பருத்திப்பால்

தேதி: December 18, 2010

பரிமாறும் அளவு: 4 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (3 votes)

 

பருத்தி விதை - 2 கைபிடி
கருப்பட்டி - 100 கிராம்
தேங்காய் பால் - அரை மூடி
சுக்கு - அரைவிரளளவு
அரிசி மாவு - 2 ஸ்பூன்
ஏலக்காய் - 2


 

பருத்தி விதையை முதல் நாள் இரவு தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். காலையில் ஊறிய விதையை மிக்சியில் சிறிது தண்ணீர் விட்டு அரைத்து பால் எடுக்க வேண்டும்.
கருப்பட்டியை தூளாக்கி ஒரு கப் தண்ணீர் விட்டு காய்ச்சி வடிகட்டி கொள்ளவேண்டும் .ஓரு பாத்திரத்தில் பருத்திவிதை பாலை ஊற்றி காய்ச்ச வேண்டும் .
ஒரு கொதி வந்த உடன் கருப்பட்டி பாலையும் தேங்காய் பாலையும் ஊற்றி காய்ச்ச வேண்டும்.
இந்த கலவை கொதிக்கும் போது அரிசி மாவில் சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து அக் கலவையை கொதிக்கும் பருத்தி பாலில் சேர்த்து கரண்டியால் தொடர்ந்து இரண்டு நிமிடம் கிளறி பாத்திரத்தை இறக்கி விடவேண்டும்.
சுக்கை சிறிது வறுத்து பொடியாக்கி ,ஏலக்காயை பொடியாக்கி இறுதியில் சேர்க்க வேண்டும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

இந்த பருத்திப்பால் ஊரில் இருக்கும்போது குடித்தது ..வீட்டில் செய்தது இல்லை.. கடையில் வாங்கியது சுவையை நினைவுபடுத்திவிட்டீர்கள்....வாழ்த்துக்கள்..

வாழு, வாழவிடு..

உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.சவூதியில் பருத்திவிதை கிடைக்காது...என்ன செய்றது,இந்தியா வரும்பொழுது ஞாபகமா குறிப்பை செய்து பார்த்து சுவைத்திடுங்க ருக்சானா.

radharani

ராதா பருத்திப்பால் ஊருக்குப்போனா சாப்பிடுவேன் இப்போ ஞாபகப்படுத்திட்டிங்க
இங்கு கிடைத்தால் செய்துபார்க்கிறேன் நன்றி வாழ்த்துக்கள் விருப்ப பட்டியலில் சேர்த்துட்டேன்

குளிர்காலத்திற்கு பருத்திப்பால் மிகவும் நல்லது.பருத்திவிதை கிடைத்தால் குறிப்பை செய்து பாருங்கள். மிக்க நன்றி.

radharani