வணக்கம் தோழிகளே,
உங்களுக்காக வித்தியாசமான ஒரு சட்னி வகை:
கடாய் சட்னி
தேவையான பொருட்கள்:
தக்காளி - 4
வெங்காயம் - 1
தனியா - 1 டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
வரமிளகாய் - 4
இஞ்சி - 1 துண்டு (விருப்பட்டால்)
பூண்டு - 4 பல் (விருப்பபட்டால்)
கறிவேப்பிலை - சிறிது
உப்பு, எண்ணை - தேவைக்கேற்ப
செய்முறை:
வாணலியில் சிறிது எண்ணை விட்டு கடலை பருப்பு, தனியா, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை, இவைகளை சிவக்க வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
பிறகு வாணலியில் சிறிது எண்ணை விட்டு, நறுக்கிய வெங்காயம் போட்டு வதங்கியதும் நறுக்கிய தக்காளியைப் போட்டு வதக்கவும். தக்காளி வதங்கியதும், தேவையான உப்பு சேர்த்து வறுத்த பருப்பு வகைகளுடன் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
விருப்பபட்டால் இஞ்சி, பூண்டு வதக்கும்போது சேர்த்து வதக்கி அவற்றுடன் சேர்த்து அரைக்கவும்.
ருசியான கடாய் சட்னி தயார்.
இவை இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள ருசியாக இருக்கும்.
அனைவரும் செய்து பாருங்கள்.
பிரியா இப்படி இழையில்
பிரியா
இப்படி இழையில் குறிப்பை பதிவிட்டால் சில நாட்கள் இருக்கும், சிலர் மட்டுமே படித்து பயன் பெறுவர்....புதிய இழைகள் வரும் போது பழைய இழை காணமல் போகும். நீங்கள் உங்கள் குறிப்புகளை (ஏற்கனவே அறுசுவையில் இருக்கிறதா என்று பார்த்து விட்டு) அறுசுவை அட்மின் அவர்களின் முகவரிக்கு (arusuvaiadmin@gmail.com) அனுப்பினால், அதில் பிழை ஏதும் இல்லை என்றால் பிரசுரிப்பார்.
லாவண்யா
லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!
tharun
super answer priya sister ? i like it
argent please
kadaigalil virkum masala sundal yarukkavathu theriyma?ean baby vendum endru adam pidikiran.adikadi kadaigalil vangi kodukka mudiyathu.veetileye prepare seiyalam endru ninaikiren...therinthavargal sollavum please................
ஹாய் செளந்தர்யா
சென்னா ரெட் கலர்ல இருக்கும் ல அதான கேட்குறீங்க
sundal
rotora kadaigali kidaikume.athil mixer,pattani,onion,carrot...pottu kodupangale..
hai
hello friend irukeengala?website therinjal kodunga..
hai nabisha
reply please...
செளந்டர்யா
ஹாய் தமிழ் தெரியாதா?பா
செளந்தர்யா
சாரி பா ரெட் கலர்ல சென்னா சுண்டல் தான் எனக்கு தெரியும்
hai
amam friend theriyathu...website therinja sollungal...