=======அரட்டை அரங்கம் - 88========

போன அரட்டைய நகத்தவே முடியல போல.... எல்லாரும் இங்க வந்து தொடருங்கோ... பவி அரட்டைல வந்து இருக்காங்களா? என்ன அதிசியம்....

யாழினி -சீக்கரம் வந்து உங்க அனுபவத்தையும் சொல்லுங்க..... வெறும் 7 படம் தான? நீங்க ரொம்ப நல்லவளா இருக்கீங்க.

ராதா - உங்க first படம் நல்ல படம். செம காமெடி ஹா இருக்கும். பருத்தி வீரன்னுக்கு போயிட்டு சண்டை போட்டுட்டாரா? அண்ணாக்கு வேற எதோ கோபம் ன்னு நினைக்கறேன், கடைசில அங்க போய் கோபம் வந்துடுச்சா? அதுக்கு அப்பறம் படத்துக்கே போகலையா?

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

என்ன பா நானும் ரொம்ப நாளா பாத்துட்டு இருக்கேன் மாமிய காணோமே,எங்க பா மாமி

குட்டிரேயம்மா உங்க குட்டிப் பாப்பா எப்படி இருக்கு?
நீங்க எப்படி இருக்கீங்க?
அன்புடன்
ஜெமாமி

மாமி இது எல்லாம் அநியாயம், நாங்க எல்லாம் எவளோ நாள் தேடி இருப்போம். நீங்க வரவே இல்ல, இப்ப மட்டும் வரலாமா?

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

ராதிகா எப்படி இருக்கீங்க
குட்டி பொண்ணு சனா உடம்பு சரியாயிடுச்சா?? புது claimate suit ஆயிடுச்சா??
ரேயா எப்படி இருக்கா??
பொன்னி

விசாரித்த அனைவருக்கும் நன்றி ஜெயந்தி மாமி என் பாப்பா நல்லா இருக்கா.
பெரியவலும் நல்லா இருக்கா எல்லாம் அருசுவை தோழிகளின் பிரார்த்தனைதான் நன்றி மாமி.
ஆனா நான் தேடிட்டு இருக்கரது மோகனா மாமிய யாருக்கவது தெரிஞ்சா சொல்லுங்க

என் அப்பாவுக்கு படம் பிடிக்காது அதனால் அம்மா நானு எதுத்தவீட்டுகாரங்களோட போன முதல் படம் "இதயத்தை திருடாதே" .அதில் வந்த "விடிய விடிய நடனம் சந்தோசம்' பாட்டுக்கு நடனம் ஆடியது மட்டும்தான் தெரியும் மத்தபடி படம் ஒன்னும் புரியல .ஏன்னா நான் ரொம்ப ரொம்ப குட்டி பொண்ணு.என் குடுபத்துடன் பார்த்த முதல் படம் " உள்ளத்தை அள்ளி தா ".நான் ப்ரிண்ட்ஸ் பார்த்த படம் "மின்னலே" .என் huskooda கல்யாணத்துக்கு முன்னாடி பார்த்த படம்"ஆட்டோகிராப்" .கல்யாணத்துக்கு பின் ரெண்டு வருடம் கழித்து பார்த்த முதல் படம் "அன்பே ஆருயிரே".

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

enna nanbargale eppadi erukkigka

எனக்கு விபரம் தெரிஞ்சு படம்னு பார்த்தேன்னா அது ஈஸ்வரினு ஒரு படம் ஆனந்த்பாபு, கெளதமி நடிச்சது, சைட் ஷோ போனோம் நான் என் தம்பி எங்க அப்பா மூனு பேரும் ரொம்ப பிடிச்சிருந்துச்சு அந்த படம் அதுல ஒரு நாய் குரங்குலாம் கூட நடிச்சிருக்கும். அப்பா அவ்வளவா படத்துக்குலாம் கூட்டுட்டு போக மாட்டாங்க.
முன்னாடிலாம் நான் விஜயின் தீவிர ரசிகையாக்கும் ஒரு படம் கூட விடுவதில்லை, நானும் என்னோட ப்ரண்டும் தான் விஜய்னா ரொம்ப பிடிக்கும். எல்லா படத்துக்கும் போய்டுவோம் வீட்டில் தனியா விடமாட்டங்களா அதனால என் ப்ரண்ட்டோட பாட்டி ததன் எங்களுக்கு துணை நாங்க மூணு பேரும் போய் ஜாலியா படம் பார்த்துட்டு வந்துடுவோம்.

அப்பறம் காலேஜ் போனதுக்கு அப்பறம் ப்ரண்ட்ஸ் கூட போனேன். அது எப்படினா எங்க காலேஜ்ல கட்டடிச்சுட்டுலாம் படம் பார்க்க போக முடியாது. நானும் ரொம்ப நல்ல பொண்ணாக்கும் வீட்டில் சொல்லாமல்லாம் போனது இல்ல. அதுக்கு இன்னொரு காரணமும் உண்டு எங்க அப்பாவுக்கு ஊரில் முக்கால்வாசி பேரை தெரியும், அதோடு என் தம்பிகளுக்கும் நிறைய ப்ரண்ட்ஸ், ஒன்னு எங்க அப்பாவோட யாராவது பார்த்துட்டு உங்க பொண்ண அங்க பார்த்தனே என் தம்பி கிட்ட போய் உங்க அக்காவ இங்க பார்த்தனேனு சொல்றதுலாம் எனக்கு பிடிக்காது அதனால் வீட்டில் சொல்லாமல் போறது இல்லை. காலேஜ் படிச்ச மூன்று வருடத்தில் 7 படங்கள் தான் பார்த்திருக்கேன்னா பார்த்துக்கோங்களேன் எவ்வளவௌ நல்ல பொண்ணுனு. எப்போ போவோம்னு கேட்கறீங்களா அதான், independence day, republic day வரும் போதுலாம் எங்களுக்கும் சுதந்திரம் தான், காலையிலேயே flag hoisting முடிஞ்சிடுமா வேற என்ன வேலை நான்வீட்டில் சொல்லிட்டு வந்துடுவேன் அப்படியே ஏதாவதொரு த்யேட்டருக்கு போய்டுவோம். காலேஜ் முதல் வருடம் படிக்கும் போது முதல் முறை போகும் நாம தான் இப்படி வந்திருக்கோம்னு நினைச்சுட்டு போய் பார்த்தா ஊரில் உள்ள எல்லா காலேஜ் பசங்களும் அங்க தான் இருக்காங்க. அப்படி முதன்முதலில் பார்த்த படம் வசீகரா, செமயா என்ஜாய் பண்ணி பார்த்தோம். இப்படியே ஒவ்வொரு வருடமும் போய் பார்த்தது தான் ரோஜா கூட்டம், பம்மல் கே சம்பந்தம், ஏழுமலை. எப்போ படத்துக்கு போனாலும் ஒரு பெரிய கும்பலோட தான் போறது அதாவது ஒன்னு ரிலேடிவ்சோட இல்லைனா பக்கத்து வீட்டு வாண்டுங்க அப்பறம் ப்ரண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து தான்

மேலும் சில பதிவுகள்