பட்டிமன்றம்--31 ***மனித மனம் அடிமையாவது அன்புக்கா?புகழுக்கா?***

அறுசுவையை பிரகாசமாய் வைத்திருக்கும் ஆதவனுக்கும்,

பல திறமைகளை தன்னுள் வைத்து கொண்டு நட்சத்திரங்களாய் சுடர்விடும்

அருமையான நட்பு உள்ளங்கள் அனைவருக்கும் அன்பார்ந்த வணக்கம்

‘’இன்றைய பட்டிமன்ற தலைப்பு ,நம் அன்புத்தோழி திருமதி .வனிதா அவர்கள்

கொடுத்துள்ளது ( நல்ல தலைப்புக்கு நன்றி வனிதா )

“ மனித மனம் அடிமையாவது அன்புக்கா? புகழுக்கா?”

நம் வாழ்க்கை சக்கரம் எப்போதும் சுற்றி கொண்டே இருப்பது

அன்புக்கும் ,புகழுக்கும்தான்..

இரண்டையுமே நாம் விரும்பினாலும்,இரண்டில் கட்டிபோட்ட நாய்க்குட்டியாய்

கட்டுப்பட்டு நம் மனசு சுருண்டு கிடப்பது அன்பிடமா?புகழிடமா?

பட்டியின்விதிமுறைகள்
*******************************
1. பட்டியில் வாதிடுபவர்களை பெயரிட்டு வாதிடக்கூடாது
2. எந்த ஜாதி - மதம் - கட்சி குறித்தும் பேசக் கூடாது
3. இந்த பொதுமன்றத்தில் நாகரீகமான பேச்சே அவசியமான ஒன்று.
4. தமிழில் தரப்படும் வாதங்கள் மட்டுமே ஏற்கப்படும்.
5. பட்டியில் வாதங்கள் மட்டுமே ஏற்கப்படும். அரட்டைகளை அல்ல.
6. நடுவரின் தீர்ப்பே இறுதியானது. அதை குறித்து வாதங்கள்
இருக்கக்கூடாது. கருத்துக்கள் இருக்கலாம்.
7. அறுசுவையின் பொது விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்

வாங்க தோழிகளே ,வந்து உங்கள் கருத்துக்கணைகளை காயமின்றி

வீசிகொள்ளுங்கள்..

அன்புடன்
இளவரசி

நடுவரே... பட்டி என்ன ஆயிற்று என்று ஓடோடி வந்தேன்... தலைப்பு, அதுவும் என்னுடைய தலைப்பை கண்டதும் ஆனந்தம் தாங்கல. :) நேரத்துக்கு துவக்கியமைக்கு மிக்க நன்றி. தலைப்பை மாத்த சொல்ல நினைச்சேன்... நீங்களே மாத்திட்டீங்க. நன்றி.;) சீக்கிரமே வாதத்தோடு ஓடி வந்துடறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஓரே நேரத்தில் பதிவு போட்டிருக்கோம்..:)

முதல் ஆளா வந்ததுக்கு

இந்தாங்க "சூடான தேநீரும்,சுவையான பக்கோடாவும் சாப்பிடுங்க"

தோழிகளே,சீக்கிரம் வர்றவங்களுக்குதான் இதெல்லாம்..:-

லேட்டா வந்தா (நானே காலி பண்ணிடுவேன் :-)

அப்புறம் சர்க்கரையில்லா கிரீன் டீதான் :-)

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

இப்ப தான் பட்டிமன்ற சிறப்பு இழை பாத்துட்டு வந்தேன், அதுக்குள்ள தலைப்பு முடிவாயிடுச்சு ... ரொம்ப சந்தோசம். சீக்கரமே எந்த பக்கம்ன்னு முடிவு பண்ணிட்டு வாதங்களோடு வருகிறேன்....

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

மனித மனம் அடிமையாவது அன்புக்கே'னு முதல் ஓட்டு போடுறேன். சூடான தேநீருக்கும்,சுவையான பக்கோடாவுக்கும் மிக்க நன்றி. சாப்பிட்டு தெம்பா வரேன்.

