ஹெல்தி ஹார்ட்ஸ்

தேதி: December 20, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (5 votes)

 

ஓட்ஸ் - அரை கப்
பொட்டுகடலை மாவு - 2 - 3 தேக்கரண்டி
உருளைக்கிழங்கு - ஒன்று
பாலக்கீரை - சிறிது
இஞ்சி - சிறிது
வெங்காயம்- ஒன்று (சின்னது)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
பச்சை மிளகாய் - ஒன்று


 

உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி மசித்து வைக்கவும். ஓட்ஸை வெறும் கடாயில் வறுக்கவும். கீரை, இஞ்சி, வெங்காயம், பச்சை மிளகாய் அனைத்தையும் பொடியாக நறுக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், இஞ்சி சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் கீரை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
கீரை வெந்ததும் தேவைக்கு உப்பு சேர்த்து மசித்த உருளைக்கிழங்கும் சேர்த்து ஒரு நிமிடம் பிரட்டவும்.
பின் வறுத்த ஓட்ஸ் சேர்த்து ஒரு நிமிடம் பிரட்டவும்.
கலவை கலந்து வந்ததும் பொட்டுக்கடலை மாவு சேர்த்து நன்றாக பிரட்டி எடுக்கவும். லேசாக ஆறியதும் கையால் நன்றாக பிசைந்து வைக்கவும்.
தோசை கல்லில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கலவையை சிறு உருண்டைகளாக எடுத்து ஹார்ட் வடிவில் தட்டி போட்டு இரண்டு பக்கமும் திருப்பி போட்டு பொன் நிறமாக பொரித்து எடுக்கவும்.
விரும்பிய வடிவில் கட்லட்டாக தட்டி போட்டு பொரிக்கலாம். சத்தான எண்ணெய் குறைவான மாலை நேர உணவு.

விரும்பினால் இதில் துருவிய கேரட் கூட சேர்க்கலாம். பொட்டுகடலை மாவு அளவு பார்த்து சேர்க்கவும், கலவை உதிரவும் கூடாது, ஒட்டவும் கூடாது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

செய்முறை ரொம்ப ஈசியா இருக்கு. பார்க்க சூப்பரா இருக்கு. சண்டே செய்துபார்த்துட்டு மற்படியும் சொல்ரேன்.

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

கலகீடீங்க, ரொம்ப சிம்பிள் & சூப்பர் ஹ இருக்கு. கண்டிப்பா ஹெல்த்தி டிஷ் தான்

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

வனி நல்ல ஹெல்தியான கட்லட் தான் செய்து காட்டியிருக்கீங்க.
பார்க்கும் போதே ரொம்ப நல்லா இருக்கு.
நிச்சயம் முடியும் போது செய்து பார்த்துவிட்டு சொல்கிறேன்.
விருப்பபட்டியலில் சேர்த்துட்டோமுல்ல.....
பாராட்டுக்கள் வனி.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

பார்க்கும்பொதே ரொம்ப நல்லா இருக்கு வனிதா, கண்டிப்பா செஞ்சி பார்க்கிறேன்.

வனி, இந்த கட்லெட்டி பாலக் கீரை தான் போடனுமா இல்ல வேற கீரை போடலாமா? ராதா

வனி, அருமையா இருக்கு வனி,

ஓட்ஸ் வனி என்ற பட்டத்தை எல்லார் முன்னிலையிலும் உங்களுக்கு பட்டமளிப்பு விழா வைத்து கொடுக்க ஆசை தான், ஆனால் பொருளாதார சூழ்நிலையால் இங்கு இப்போது உங்களுக்கு அந்த பட்டத்தை என் திருக்கரங்களால் அளிக்கிறேன்:) காலில் விழுந்து ஆசீர்வாதமெல்லாம் வாங்காதீங்க வனி, நான் உங்களை விட வயசில் சின்னவ:))

நல்ல குறிப்பு வனி, ஊருக்கு போகும் போது செய்து அசத்திடறேன், ஆனா யார் கேட்டாலும் நானே யோசித்து செய்ததுன்னு தான் சொல்லுவேனாக்கும், ஹா ஹா ஹா, (யாரும் நம்ப மாட்டாங்க) வாழ்த்துக்கள் வனி

அன்புடன்
பவித்ரா

ஹெல்தி ஹார்ட்ஸ்..பெயரே சூப்பர்.செஞ்சுடறேன் வனிக்கா வாழ்த்துக்கள்...

வாழு, வாழவிடு..

