விழிப்பிதுங்க வைக்கும் விஸ்வரூப விலை...

பெட்ரோலில் ஆரம்பித்து இன்று வெங்காயம், கேஸ் சிலின்டர் வரை நாளுக்கு நாள் விலை ஏற்றம்... இதன் விளைவு ஏழைகள் மற்றும் நடுத்தர குடும்பங்கள் அன்றாட வாழ்க்கைக்கே போராட வேண்டியுள்ளது...
எங்கு போகிறது நம் நாடு...?
பல கோடி ஊழல் என்று சொல்வது போய் பல லட்சம் கோடி ஊழல் என்று சொல்கிற அளவு தான் நம் நாடு முன்னேறி உள்ளது... அந்த ஊழல் செய்த பணமெல்லாம் நாம் கஷ்டப்பட்டு சம்பாதிச்சு கட்டின வரி பணம் என்று எண்ணும் போது வயிறு எறிகிறது... அன்றாட வாழ்கைக்கு தேவையான அடிப்படை பொருள்கள் கூட வாங்க இனிமே நாங்கள் budget போட வேண்டும்... இந்த கொடுமையில், இலவச TVயில் வரும் நிகழ்சிகளை எங்களால் ரசிக்க முடியாது... இதற்கு என்ன தான் தீர்வு...? இது தான் இந்திய மக்களின் சாபக்கேடா...?

இன்னைக்கு எங்க ஆபீஸ் ல இத பத்தின பேச்சு தான் இருந்துச்சு. இந்த விலைவாசி உயர்வு மத மாநிலத்த compare பண்ணும் போது, தமிழ்நாடு ல தான் ரொம்ப அதிகம். இன்னுமே ஆந்திரா ல எல்லாம் காஸ் விலை ஏத்த வில்லை. இன்னும் ரெண்டு நாளில் காஸ், டிசல் விலை ஏத்த போறாங்க. நேற்றைய வெங்காயம் விலை 80 ரூபாய். ஆனால், ஆரஞ்சு விலை 40 தான்.

கண்டிப்பா இது நம்ம இந்திய வின் தலை விதி. யாராலும் மாத்த முடியாது. இதே நிலை தொடர்ந்தால், திருட்டு அதிகரிக்கும். மக்களுக்கு வேற வழி இல்லை. "ஊழல்" இந்த வார்த்தை வெறும் சாமானிய மக்களை திருப்பதிபடுத்த கண்டுபிடிக்கபட்ட வார்த்தை என்று தான் சொல்லுவேன். நம்மக்கு தெரிந்து ஊழல் பண்ணியவர்கள் யாருக்காவது தண்டனை தந்து, அந்த பணம் திரும்ப பெற பட்டத? இல்லவே இல்ல. அது நடக்கவும் நடக்காது

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

சரியா சொன்னீங்க,
வெங்காய விலைய நினைச்சாலே மனசு கலங்குது, அந்த கலக்கத்துல இருந்து வெளில வர்ரதுகுல்ல சிலிண்டர் விலை 100 ஏற்றம் ஆகலாம் நு ஒரு இடி. மேல் தட்டு மக்களுக்கும் சரி , கீழ்தட்டு மக்களுக்கும் சரி , இதனால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. ஏன்னா அவங்க விறகு அடுப்பு தான் உபயோக படுத்துராங்க. ஆனா நம்மை மாதிரி நடுத்தர வர்க்கத்தினர்க்கு தான் பெரிய அளவில் பாதிப்பு

அனிதா சுஜி
” உன்னுடைய கண்ணீருக்கு அருகதை உடையவர்கள் யாரும் இல்லை. அந்த அருகதை உள்ளவர்கள் உன்னை கண்ணீர் சிந்த விட மாட்டர்கள் ”

ஊழல் ஊழல் ன்னு பொலம்பறோம், எவளோ நாளைக்கு? மிஞ்சி போன ஒரு மாசம், அப்பறம் எல்லாரும் அவங்க வேலைய பார்ப்போம், இல்லேன்னா அடுத்த ஊழல் வந்துடும்.அத பத்தி பேசுவோம். இது தான் சாதாரண மக்களின் மனசு. இதை தான் அரசாங்கம்/ஊழல்வாதிகள் பயன்படுத்தி கொள்கிறார்கள். சும்மா சொல்லனும்ன்ன முதல்ல சத்யம் ஊழல் பெருசா இருந்துச்சு, அப்பறம் health மினிஸ்டர் ஊழல் அத விட மிஞ்சுச்சு, அப்பறம் நம்ம காமன்வெல்த் ஊழல் (உலக மக்கள் முன்னாடி வெட்க்க படவெச்சுது) , அய்யோ அடேகப்பா ன்னு நினைக்கரகுள்ள, அடுத்த ஸ்பெக்ட்ரம் ஊழல்..... இத பத்தி பேசி முடிக்கறதுக்குள்ள நம்ம அரசியல் வாதிகளோட சுவிஸ் பேங்க் பணம். அத கேட்டா தலை மட்டும் இல்ல, பூமியே சுத்தும். இவங்கள கேக்கரக்கு ஆள் கிடையாது. இத பத்தி பேசறதும் ரொம்ப வேஸ்ட் தான்

