இதோ பின்னாடி அனுப்பறேன்னு சாதாரணமா பேசி, அடுத்த ஒரு நிமிசத்துல போன் பண்ணி, வண்டி வரச்சொல்லி, தேவையான எல்லாத்தையும் அள்ளிப் போட்டு, அதிகப்பட்சம் அஞ்சுலேர்ந்து பத்து நிமிசத்துக்குள்ள ஊர் எல்லையை தாண்டியாச்சு.. நேரா மேட்டூர் அக்கா வீட்டுக்கு வண்டியை விட்டாச்சு. அடுத்த நாள் பவானி கோவில்ல வச்சு சம்பிரதாய முறைப்படி தாலி கட்டியாச்சு. அப்புறம் வழக்கம் போல கொஞ்சம் தேடல், கொஞ்சம் மோதல், கொஞ்சம் அழுகை.. கொஞ்ச நாள்ல எல்லாம் கடந்து போயி, இப்ப அவங்க எல்லாம் சிரிச்சி சந்தோசமாத்தான் இருக்காங்க... நானு..??

அண்ணா ரொம்ப சுவரசிமாக இருந்தது,இதில் உங்க இரண்டு பேர் மன்சில் உள்ள காதல் எவ்வளவு ஆழம் என்கிறதை காட்டுகிறது. என்க்கு தெரிந்து சிலபேர் தான் இவ்வள்வு உறுதியாக் இருக்கிறாங்க, அதில் நீங்களும், பாப்பியும் சேர்வீர்கள்.

வாழு இல்லை வாழவிடு

எதிர்பாக்காத நேரத்துல எதிர்பாதத்தை தருவதுதான் பாபு அண்ணா ஸ்டைலோ சூப்பர் அண்ணா .என்ன நீங்களும் சந்தோசமாக தானே இருக்கிறீர்கள் .பின்பு ஏன்( நானு )

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

என்னோடது நிச்சயிக்கபட்ட திருமணம்.நான் காலேஜுக்கு அப்ளிகேஷன் போட்டு காத்திருந்தா,கல்யாண அப்ளிகேஷன் வந்து நிக்குது,கான்டாயி விட்ல அம்மா,அப்பாகிட்ட ஒரே சண்ட.பொண்ணு பாக்க வந்த போது அவரோட மொகத்தகூட பாக்கல(வெக்கத்துல இல்லங்க)அப்புறம் ஒருவாரம் கழிச்சு போன் செய்தார்,சும்மாபேச அரம்பித்து லவும் தொத்திகிச்சு.கல்யாணத்துக்கு10 மாதம் இடைவெளி இருந்தது.நான் தமிழ்நாட்ல அவர் பெங்களூர்ல,எங்க சந்திப்பெல்லாம் போன்ல மட்டுமே(8வருஷத்துக்கு முனஎன்னோடது நிச்சயிக்கபட்ட திருமணம்.நான் காலேஜுக்கு அப்ளிகேஷன் போட்டு காத்திருந்தா,கல்யாண அப்ளிகேஷன் வந்து நிக்குது,கான்டாயி விட்ல அம்மா,அப்பாகிட்ட ஒரே சண்ட.பொண்ணு பாக்க வந்த போது அவரோட மொகத்தகூட பாக்கல(வெக்கத்துல இல்லங்க)அப்புறம் ஒருவாரம் கழிச்சு போன் செய்தார்,சும்மாபேச அரம்பித்து லவும் தொத்திகிச்சு.கல்யாணத்துக்கு10 மாதம் இடைவெளி இருந்தது.நான் தமிழ்நாட்ல அவர் பெங்களூர்ல,எங்க சந்திப்பெல்லாம் போன்ல மட்டுமே(8வருஷத்துக்கு முன்ன stdஎன்னோடது நிச்சயிக்கபட்ட திருமணம்.நான் காலேஜுக்கு அப்ளிகேஷன் போட்டு காத்திருந்தா,கல்யாண அப்ளிகேஷன் வந்து நிக்குது,கான்டாயி விட்ல அம்மா,அப்பாகிட்ட ஒரே சண்ட.பொண்ணு பாக்க வந்த போது அவரோட மொகத்தகூட பாக்கல(வெக்கத்துல இல்லங்க)அப்புறம் ஒருவாரம் கழிச்சு போன் செய்தார்,சும்மாபேச அரம்பித்து லவும் தொத்திகிச்சு.கல்யாணத்துக்கு10 மாதம் இடைவெளி இருந்தது.நான் தமிழ்நாட்ல அவர் பெங்களூர்ல,எங்க சந்திப்பெல்லாம் போன்ல மட்டுமே(8வருஷத்துக்கு முன்ன stdbilla நெனச்சு பாருங்க)மணிகனக்கா ஒன்னுயில்லாத விசயத்த பேசுவோம்.

