=======அரட்டை அரங்கம் - 88========

போன அரட்டைய நகத்தவே முடியல போல.... எல்லாரும் இங்க வந்து தொடருங்கோ... பவி அரட்டைல வந்து இருக்காங்களா? என்ன அதிசியம்....

ஹாய் சுகன் என்ன சுகன் இன்னக்கி நம்ம ரெண்டு பேரு தான் இருக்கோம்னு நினைக்கிறேன் யாரையும் காணும்பா. ரம்யாவும் வந்துட்டு பேசாமல் இருக்காங்க இல்ல அவங்களும் பிஸியாகிட்டாங்களா? சுகன் நீ அர்ச்சனா அகடமில க்ளாஸ் எதுவும் போய் இருக்கியா? இன்னக்கி அந்த விளம்பரம் பார்த்தேன்.

நான் படத்துக்கு போய் எல்லாம் மாட்டுனதே இல்ல, காலேஜ் படிக்கும் போது மட்டும் ஒரு 30 படத்துக்கு போய் இருப்போம். அதுல மறக்கவே முடியாத படம் "சந்திரமுகி" தான். ஏன்னா, பாய்ஸ் எல்லாரும் டிக்கெட் கிடைக்காதுன்னு பெட் கட்டினாங்க. படம் ரிலீஸ் ஆகி 5 டே தான் போனோம். பாய்ஸ் கிட்ட பெட் கட்டிட்டு போனோம், தியேட்டர் குள்ள போன, அவங்க வாய் வெச்ச மாதிரியே டிக்கெட் இல்ல.அப்பறம் என்ன பண்றது, சரி பிளாக் ல டிக்கெட் கிடைக்குதான்னு பார்க்கலாம்ன்னு பாத்தோம். ஒருத்தன் வித்துட்டு இருந்தான், ஒரு டிக்கெட் 100 சொன்னான், உண்மையான டிக்கெட் விலை 50 தான்.

சரின்னு முடிவு பண்ணி, அவன் கிடையே டிக்கெட் வாங்கினோம். சீடிங் எப்படி இருக்கும்ன்னு கேட்டோம், முன்னாடி எல்லாம் இல்ல, கொஞ்சம் பின்னாடி தான் இருக்கும்ன்னு சொன்னான். அப்பாடா ன்னு ஒரே சந்தோசத்துல உள்ள போனோம்.பாத்தா, ஏமாத்துகரன், எங்கள நல்லா ஏமாத்திட்டான். ஸ்க்ரீன் க்கு 6 லைன் தள்ளி தான் எங்க சீட்.. அட ராமா, ஏன்டா போனோம்ன்னு இருந்துச்சு. வேற வழி இல்லைன்னு உட்காந்தோம். ஒரு வழியா படம் பேரு போடா தொடங்கினான்.... எல்லா சீன் ஊம் எங்களுக்கு பக்கத்துல தெரியுது, ரஜினி இன்றோ சீன் வந்துச்சு, கடவுளே ரஜினி முதல்ல கல் எடுத்து வெய்பார், எங்க தலைல வெக்கற மாதிரி இருக்கு. மறக்கவே முடியாது. ரஜினி லிப்ஸ் ஸ்டிக் ல இருந்து எல்லாம் கிளியர் ஹ தெருஞ்சுது. சிருச்சு சிருச்சு வயிறு வலுச்சுது. கடைசியா, கிளைமாக்ஸ் ல ஜோதிகா சந்திரமுகியா காட்டற சீன், ரொம்ப பயந்துட்டோம். 15 சேந்து தியேட்டர் ல கத்துனா யாரு பாப்பா, இப்ப நினச்சாலும் சிரிப்பா வருது. எங்க ப்ரிண்ட்ஸ் ல இறுதிக்கு அன்னைக்கு நைட் கச்சலே வந்துடுச்சு.

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

ஹாய் யாழினி,சுகன் எப்படி இருக்கீங்க?

சுகன்,என்னை ஞாபகம் இருக்கா மறந்துட்டீங்களா?

