=======அரட்டை அரங்கம் - 88========

போன அரட்டைய நகத்தவே முடியல போல.... எல்லாரும் இங்க வந்து தொடருங்கோ... பவி அரட்டைல வந்து இருக்காங்களா? என்ன அதிசியம்....

நல்ல காமெடி போங்க
நிறைய அனுபவம் இருக்கு , எதைன்னு நா சொல்ல......
சரி சரி ஒரு விசயம் சொல்ரேன், வெளில சொல்லிடாதீங்க....
கல்லூரி நாட்களில் என் தோழிகள் அனைவரும் சேர்ந்து “தீனா” திரைப்படம் போகலாம் நு முடிவு செய்து காலை காட்சி போனோம். அன்றே மதியம் என் லவ்வர் ரொம்ப கம்பெல் பன்னினாரேனு “தீனா” படம் மதிய காட்சி போனோம்.அக்கடா நு வீட்டுக்கு போயி தூங்கலாம் நு போனா , வீட்ல எல்லோரும் அதே படத்துக்கு கிளம்புராங்க
,என்னையும் கிளம்ப சொன்னங்க.எனக்கு தலை வலி தாங்கல.என்னென்னவோ காரணம் சொல்லியும் தப்பிக்க முடியல. 3வது முறையும் அதே படத்தை பார்தேன்..
அஜித் ரசிகர்கள் கூட இந்த அளவு ஒரெய் நாள் ல 3 காட்ச்சி பார்த்திருக்க மாட்டாங்க///////////////////////////////////////

அனிதா சுஜி
” உன்னுடைய கண்ணீருக்கு அருகதை உடையவர்கள் யாரும் இல்லை. அந்த அருகதை உள்ளவர்கள் உன்னை கண்ணீர் சிந்த விட மாட்டர்கள் ”

நான் முதலில் பார்த்த படம் அஞ்சலி. tv-ல எத்தனை தடவை போடாலும் நான் இன்னும் பார்பேன்.அப்பொழுது பயந்து பார்தது என்னும் ஞாபகம் இருக்கு.
friends udan போன படம் பிரியாத வரம் வேண்டும். அதுவும் 10த் ரிசல்ட் க்கு முந்தய நாள். நல்லா enjoy ப்ண்ணினோம்.
என் கணவரோட போன முதல் படம் Shivaji அதுவும் first day in surat. என் ரொம்ப நாள் ஆசை நிறைவேறியது. Rajini film first day first show life la மறக்கமுடியாது. 2hrs travel panni padam பார்தோம்.
பையா படம் என் daughter's first படம். adada mazhai song மறக்க முடியாது.
அப்படியே dance ஆடுறா.

நான் அம்மா, அப்பா கூட போன முதல் படம் "அஞ்சலி"..... நானும் குட்டி பொண்ண இருந்தேனா, சரியாவே தெரியல. படத்தோட கதையும் புரியல. பாதி படத்துலையே தூங்கிட்டேன்.(இதுக்கு பேரு முதல் படம் அனுபவமான்னு கேக்கறீங்களா?) சரி சரி என்னை பண்றது.. அறியாத வயசுப்பா. அட்ஜஸ்ட் பண்ணிகோங்க.

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

ரேணிகுண்டா ஹா..ஹ்ம்ம்ம் எப்படி கல்யாணம் பண்ணி முதல் டைம் அத பாத்தீங்க?போங்க....... அண்ணா பண்றது ரொம்ப அநியாயம். நீங்க பாவம் தான?படத்துக்கே போகலையா. என்னை கொடும பாரதி ?ஒரு வேல ரேணிகுண்டா ல நடுச்சவங்க நடுச்சாதான் கூட்டிட்டு போவரா ? கேட்டு பாருங்க

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

அனிதா - என்னால சிரிப்பா கொன்றோல் பண்ணவே முடியல. உங்களுக்கு பெரிய மனசு தான் போங்க... எப்படிங்க மூன்னு டைம் பாத்தீங்க. சாமீ..இனிமேல் தீனா படம் பாத்தா உங்க நியாபகம் தான் வரும்...

அஞ்சு - நீங்களும் நானும் same பிஞ்ச், எனக்கும் அஞ்சலி தான் முதல் படம். ரஜினி படம் முதல் நாளா? அடடா சூப்பர் தான். கேக்கவே நல்ல இருக்கு

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

காலேஜ் ல படத்துக்கு போனதுக்கு அளவே இருக்காது. 1st இயர் ல முதல் படம் போறதுக்கு ரொம்ப பயம், கிளாஸ் கட் பண்ணீட்டு தான் போனோம், வீட்டுல தெருஞ்சா என்ன பண்றதுன்னு.(அப்ப எல்லாம் நாங்க ரொம்ப ரொம்ப நல்ல புள்ளைக). ஒரு வழியா கிளம்பி போய்ட்டோம். என்ன படம்ன்னு கேக்கறீங்களா?(கேட்ட அப்படியே ஷாக் ஆயிடுவீங்க) இவளோ பில்ட் up எந்த படத்துக்கு தெரியுமா?? நம்ம ஷங்கர் படம், அதாங்க "பாய்ஸ்".(இதுக எல்லாம் உருப்படுமான்னு நினைக்கறீங்க, அங்க நினைக்கறது இங்க கேக்குது.விடுங்க விடுங்க.....).