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :) என் குறிப்பு எல்லாம் மேலிருந்து கீழா வெளி வருது போலிருக்கே ;)

மஞ்சுளா... மிக்க நன்றி. அவசியம் செய்துட்டு சொல்லுங்க. :)

சுஙந்தி... ரொம்ப ஹெல்தி, எண்ணெய் குறைவு. அவசியம் செய்து பாருங்க. மிக்க நன்றி :)

அப்சரா.... விருப்பபட்டியலில் சேர்த்தாச்சா?? நன்றி நன்றி. அவசியம் செய்து பாருங்க :)

ரம்யா... செய்து அசத்துங்க. மிக்க நன்றி :)

ராதா... வடைக்கு சேர்க்கும் எல்லா கீரையும் இதுக்கும் சேர்க்கலாம். முயற்சி செய்துட்டு எப்படி வந்ததுன்னு சொல்லுங்க. மிக்க நன்றி :)

பவி... உங்க பட்டத்துக்கு ரொம்ப நன்றி. ஆனா என்னை விட நம்ம ஸ்ரீவித்யா'வுக்கு இது பொருத்தமா இருக்கும் :D சைக்கில் கேப்பில் உங்க வயசை குறைச்சு என் வயசை கூட்டிட்டீங்க. இருந்த கவனிக்கறேன்.

ருக்சனா... மிக்க நன்றி. டிவியில் ஹை ஃபைபர் ஹார்ட்ஸ் என்ற பெயரில் வெளி வந்தது... குறிப்பில் எனக்கு ஏத்த மாதிரி கொஞ்சம் மாற்றம் செய்து பெயரையும் எனக்கு பிடிச்ச மாதிரி மாத்திட்டேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி
சூப்பர் பா. எப்படிபா இப்படி புதுசு புதுசா கண்டுபுடிக்கிறிங்க. ரொம்ப நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.
வள்ளி.

உண்மையாய் இரு.

எனக்கு ஓட்ஸ் என்றால் ரொம்பவே பிடிக்கும். கட்லட்டும் ரொம்பவே பிடிக்கும். இரண்டையும் சேர்த்து கண்டிப்பா ஹெல்தியா (பொரித்தெடுக்க சொல்லலை இல்லியா??? வெரி குட்) தந்திருக்கீங்க. இப்போவே சொல்லிகறேன்....இனி இதை அடிக்கடி செய்வேன்....அப்புறம் அடிக்கடி வந்து பின்னூட்டம் எல்லாம் கொடுக்க முடியாது.அப்புறம் அடிக்கடி வந்து பின்னூட்டம் எல்லாம் கொடுக்க முடியாது.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

வனி பார்க்கவே சூப்பரா இருக்கு கண்டிப்பாக செய்துட்டு சொல்கிறேன்

ஈசியா ஆனா வித்தியாசமான குறிப்பு அக்கா!!

செய்துட்டு சொல்றேன்!!!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

வள்ளி... மிக்க நன்றி. கண்டுலாம் பிடிக்கல, பார்த்து கத்துகிட்டது தாங்க. :)

லாவண்யா... அம்மம்மா என்னா கோவம் வருது லாவண்யாக்கு!!! சரி சரி... அடிக்கடி அடிக்கடி பின்னூட்டமெல்லாம் தர வேண்டாம்... அடிக்கடி அடிக்கடி செஞ்சா போதும் எனக்கு ;) அடிக்கடி அடிக்கடி செஞ்சீங்களான்னு கேட்க மாட்டேன்.

பாத்திமா... மிக்க நன்றி. அவசியம் செய்துட்டு பிடிச்சுதான்னு சொல்லுங்க.

ஆமி... அவசியம் செய்துட்டு சொல்லுங்க :) மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா இதத்தான் இந்த ஹெல்த்தி ஹார்ட்ஸ் தான் நேத்து நான் பட்டியெல்லாம்

விநியோகிச்சேன்..

நீங்க கவனிக்கலயா :-..

போகட்டும்..என்ன மாட்டிவிட்டுட்டு ரொம்பவே சந்தோஷமா இருக்கீங்களா :(

ஆனாலும் நல்ல குறிப்பு ...பாராட்டாம எப்படி.அறுசுவையின் சமத்து

குட்டியாச்சே..வாழ்த்துக்கள்
அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

இளவரசி.... மிக்க நன்றி, அவசியம் செய்து பார்த்து சொல்லுங்க. பட்டி.... ;( ரொம்ப சாரிங்க, இம்முறை பட்டியில் வாதாட ஏகமா இரவெல்லாம் யோசிச்சேன், ஆனா பதிவு தான் போட உடியல. திடீர்ன்னு ப்ளான் பண்ணி ஊருக்கு கிளம்பினதால் அங்க இருந்தப்போ நேரம் இல்லை, இங்க வந்தா இங்க லேப்டாப் இல்லை.... அதான் பதிவிட முடியாம போச்சு. ஆனா படியோட தீர்ப்பை இன்று படித்தேன்... இன்னும் பதிவிடல. கலக்கிருக்கீங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா