அர்த்தமாக மட்டுமே பேசும் அரட்டை -85

அர்த்தமில்லாத அரட்டை 233 பதிவுக்கு மேல போயிடுச்சு எல்லோரும் கல்யாண கலாட்டாவில் லயித்து விட்டீர்கள்.இனி இங்க வந்து தொடருங்கள் கலாட்டாவை:)

ஹாய் சுவர்ணா. என்னப்பா இன்னிக்கு காணமல் போய்விட்டாய். உன் அனுபத்தை சொல்லுப்பா.

வாழு இல்லை வாழவிடு

ஹாய் ஸ்வர்ணா அது எப்படி நீங்க மட்டும் தப்பிகலாம் நீங்களும் உங்க அனுபவத்தை பகிர்ந்துக்கோங்க. காலையில் போய்ட்டு இப்பதான் வந்து இருக்கீங்க

"அர்த்தமே இல்லாத அரட்டை" ன்னு வனி போட்டாலும் போட்டாங்க, பயங்கர அர்த்தத்தோட அந்த அரட்டை ஜோரா போய்டுச்சு. நம்மையும் மறந்து 235 பதிவு போடுச்சு.

நீங்க தலைப்ப மாத்துங்க ஸ்வர்ணா, நாம அர்த்தம் இல்லாமலா பேசறோம்?

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

இன்னிக்கு எங்கேப்பா கல்ப்ஸ், வந்து அட்னஸ் கொடுத்துவிட்டு ஆளே காணவில்லை.

வாழு இல்லை வாழவிடு

ஸ்வர்ணா மாட்டினிங்களா? சொல்லுங்க தோழிகள் பாவம் தான் என்னா பண்ணுரது. தோழிகளே அவுங்க கதை ரொம்ப சுவரஸ்யமா இருக்கும் ஹிஹிஹி சொல்லுங்க ஸ்வர்ணா சொல்லுங்க.

உன்னை போல பிறரையும் நேசி.

தலைப்பை மாத்துனதுக்கு ரொம்ப நன்றி ஸ்வர்ணா, இப்ப நீங்க உங்க கதை சொல்ல தொடங்கலாம்.. நாங்க காத்து இருக்கிறோம்.

சுமி - நான் என்ன கதை சொல்ல? எனக்கு திருமணம் நடந்த பின்னாடி கண்டிப்பா வந்து, எல்லார்கிட்டயும் சொல்றேன்.

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

யாருப்பா அந்த தேவி என்னத்தயோ சொல்லு சொல்லுன்னு சொல்றாங்க எனக்கு ஒன்னுமே புரியல :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

சுகி அதைதான் நான் சொன்னேன் கல்யாணம் முடிந்தவுடன் உன் அனுபவத்தை எழுத உனக்கு 2 அரட்டையோட தலைப்பு வேணும்( அதாவது 2 folder)

வாழு இல்லை வாழவிடு

ஸ்வர்ண நேத்து நீங்க வந்தீன்கப்பா ஆனா எனக்கு தெரியாது நான் போயிட்டேன் .சாரிப்பா

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

அரட்டை 84 ல அண்ணா பதிவு போட்டு இருக்கார்

/////தவமணி சாரே கேட்ட பிறகு எதுவும் சொல்லலேண்ணா நல்லா இருக்காது. :-)

எதுவும் சொல்லக்கூடாதுன்னு எல்லாம் இல்லை. பெரிசா சுவாரஸியமா ஒண்ணும் இல்லை. கொஞ்சம் சினிமாத்தனம் இருக்கும்..

வசதி குறைவான, படிப்பில்லாத, வேலை வெட்டி இல்லாத, பார்க்க நல்லாவும் இல்லாத ஆளுக்கு பொண்ணு கொடுக்க எந்த அப்பாதான் முன்வருவாரு. அதே கதைதான் இங்கேயும். :-) பெரிய எதிர்ப்பு.