எப்படியோ டிக்கெட் எல்லாம் வாங்கிட்டு போய்ட்டோம், 15 girls தான் போனோம்(முதல் டைம் என்பதால்). அட கடவுளே, எனக்கு அந்த படமே புரியல. எல்லாம் ஒரே டபுள் மீனிங் வேறயா, சுத்தம். எல்லாரும் சிருச்சா நானும் சிரிப்பேன். என்ன பண்றது, வேற வழி தெரியல.சுத்தி இருக்கறவங்க எல்லாரும் விழுந்து விழுது சிரிக்குதுக, எப்படா படம் முடியும் ன்னு ஆயிடுச்சு.... இப்ப அந்த படம் பாத்தா தான் எல்லா கரும அர்த்தமும் புரியுது. ஒரு சின்ன புள்ளைய கூட்டிட்டு போய் ஏமாத்திட்டாங்க...

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

Other state டில் இருபதில் ஒரு பிளஸ். எந்திரன் படமும் firest day பார்தேன். ticketக்கு கஷ்டபடாம.
நான் ஆசை படம் night show என் அப்பா அம்மா அண்ணன் உடன் போனேன் . news போடும் போது தூங்கிவிட்டேன், எழுந்து பார்த்தால் எழுத்து போடுவது முடியவில்லை. அம்மாவிடம் இன்னுமா படம் போடலை என்று கேட்டேன். அதற்கு அம்மா படம் முடிந்து எழுத்து வந்தாச்சு என்றார்கள்.
அதனால் ஆசை படம் பார்தாலே சிரிப்பு தான் வரும்

நான் அப்பா அம்மாகூட போண முதல் படம் ஏதுன்னு எனக்கு ஞாபகம் இல்ல,என் கணவர் கூட போண முதல் படம் ஆயுத பூஜ,அந்த படதை பார்க்கும் போது எனக்கு சுத்தமா தமிழ் தெரியாது ஏதோ பொம்ம படத்தெ பார்க்கிறமாதிரி ஒன்னும் புரியாம படம் பார்தது நானாதான் இருப்பேன்

சுகன் சூப்பர் டாபிக்பா காலேஜ் 3 வருஷம் 7 படம் தான் பார்த்து இருக்கேன் ஆனா ஒவ்வொன்னு ரொம்ப என்ஜாய் பண்ணி பார்த்தது எதையுமே மறக்க முடியாதுபா தோ சொல்றேன்.

பாரதி என்னது இது கல்யாணம் ஆகி முதல் முறையா பார்க்கவேண்டிய படமா அது, ஆனாலும் அண்ணா ஏன் இப்படி இருக்காங்க உங்க ப்ரொபைல்ல பார்த்தா நிறைய நடிகை நடிகர்கள் பிடிக்கும்னு போட்டு இருக்கீங்க, ஆனா அண்ணாக்கு இதில் யாரையுமே பிடிக்காது போல.

அனிதா சிரிச்சுட்டே இருக்கேன் நீங்க அன்னக்கி எப்படி இருந்திருப்பீங்கனு நினைச்சு நினைச்சு. தெளியவச்சு தெளியவச்சு அடிப்பாங்கள்ல அதுபோல தெளிஞ்சு தெளிஞ்சு படம் பார்த்து இருக்கீங்க அதுவும் ஒரே படத்த

ஹாய், நான் ராதா. நான் கல்யாணம் ஆகி பார்த்த முதல் படம் நான் அவனில்லை. 2-வது படம் சிவாஜி, 3-வது படம் பருத்தி வீரன் , அதுக்கு போய் ஃபேன் ஓடலைன்னு என் ஹஸ்க்கும் மேனேஜருக்கும் சண்டை வந்து பாதியில் வந்தது தான் மிச்சம். பின்னர் பாப்பா கையில் இருந்ததால் ஒரு படமும் பார்க்கலை. இப்போ எந்திரனுக்கு வந்த நாளா ப்ளான் பண்ணிக்கிட்டிருக்கேன். இன்னும் கூட்டி போகலை. அதுக்குள்ள ரஜி.னியோட அடுத்த படமே வந்துடும் போல இருக்குப்பா. எல்லோர் கதையும் சூப்பர். காலேஜ் போகும் போது கட் அடிச்சிட்டு பார்த்த முதல் படம் ஆஹா. ராதா சுவாமினாதன்

மேலும் சில பதிவுகள்