வாழ்ந்து மறையாதே,
மறைந்தும் வாழ்ந்திரு.
பிரியமுடன்
பிரபா.

அண்ணா உண்மையிலே சுவரஸ்யமாதான் இருந்தது. அந்த 5லிருந்து 10 நிமிடம் ரொம்ப திரிலிங்கான நிமிடம் இல்ல. அது என்னா நானு? னு முடிச்சீருக்கிங்க. நீங்க ரொம்ப ரொம்ப சந்தோசமாயிருக்கிங்க அதான சொல்ல வந்திங்க.

உன்னை போல பிறரையும் நேசி.

பிரபா மாற்று ல கிளிக் பண்ணி நீங்க டைப் பண்ணியதை சரி பண்ணுங்க .

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

சுகந்தி சொல்வது போல ஒரு சிலர்தான் உறுதியாக நின்று காதலையும், காதலில் பிடித்தவளையும் கரம் பிடிக்கிறார்கள். எல்லாம் சரி, [நானு] இதற்கென்ன அர்த்தம். எப்படியோ இன்று உங்களுக்கு அர்ச்சனையும், பூஜையும் உண்டு.

அன்புடன்
THAVAM

இப்ப கேக்கறக்கு நல்லா இருந்தாலும், அது நடந்த நிமிடங்கள் கண்டிப்பா கஷ்டமா தான் இருந்து இருக்கும். எது எப்படியோ, எல்லா கஷ்டங்களையும் மீறி இப்ப எல்லாரும் சமாதனம் ஆயிட்டாங்க...

நானு ------- இதுக்கு பதில் நான் சொல்றேன் அண்ணா, இவளோ கஷ்டங்களையும் மீறி கல்யாணம் பண்ணி இப்ப, பாபுங்கர ஒரு குடும்பஸ்தன், அன்பான மனைவியின் கணவர், குட்டி தேவதைக்கு தந்தை..... அடேகப்பா எவளோ கிடைச்சு இருக்கு....

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

என்னோடது நிச்சயிக்கபட்ட திருமணம்.நான் காலேஜுக்கு அப்ளிகேஷன் போட்டு காத்திருந்தா,கல்யாண அப்ளிகேஷன் வந்து நிக்குது,கான்டாயி விட்ல அம்மா,அப்பாகிட்ட ஒரே சண்ட.பொண்ணு பாக்க வந்த போது அவரோட மொகத்தகூட பாக்கல(வெக்கத்துல இல்லங்க)அப்புறம் ஒருவாரம் கழிச்சு போன் செய்தார்,சும்மாபேச அரம்பித்து லவும் தொத்திகிச்சு.கல்யாணத்துக்கு10 மாதம் இடைவெளி இருந்தது.நான் தமிழ்நாட்ல அவர் பெங்களூர்ல,எங்க சந்திப்பெல்லாம் போன்ல மட்டுமே(8வருஷத்துக்கு முன்ன நெனச்சு பாருங்க)மணிகனக்கா ஒன்னுயில்லாத விசயத்த பேசுவோம்.னச்சு பாருங்க)மணிகனக்கா ஒன்னுயில்லாத விசயத்த பேசுவோம்.

வாழ்ந்து மறையாதே,
மறைந்தும் வாழ்ந்திரு.
பிரியமுடன்
பிரபா.

அட்மின் அண்ணா,
உங்கள் பதிவிற்கு நன்றி. நான் தோழிகளுக்கு பதிவு கொடுக்காமலில்லை. எனது முந்தைய பதிவினை எடுக்க தெரியவில்லை. மன்னிக்கவும். அதனால், தான் பதிவு கொடுக்கவில்லை. சின்ன சின்ன சந்தேகங்கள் பகுதிக்கு எப்படி செல்வது. இந்த லிங்க் பத்மா அக்காவிடம் பெற்றேன்.

அன்புடன்
நூரி சையத்

அகத்தின் அழகு முகத்திலே!....

என்றும் அன்புடன்
நூரி சையத்

மேலும் சில பதிவுகள்