கதாசிரியர்களை வாழ்த்தலாம் வாங்க

அன்புத் தோழிகளே,

நம் கதை மலரில் பிரசுரமாகியிருக்கும் கதைகளின் எண்ணிக்கை நூறைத் தாண்டி விட்டது.

அருமையான கதைகளைத் தந்து கொண்டிருக்கும் நம் அறுசுவை கதாசிரியர்களை வாழ்த்தலாம் வாங்க!

இதுவரை அறுசுவை கதை மலரில் பிரசுரமாகியிருக்கும் கதைகள் 103

இவற்றைத் தந்த கதாசிரியர்கள் 24 பேர்

ஃப்ளோரா ஜீவா 1
அப்சரா 2
அனிதா 2
அனிதா சுஜி 1
ஆமினா 13
இஷானி 1
கல்பனா 13
கோமு 3
தேன்மொழி 4
பவித்ரா 2
புனிதா 1
மீரா கிருஷ்ணன் 3
முத்து கவி 1
மெர்ஜானா 2
மோகனா ரவி 1
யோகராணி 9
ரங்கலெஷ்மி லோகேஷ் 4
ரஹீமா பைசல் 1
வளர்மதி 2
வனிதா 4
வாணி 2
ஜெ மாமி 13
ஜெயலஷ்மி 2
ஷேக் 16

முத்து முத்தான கதைகளைத் தந்த அத்தனை எழுத்தாளர்களுக்கும் பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!

எங்கே, எழுத்தாளர்கள் எல்லோரும் வாங்க! உங்க கதைகள் பிரசுரமானபோது, எப்படி உணர்ந்தீர்கள், யார் உங்களை முதல் முதலில் பாராட்டினாங்க, வீட்டில் உங்களை ஊக்குவிச்சாங்களா, கதைகளுக்கான ஐடியா எப்படி கிடைச்சுது, ஏற்கனவே பத்திரிக்கைகளில் எழுதியிருக்கீங்களா? எல்லாம் சொல்லுங்க!

நாளைக்கே நீங்க எல்லோரும் மிகவும் பிரபலமாகி, டி.வி.யில் எல்லாம் பேட்டி கொடுக்கிறதுக்கு முன்னால, நாங்க இங்கே உங்களை பேட்டி எடுக்கிறோம்.

வந்து உங்கள் கதை எழுதிய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்க!

அன்புடன்

சீதாலஷ்மி

எல்லா கதாசிரியர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். இன்னும் பல பல அற்புதமான கதைகளை தரணும்ன்னு எல்லார் சார்பிலேயும் கேட்டுக்கறேன். எல்லா கதையும் தனித்துவம் வாய்ந்து இருக்கிறது...உங்களிடம் உள்ள தனித்திறமை மேலும் உயர வாழ்த்துக்கள்
உங்களது சந்தோஷங்களை தெரிந்து கொள்ள ஆசையா இருக்கோம். சீக்கரம் வந்து சொல்லுங்க கதாசிரியர்களா

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

i am also waiting to know your experience.as soon as come and share your experience. with regards g.gomathi.

கதாசிரியர்களே! இன்னும் நிறைய பயனுள்ள,சமுதாய முன்னேற்றத்திக்கு உறுதுணையாக இருக்கும் பல கதைகளை எழுதி சாதனை படைக்க வாழ்த்துக்கள்...............

உன்னை போல பிறரையும் நேசி.

அனைத்து கதாசிரியர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.இதுபோல் இன்னும் பலனூறு கதைகளை தரவேண்டும்.உங்கள் திறமைகள் மேலும் மேலும் உயர வாழ்த்துக்கள்:)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

எத்தனை அருமையான கதைகள் எழுத்து தெளிவு படிப்பதர்க்கு எளிமை என்று அழகிய கதைகளை எங்களுக்கு கொடுத்த கதாசிரியர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் .

