தேதி: December 15, 2010
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
தோசை மாவு - தேவைக்கு
வேக வைத்த மக்காச்சோளம் - அரை கப்
வெங்காயம் - 2 (மெல்லியதாக கீரியது)
துருவிய சீஸ் - ருசிக்கு
உருளைக்கிழங்கு - 2
கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு - தாளிக்க
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
இஞ்சி - சிறிது (விரும்பினால்)
முந்திரி - 5 (விரும்பினால்)
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தக்காளி - பாதி (விரும்பனால்)
உருளையை வேக வைத்து பொடியாக நறுக்கவும். வெங்காயம், தக்காளி, இஞ்சி, பச்சை மிளகாய், முந்திரியையும் நறுக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கவும். இதில் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பின் வெங்காயம், இஞ்சி சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் முந்திரி, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். பின் தக்காளி சேர்த்து வதக்கவும்.

இதில் உருளை, உப்பு சேர்த்து நன்றாக வதக்கி வைக்கவும்.

கடைசியாக வேக வைத்த கார்ன் சேர்த்து பிரட்டி எடுக்கவும்.

வழக்கம் போல் தோசை ஊற்றி, எண்ணெய் விட்டு மூடி வேக விடவும். தோசை வெந்ததும் அதன் நடுவே ஒரு பாதியில் உருளை கார்ன் கலவை சிறிது, துருவிய சீஸ் தூவி மடித்து சூடாக பரிமாறவும்.

Comments
சத்தான தோசை வனி
பாத்தாலே சத்தான தோசைன்னு தெரியுது!!!
இதுல உருளை கிழங்கு இல்லாம பண்ணலாமா? ஏன்னா, நாம முதல்லையே காய்கறி சேத்றோம் இல்ல, தக்காளி, வெங்காயம் ன்னு, உருளையும் சேத்தனுமா?
சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***
சூப்பர் வனி
வனி சூப்பரான குறிப்பை கொடுத்து அசத்தியிருக்கீங்க.
இது குழந்தைகளுக்கு பிடிக்குதோ இல்லையோ எனக்கும் என் கணவருக்கும் பிடிக்கும்.கார்ன் இருக்குல்ல.அது எங்க ஃபேவரட்டாக்கும்.
வாழ்த்துக்கள் வனி.
என்றும் அன்புடன்,
அப்சரா.
எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.
வனி அக்கா...
நலமா? நீங்கள்? குழந்தைகளுக்கு சத்தான தோசை குடுத்து இருக்கிங்க..
வாழ்த்துக்கள்...நன்றி.
வாழு, வாழவிடு..
வனிதா
பொதுவா பிள்ளைகளுக்கு சீஸ் &கார்ன் பிடிக்கும்.அதை வச்சு ஒரு டிஷ் அழகா ப்ரசண்ட் பண்ணி இருக்கீங்க,பாராட்டுக்கள்,நான் நிச்சயமா செய்வேன் என் பொண்ணுக்கு இந்த இரண்டுமே பிடிக்கும்.
வனி
கலக்கலா இருக்கு கார்ன் தோசை....நைஸ் ஐடியா..போட்டோவும் தெளிவா இருக்கு...தங்கையும் குழந்தையும் நலமா?
தொடர்ந்து நல்ல குறிப்புகள் தருவது பார்த்து மகிழ்ச்சி..ஒவ்வொரு முறையும் பின்னூட்டம் தர வரும்போது கரெக்டா தமிழ் ஃபாண்ட்ல பிரச்சனை இருக்கும் ..அப்புறம் மறுபடி கொடுக்க மறந்துவிடும் ...
இம்முறை நேரத்திற்கு கொடுக்க முடிந்தது...
வாழ்த்துக்கள் வனி...
அன்புடன்
இளவரசி
புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.
meena
hi really its very easy to make.thanks for this receipe.
வனிதா மேடம், சூப்பர்ப் தோசை,
வனிதா மேடம், சூப்பர்ப் தோசை, கண்டிப்பா try பண்றேன்.
கார்ன் தோசை
குழந்தைகள் மட்டுமில்லை, வனி, பெரிய குழந்தையும் விரும்பி சாப்பிட்டாங்க.
நன்றி நன்றி நன்றி
குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)
தாமதமான பதிலுக்கு தோழிகள் எல்லாம் மன்னிகனும்.
சுகந்தி... உருளை இல்லன்னா ருசி வித்தியாசப்படும். கூடவே மசாலா போல் கிடைக்காது. நம்ம தக்காளி கொஞ்சமா தானே சேர்ர்க்கிறோம். கூடவே குழந்தைகளுக்கு உருளை சத்தானதாச்சே!! ட்ரை பண்ணி பாருங்க, உருளை இல்லாம சுவய் பிடிக்குதான்னு ;) மிக்க நன்றி.
அப்சரா... மிக்க நன்றி. அவசியம் செய்து சொல்லுங்க. எனக்கும் கார்ன் ரொம்ப விருப்பம்.
ருக்சனா... மிக்க நன்றி. நானும் குழந்தைகளும் நலமே. நீங்க?
ரீம்.. மிக்க நன்றி. நானும் என் பொண்ணுக்காக தான் இப்படிலாம் வித்தியாசமா ட்ரை பண்ணிகிட்டு இருக்கேன். :)
இளவரசி.. மிக்க நன்றி. நீங்க பின்னூட்டம் கொடுக்கனும் நினைச்சதே மகிழ்ச்சி தான். தங்கையும் குழந்தையும் நலம். நன்றி.
மீனா... மிக்க நன்றி :)
ரம்யா.. மிக்க நன்றி. அவசியம் ட்ரை பண்ணிட்டு சொல்லுங்க.
கோமு... மிக்க நன்றி. //பெரிய குழந்தையும் விரும்பி சாப்பிட்டாங்க// - ஹிஹி...
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வனி
நல்ல சத்தான குறிப்பு. செய்து பார்த்துட்டு சொல்றேன் வனி:) நடுவில் வைப்பதை தனியாவே சாப்பிடலாம் போலவே:) வித்தியாச வித்தியாசமா நல்ல குறிப்புகள் தறீங்க வனி, வாழ்த்துக்கள்
அன்புடன்
பவித்ரா