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

சரண்யா சரியா சொன்னீங்கபா, கேஸ் விலை ஏற்றத்தால் பாதிக்கப்படுறது என்னமோ, இந்த நடுத்தட்டு வர்கத்தினர் தான் பாம் பணம் படைத்தவர்கள் வாங்கிக் கொள்கின்றனர், அடிதட்டு மக்கள் கேஸ் உபயோகமே இல்லை எப்பொழுதும் போல் அவங்க சமைக்கலாம். ஆனால் நடுவாந்திரத்தில் தொங்கிகிட்டு அய்யோ விலையேருதேனு அவதிப்படுறவங்களும் நடுத்தர குடும்பங்கள் தான்.

அதிகரித்து வரும் ஊழலை பார்த்தால் இந்த நாடு எந்த நிலையில் இருக்கிறதுனு தெரியல. சின்ன சின்னதா ஆரம்பித்து இப்போ 2ஜி ஸ்பெக்ட்ரம் வரை வளார்ந்து விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. இதில் என்ன ஒரு கொடுமை கூத்து என்றால் இதற்கு முன் ஊழல் செய்தவர்களில் எவறேனும் தண்டனை பெற்றிருக்கிறார்களா என்பது தான் இன்னும் வெளிச்சத்திற்கு வரவில்லை. ஆனால் அடுத்தடுத்த ஊழல்கள் என்னமோ நடந்தெறிய வண்ணம் இருக்கிறது. இதற்கெல்லாம் சரியான தலைமை பொறுப்பில் யாரும் இல்லை என்பதே என் கருத்து.

இலவசம் - இது தான் எல்லாத்துக்கும் மூல காரணம், ஒருத்தன் இல்லவசம ஒன்னு தரன்னு சொன்ன ஏன் தரான்? அவனுக்கு இதுனால என்ன உபயோகம்? இத தரத்துக்கு அவனுக்கு பணம் எங்க இருந்து கிடைக்குது? இதை எல்லாம் யோசிக்கறது இல்ல.. ஹையா ப்ரீ ப்ரீ ப்ரீ ன்னு ஓடின்னா, நம்ம தலைல இடி மட்டும் இல்ல, மத்த எல்லாமே விழ தான் செயும். இனியும் நம்ம இந்தியா மாற போகுதுகர நம்பிக்கை சத்தியமா கொஞ்சம் கூட இல்ல.(ரொம்ப மனசு கஷ்டத்துடன் தான் சொல்றேன்). இந்த ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம் இருந்தா, ஜப்பான் என்ன விலைன்னு கேட்க முடயுமாம், தமிழ்நாடு ல வரி இல்லா budget பத்து வருஷத்துக்கு போடலாம், குடும்பத்துக்கு 2000 ரூபாய் 5 வருஷத்துக்கு தரலாம் இது எல்லாம் நான் சொல்லல, ஒரு சர்வே ள்ள சொல்லி இருக்காங்க.

படுச்சவங்கனலையே, ஸ்பெக்ட்ரம் ஊழல் தொகைய நோட் ல எழுதமுடியல. அப்ப பாமர மக்கள் நிலை??????? வாய் ல பொலம்பீட்டு போக வேண்டியது தான்....... கண்டிப்பாக இது இந்தியா வின் சாபத்தீடு தான்

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

சுகந்தி,நான் நினைத்ததையே நீங்க சொல்லியிருக்கீங்க,இலவசங்களை மக்கள் எப்போ வேணாம்ன்னு ஒதுக்குறாங்களோ அப்பத்தான் நாட்டிற்கு விடிவு காலம்.நம்ம ஜனநாயக கடமையான ஓட்டு போடுவதற்கே நாம் காசு வாங்கினால்,இப்படித்தான் நமக்கு குடுத்த காசை அவங்க இந்த வழியில் சம்பாதிக்கிறாங்க.