அன்புடன்
நித்திலா

மாங்காய் பருப்பு கடைசல்
தேவையான பொருட்கள்
து.பருப்பு கிராம்
மாங்காய் ஒன்று
தக்காளி ஒன்று
வெங்காயம் ஒன்று
மிளக்காயதுள் ஒரு தேக்கரண்டி
உப்பு தேவைகேற்ப
தாளிக்க
கடுகு
மிளகாய்
சிறகம்
உ .பருப்பு
பூண்டு பொடியாக நறுக்கியது பத்து பல்
கறிவேப்பிலை
பருப்பு, மாங்காய் ,வெங்காயம் ,தக்காளி இவைகளை நன்றாக குக்கரில்
வேக வைத்துக்கொள்ளவும் .வெந்த பிறகு உப்பு காரம் சேர்த்து கடையவும் பின்பு ஒரு கொதி வந்த பிறகு இறக்கி வைத்து தாளித்து கொட்டிய பின் உடனே இரண்டு நிமிடங்கள் மூடியே வைக்கவும்
சுவையான ஆம்கா தால் ரெடி சுவைத்து பார்த்து சொல்லுங்கள் தோழிகளே

நாளை என்பது இல்லை என்பதற்கு அடையாளம்

நித்தி நான் நல்லா இருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க? உங்க வேலை எல்லாம் எப்படி போகுது? நீங்க படத்துக்கு போன அனுபவம் பற்றி சொல்லுங்களேன்.

சுகன் அவ்வளவு கிட்டக்கவா உட்கார்ந்து பார்த்தீங்க? அதுவும் சந்திரமுகி படத்த. இதுலாம் நினைச்சு பார்க்கும் போது ஒரு சந்தோஷம் தான் இல்லபா.

எல்லோருக்கும் வணக்கம் இன்னும் வரலாமான்னு பாத்துட்டு இருக்கும் தோழிகளுக்கும் வணக்கம்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

யாழினி ---- நான் அந்த கிளாஸ் அட்டென்ட் பண்ணி இருக்கேன் டா. கோயம்புத்தூர் ல வோர்க்ஷோப் நடத்துனாங்க. அதுல போனேன். பீஸ் 800 வாங்கினாங்க. கத்துக்கறது ரொம்ப ரொம்ப ஈஸி தான். அதுக்கு அப்பரம் நம்ம எப்படி use பண்றோம்ன்னு,அதன் முக்கியம். நான் கிளாஸ் க்கு போனதுக்கு அப்பரம், ரெண்டு சாரீ ல தான் போட்டேன் டா. அதுக்கு அப்பரம் அப்படியே விட்டுட்டேன். பிரிண்டிங் க்கு வாங்கற material தான் விலை அதிகம்

நித்திலா ------- உங்கள போய் மறப்பேனா? நீங்க,நான், யாழினி,வினோஜா, தேவி எல்லாரும் ஒரு கூட்டணியச்ச. அதான் கல்யாணம் ஆகாதவங்க. நான் உங்க கூட ரொம்ப பேசுனது இல்ல, இப்ப தான் நேரம் வந்து இருக்கு. உங்கள பத்தி short அண்ட் ஸ்வீட் ஹ கொஞ்சம் சொல்லுங்களேன்.தப்பா நினைக்க வேண்டாம்

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

அருசுவை தோழிகளே
யாழினி, சுகன், சுஜி,, ஸ்வர்ணா.... நலமா?.......
அன்புடன்
நூரி சையத்

அகத்தின் அழகு முகத்திலே!....

என்றும் அன்புடன்
நூரி சையத்

உங்கள நான் அப்படித்தான் கூப்பிட போறேன். மின்னல் மாதிரி வறீங்க, ஓடிறீங்க. எப்படி இருக்கீங்க? நாங்க எல்லாரும் ரொம்ப நல்லா இருக்கோம்.

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

சுகந்தி, உங்கள் நினைவிற்கு நன்றி.
நான் நலம், நீங்கள் நலமா?........
மின்னல் எல்லாம் இல்லைபா.....

அன்புடன்
நூரி சையத்

அகத்தின் அழகு முகத்திலே!....

என்றும் அன்புடன்
நூரி சையத்

மேலும் சில பதிவுகள்