அன்புடன்
ஸ்ரீ

சீதாம்மா, மெனக்கெட்டு நாங்கள் எழுதிய கதைகளின் புள்ளி விவரங்களையும் தந்து, எங்களை ஊக்குவித்து உற்சாகப்படுத்த தனி இழையும் தொடங்கி உள்ளீர்கள். அதற்கே என் முதல் நன்றியை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

எங்களை கதை எழுதி தூண்டிய மற்ற தோழிகளுக்கும், நாங்கள் சோர்வுறாமல் எங்களை பலவாறு பாராட்டி உற்சாகத்திற்கு மேல் உற்சாகமூட்டி வரும் அறுசுவையின் அனைத்து தோழிகளுக்கும், கதையில் எவ்வித பாகுபாடுமின்றி அனைத்து கதைகளையும் வெளியிட்டு எல்லாவிதங்களிலும் எங்களை அரவணைத்து ஊக்கமளித்து வரும் அட்மின் அண்ணாவர்களுக்கும் என் கோடானு கோடி நன்றிகள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

எல்லா கதாசிரியர்களுக்கும் என் பாராட்டுகளும் வாழ்த்துக்களும்..
நான் எல்லோருடைய கதைகளையும் படித்தது இல்லை நேரம் கிடைக்கும் போது படித்துக்கொண்டு வருகிறேன்..
நீங்கள் அனைவரும் இன்னும் நிறைய கதைகளை நல்ல கருத்துக்களோடு கொடுக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்..
இந்த இழையை ஆரம்பித்த சீத்தாம்மாவுக்கு என் நன்றி.....அன்புடன் ருக்சானா..

வாழு, வாழவிடு..

எல்லா கதாசிரியர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுகளும்
உங்களிடம் உள்ள தனித்திறமை மேலும் உயர வாழ்த்துக்கள்

சீதாலஷ்மி அக்கா, ரொம்ப நாளைக்கு பிறகு இந்த இழை மூலம் சந்திப்பதில் மகிழ்ச்சி. இந்த இழைக்கு நன்றி. நான் என் ப்ளாக்கில் நிறைய எழுதுவேன். இமா என்னை அறுசுவைக்கு கதை எழுதி அனுப்ப சொல்லி நிறைய ஊக்கம் கொடுத்தார்கள். முதலில் பாராட்டியவரும் அவரே. அவர் தனிப்பட்ட முறையில் அனுப்பிய மின்னஞ்சலை இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறேன். பிறகு என் கணவர், என் பெற்றோர், என் சகோதரி, என் ப்ளாக்கிற்கு வருகை தரும் என் இனிய நட்புகள், அறுசுவைத் தோழிகள் என்று எல்லோரிடமிருந்தும் பாராட்டுகள் கிடைத்தன.
கதைக்கான ஐடியா - என் பாட்டிதான். அவர் உயிரோடு இல்லை. அவர் இறக்கும் நேரம் நான் அருகில் இல்லை. அந்தக் குறை எப்போதும் எனக்கு இருக்கு. அதையே கருவாக கொண்டு, ஒரு ஆண் சொல்வது போல எழுதினேன்.

பத்திரிகைக்கு எழுதிய அனுபவம் இதுவரை இல்லை. ஆனால், நான் ப்ளாக்கில் எழுதியது ஒரு வார இதழில் வெளிவந்துள்ளது.
எதிர்காலத்தில் பிரபலமாவேனோ என்று தெரியவில்லை. நிறைய கடமைகள் காத்திருக்கின்றன. அவற்றை எல்லாம் நிறைவேற்றி, என் பிள்ளைகள் வளர்ந்த பின்னர் அது சாத்தியமாகுமோ தெரியவில்லை.

அறுசுவை கதாசிரியர்களுக்கு என் வாழ்த்துக்கள்.
ஆமி, 13 கதைகள் எழுதி இருக்கிறீங்க. வாழ்த்துக்கள்.
ஜெ.மாமி கதைகள் இப்போது எழுதுவதில்லையா?
எல்லோர் கதைகளும் படிப்பதுண்டு ஆனால், பின்னூட்டம் கொடுக்க நேரம் வருவதில்லை. யாரும் கோபித்திட வேண்டாம்.

அன்புடன்
வாணி

மேலும் சில பதிவுகள்