நடுத்தரவர்க்கம் ஒரு குடும்பம் நடத்தனும்ன்னா குறைந்தது 10000 ரூபாய் வேணும், இது கூட இல்லாம சத்தியமா இருக்க முடியாது. வீட்டு வாடகை, மளிகை சாமான், வண்டி டியு, பெட்ரோல், குழந்தை படிப்பு, இது எல்லாம் போக "சேமிப்பு"...இனி வருங்காலம் "சேமிப்பு" என்பது, கண்கட்டி வித்தை தான். கண் முன்னாடி பணம் இருக்கும், ஆனால் கிடைக்காது. ராஜா காலத்தில் திருடர்கள், வழிப்பறி கொள்ளையர்கள் இருந்தா நிலைமை வெகு விரைவில் திரும்ப போகிறது.இதில் எந்த சந்தேகமும் இல்லை. எனக்கு தெருஞ்சு, பல குடும்பம் பண தட்டுபட்டினலே குழந்தை கூட இபப்திக்கு வேண்டாம்ன்னு இருக்க கூடிய அவல நிலை வந்தாச்சு. பணம் ஒரே பக்கம் போய் சேருது, அது தான் மூல காரணம். நம் மக்களிடையே ஒற்றுமை என்பது இல்லை. ஏன்டா பண்றன்னு ஒருத்தன் கேட்டா, அவன் ஒரு லூஸ் பயன்னு மத்தவங்க போய்டுவாங்க. ஒருத்தன் கேட்டா, பின்னாடி 1000 பேர் கேட்டா தப்பு பண்றவனுக்கு பயம் வரும்

இந்தியாவின் ஒரு ஓட்டின் இன்றைய நிலை - 1 பிரியாணி + 500 பணம் + புல் கோர்ட்டர். அவளோ தான் ,இத நம்ம மக்கள் கண்ள்ள காட்டிட்டா, கரன்ட்டுல கைவெயுங்க ன்னு சொன்னா கூட வெய்க்க கூடிய நிலைமை. நம்ம அரசியல் வாதிகளின் நம்பிக்கை நட்ச்சதிரமே இந்த மாதிரி பாமர மக்கள் தான்

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

அடித்தட்டு மக்களின் நிலையை நினைத்தால் தான் கவலையாக இருக்கிறது. அன்றாடம் அவர்கள் சம்பாதிக்கும் தொகையோ 100, 200 அதில் அவர்களின் வீட்டு தேவைகளை கவனித்து பிள்ளைகளை படிக்க வைத்துக் கொண்டு வாழ்க்கை நடத்துகிறார்கள். அதில் இந்த விலை ஏற்றங்கள் காய்கறிவிலை, மளிகை சாமான்களின் விலை(பருப்பு, பூண்டு, புளி, மிளகாய்....) அவர்களை பெரிதும் பாதிக்கும் நிலை இருக்கிறது.

சரியான கருத்து
மிஞ்சி போனால் ஒரு மாதம் தான் நாமே இதை பற்றி பேசுவோம், பிறஹு அடுத்த டாபிக் பற்றி பேச ஆரம்பிச்சுடுவோம்..அது மனித இயல்பு. மறதின்னு ஒன்னு இல்லைன்னா மனிதனால் வாழ முடியாது நு பெரியவங்க சொன்னது சரிதான். நம்மால வேர என்ன பா செய்ய முடியும். நாளைக்கு தினசரி சந்தையில் ஒரு கிலோ வெங்காயம் வாங்கினால் 1 கிராம் வெள்ளி காசு என்று வரும். முதல் ஆளாக நம்ம ரெண்டு பேரும் தான் போக போரோம்.

அனிதா சுஜி
” உன்னுடைய கண்ணீருக்கு அருகதை உடையவர்கள் யாரும் இல்லை. அந்த அருகதை உள்ளவர்கள் உன்னை கண்ணீர் சிந்த விட மாட்டர்கள் ”

சுகி /இவங்கள கேக்கரக்கு ஆள் கிடையாது/ அந்த தையரித்துல இவ்வளவு ஊழல் செஞ்சு சேமிச்சு வைச்சுக்க முடியது. ஒரு ஆள் துணிச்சு கேட்டா அவன ஆள், அட்ரெஸ் இல்லாம ஆக்கிடுறாங்க. அதுக்கு பயந்தே மக்களும் நமக்கென்ன எப்படியோ போகட்டும்தானே இருக்காங்க. மக்கள் எது எதுக்கோ அவங்களுடைய பிரச்சனை தீர்த்தற்கு போராட்டம், ஸ்ட்ரைக், பந்து இதெல்லாம் பண்ணறாங்க. நாட்டோ தலைவர்கள் சரியல்லைனு தெரிஞ்சும் எல்லோரும் ஒன்று கூடி போராட்டம் பண்ண வரமாட்றாங்க. அதுதான் ரொம்ப வருத்தமா இருக்கு. நீங்க சொல்லறது க்ரெட் தான் சுகந்தி நமக்குள்ள ஒற்றுமை இல்லாதது காரணம். நம் நாட்டுக்காக சுதந்திரத்துக்கு போராடும் போது அந்த காலத்து மக்கள் ஒற்றுமையில்லாமல் இருந்திருந்தால் இன்றும் நம்நாடு ஆங்கிலயர்கள் ஆட்சியில் தான் இருந்து இருப்போம். அப்ப துணிச்சு போராடுனுவங்க எத்தனை பேர். இப்ப அதுமாதிரி இருப்பாங்கனா அது நமக்கு அதிசியமாவும், ஆச்சிரியமாவும் தான் இருக்கும்.

மேலும் சில பதிவுகள்