இதுதான் நடக்கும்னு தெரிஞ்சதால, கொஞ்சம் கொஞ்சமா அவங்க வீட்டில இருக்கிற அத்தியாவசிய பொருட்கள் (பருப்பு, மிளகாய் எல்லாம் இல்ல.. சர்டிபிகேட்ஸ், மார்க் ஷீட்ஸ், ரேசன் கார்டு... etc.) எல்லாத்தையும் ஒவ்வொண்ணா எடுத்து வந்து, இங்கே லாக்கர்ல வச்சாச்சு. :-) அப்புறம் ஒரு நல்ல நாள்ல, பக்கத்து ஊர்ல முறைப்படி ரெஜிஸ்தர் மேரேஜ் பண்ணி, ரெக்கார்ட்ஸ் எல்லாம் கிரியேட் பண்ணியாச்சு. ஊர்ல யாருக்கும் தெரியாது.

அதுக்கு அப்புறம் அலைபாயுதே நாயகி மாதிரி பொண்ணு அவங்க வீட்டுக்கு போய் வந்துக்கிட்டு இருந்தது. கொஞ்ச நாள் கழிச்சு அவங்க அப்பாவை கூப்பிட்டு, நான் நேரடியா பேசி, ரெஜிஸ்தர் மேரேஜ் நடந்த விசயத்தை சொல்லாம, பொண்ணு கேட்குறேன். ரெண்டாவது பாராவில சொல்லி இருக்கிறதுதான் நடந்துச்சு.

என்கிட்டே பொறுமையா பேசிட்டு, வீட்டுல போய் பெரிய பிரச்சனை பண்ணி, பொண்ணை கூட்டிட்டு வர ஆள் அனுப்பிட்டாரு. பொண்ணோ, வீட்டுக்கு போனா என்னை கொன்னு போட்டுடுவாங்கன்னு அழ, என்ன செய்யறதுன்னு ஒரு குழப்பம். எனக்கு ரெண்டு ஆப்சன் தான் இருந்துச்சு.. ஏற்கனவே ரெஜிஸ்தர் மேரேஜ் ஆனதால, பொண்ணை வீட்டுக்கு அனுப்பிட்டு, அப்புறம் சர்டிபிகேட்ஸ் எல்லாம் காட்டி கூட்டிக்கிட்டு வர்றது. இல்லேன்னா இப்போதைக்கு இந்த இடத்தை விட்டு வேற எங்காவது அழைச்சிக்கிட்டு போறது. வீட்டுக்கு அனுப்பி திருப்பி அழைச்சிட்டு வர்றது சட்டப்படி முடியும்னாலும், அனுப்பினா அங்க அடி உதை நிச்சயம் கிடைக்கும். எதாவது விபரீதமாக்கூட நடக்கலாம். அனுப்பாம இங்கேயே வீட்டிலேயே இருந்தா, தெருவில வந்து நின்னு நாலு பேர் பேச, சண்டை போடுற மாதிரி இருக்கும். அதனால இது எதுவுமே வேண்டாம், இப்ப வீட்டை விட்டு வெளியே போயிடுவோம்னு முடிவு பண்ணினோம். என் பக்கம் எல்லாருமே அதைத்தான் சொன்னாங்க.

அவங்க வீட்டுல இருந்து கூப்பிட்டு போக வந்த ஆட்களை முன்னாடி போகச் சொல்லி, இதோ பின்னாடி அனுப்பறேன்னு சாதாரணமா பேசி, அடுத்த ஒரு நிமிசத்துல போன் பண்ணி, வண்டி வரச்சொல்லி, தேவையான எல்லாத்தையும் அள்ளிப் போட்டு, அதிகப்பட்சம் அஞ்சுலேர்ந்து பத்து நிமிசத்துக்குள்ள ஊர் எல்லையை தாண்டியாச்சு.. நேரா மேட்டூர் அக்கா வீட்டுக்கு வண்டியை விட்டாச்சு. அடுத்த நாள் பவானி கோவில்ல வச்சு சம்பிரதாய முறைப்படி தாலி கட்டியாச்சு. அப்புறம் வழக்கம் போல கொஞ்சம் தேடல், கொஞ்சம் மோதல், கொஞ்சம் அழுகை.. கொஞ்ச நாள்ல எல்லாம் கடந்து போயி, இப்ப அவங்க எல்லாம் சிரிச்சி சந்தோசமாத்தான் இருக்காங்க... நானு..??

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

மேலும் சில பதிவுகள்