=======அரட்டை அரங்கம் - 88========

போன அரட்டைய நகத்தவே முடியல போல.... எல்லாரும் இங்க வந்து தொடருங்கோ... பவி அரட்டைல வந்து இருக்காங்களா? என்ன அதிசியம்....

என்ன் இன்னக்கி அரட்டை உறங்கிக் கொண்டு இருக்கு யாருமே இல்லையா? தோழிகளே எல்லாரும் ரொம்ப பிஸியா இருக்கீங்க வேலையில். இப்படி வந்து அறுசுவைய எட்டி பார்த்துட்டு போறது. நான் மட்டும் இங்கு தனியா இருக்கேன்

ஹாய் யாழினி,வினோ காலை வணக்கம்;)))) எல்லோரும் எங்க பா போனிங்க.

உன்னை போல பிறரையும் நேசி.

எனது இனிய சிநேகிதிகளுக்கு என் வணக்கங்கள்

வினோ உனது பதிலிற்கு என் நன்றிகள்

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

தேவி நான் இருக்கேன் நீயும் நானும் மட்டும் தான் இருக்கோம் போல. சரி தேவி உங்க வீட்டில் குடில் வைத்து இருக்கீங்களாபா. எனக்கு அது ரொம்ப பிடிக்கும் நநன் வேளாங்கண்ணியில் பார்த்து இருக்கேன். ரொம்ப அழகா செய்து இருப்பாங்க இங்க எங்க வீட்டுக்கு பக்கதிலயும் ஒரு ஆன்ட்டி வீட்டில் செய்து இருக்காங்க.

யாழினி எங்க வீட்டில குடில் வைக்கலபா.ஆனா என் தோழி வீட்டில போய் டெக்ரேசன் பண்னிட்டு வந்தேன்.அழகா இருக்கு. இரவுல பாக்க இன்னும் சூப்பர இருக்கும்.

உன்னை போல பிறரையும் நேசி.

அப்படியா தேவி, சரி சரி. அந்த பொம்மைகள் எல்லாம் கிடைக்கிறதா இப்போலாம். ஸ்டார் தொங்க விட்டிருக்கீங்களா உங்க வீட்டில்.

தேவி கிறிஸ்மஸ்க்கு ட்ரெஸ் எல்லாம் எடுத்தாச்சா. வீட்டுல என்ன ஸ்வீட்டெல்லாம் செய்வீங்க.
அஸ்வதா அரட்டைப்பக்கம் பார்த்துக்கிட்டு இருந்தீங்கனா வாங்க. இன்னைக்கு கல்ப்ஸ், சுகி, ஸ்ரீ, மஞ்சுமேம், ரீனாமேம், தீபா,ராஜி இவங்க யாரையும் காணோம்.
வாங்க, வாங்க மார்கழி மாசம் யாரெல்லாம் சீக்கிரம் எழுந்திருச்சு கோலம் போடுறீங்க. கோலம் பத்தி பேசலாமா?

அடடா அரட்டை ஏன் பா இவ்லோ டல்லா போகுது சரி இன்னைக்கு என்ன டாபிக் பேசலாம் சொல்லுங்க பாப்போம் தோழிகள் அனைவரும் நலமா பா . தேவி நேத்து நீங்க சாட்ல கூப்ட்டப்ப நான் இல்லை பா

அன்புடன்
ஸ்ரீ

எல்லாரும் இருந்தும் ஏன் மவுனமாக இருக்கீரீர்கள் பா அரட்டை பட்டையை கிள்ளப்ப வேண்டாமா அர்த்தமாக அரட்டை அடிக்க நல்ல தலைப்பு குடுங்க பா

அன்புடன்
ஸ்ரீ

ஸ்ரீ கோலம் பத்தி பேசலாமா கேட்டேன். கலர்பொடி கோலம் போட்டா ப்ளீச்னு இருக்கனும். கலர்பொடில கோலம் மாவு கலந்தா வெளீர் கலரா இருக்கு. யாராவது டிப்ஸ் இருந்தா சொல்லுங்க.

மேலும் சில பதிவுகள்