ஒரு குழந்தை பிறந்த நிமிடத்தில் இருந்து கடைசி காலம் வரை தாயின் அன்புக்கு அடிமை. இடையே அன்பாக பழகும் மனிதரிடம் நட்போ, காதலோ ஏற்படும். வாழ்க்கை துணையாக வருபவரிடம் ஏன் மனம் கட்டுப்பட்டு கிடைக்கிறது?? அவர் காட்டும் அன்புக்கே.

புகழும் ஒருவரை யாரும் காதலித்து கை பிடிப்பதில்லை... அன்பான உள்ளத்தையே நேசித்து கை பிடிக்கிறார்கள். அன்புக்காக தானே நன்பர்களிடம் விட்டுக்கொடுக்கிறோம்? தாயின் அன்பு கிடைக்காத குழந்தை வாழ்வின் எந்த உயரத்தை தொட்டாலும் உள் மனதில் அந்த பாசத்துக்கான ஏக்கம் இருக்கும். அவர்கள் வாழ்க்கை முழுமை அடைவதில்லை. அன்பு காட்ட யாரும் இல்லாத போது இத்தனை புகழின் உச்சியை தொட்டு என்ன பயன் என்று தானே ஏங்கும்? அதனால் நடுவரே அன்புக்கே மனம் கட்டுப்படும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

i want to join the pattimannram how ican type in tamil

சீக்கிரமா வந்து பதிவு போட்டிருக்கீங்க ..குட்

இந்தாங்க சுவையா சாப்பிட்டுட்டு, சீக்கிரமா முடிவு பண்ணிட்டு ,சூடா பதிவு

போடுங்க :-

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

//ஒரு குழந்தை பிறந்த நிமிடத்தில் இருந்து கடைசி காலம் வரை தாயின் அன்புக்கு அடிமை. //
"அன்புக்கு நான் அடிமை"ன்னு முதல் அணியோட அஸ்திவாரத்தை பலமா

போட்டிருக்காங்க ..வனிதா

//வாழ்க்கை துணையாக வருபவரிடம் ஏன் மனம் கட்டுப்பட்டு கிடைக்கிறது?? அவர் காட்டும் அன்புக்கே.//

என்னவர்ன்னு ஆசை ஆசையாய் வார்த்தைக்கு வார்த்தை சொல்வது

அளவுகடந்த அன்பினால்தானே...எனக்கு புரியுது ...:-

//புகழும் ஒருவரை யாரும் காதலித்து கை பிடிப்பதில்லை//

பேஷ் பேஷ் சரியா சொல்லிருக்கீங்க...

இப்போதைக்கு உங்கள் அன்பு பக்கம் மனம் ,மயங்கி கிடக்கிறது ...:-

எதிரணி ல யார் வருவாங்க என்ன சொல்லபோறாங்க இதுக்குன்னு பார்க்கலாம்

சீக்கிரம் வாங்கப்பா...தேநீர் சூடு ஆறிட்டே இருக்கு...:(

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

முகப்பில் கீழ்ப்பகுதியில் எழுத்துதவின்னு இருக்கும்..அதுல போயி டைப்

பண்ணுங்க புரியும்...உங்களின் ஆர்வத்திற்கு நன்றி...

சீக்கிரமா வந்து அதே ஆர்வத்தோட பதில்போடுங்க பார்க்கலாம்

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

அருமையான தலைப்பு நான் எடுத்திர்க்கும் அணி அன்புக்கே சீக்கரமா என் வாதத்துடன் வருகிரேன் நடுவரே .

அன்புடன்
ஸ்ரீ

நடுவர் அவர்களுக்கு முதலில் எனது வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்.நல்ல தலைப்பை தந்துள்ளீர். சீக்கிரமே எனது அணியை தேர்வு செய்து வருகிறேன்.

வாழு இல்லை வாழவிடு

மேலும் சில பதிவுகள்