38வது வாரம்-இந்த நேரத்தில் வலி இருக்க வேண்டுமா?

அனைவருக்கும் எனது வணக்கங்கள்....

நான் எனது மனைவியின் சார்பாக எழுதுகிறேன். தற்பொழுது எனது மனைவிக்கு 38வது வாரம்..கடந்த வாரம் டாக்டரிடம் சென்று செக்-அப் பண்ணு பொழுது எல்லாம் நார்மலாக இருக்குது என்று சொன்னார்கள்(இறைவனுக்கு நன்றி)...ஆனால் தலை 75% தன் திருப்பி உள்ளது என்று சொன்னார்கள்...மேலும் என் மனைவிக்கு எந்த வலியும் ஏற்படவில்லை கொஞ்சமாக வலிக்குது என்று சொல்வார்...பக்கத்தில் உள்ளர்வர்கள் இந்த நேரத்தில் நன்றாக வலி இருக்க வேண்டும் என்று சொன்னார்கள்... என் மனைவிக்கு கொஞ்சம் பயமாக இருக்கு என்று சொன்னார்...டாக்டர் சொல்லிவிட்டார் எல்லாம் நார்மலாக இருக்குது என்று.... இந்த நேரத்தில் வலி இருக்க வேண்டுமா??? தலை இன்னும் திருப்புவதற்கு இன்னும் நாட்கள் ஆகுமா???

ப்ளீஸ் தங்களுக்கு அறிந்த பதிலை பதியுங்கள்...

வாழ்க வளமுடன்...

குமார்

வாழ்த்துக்கள் குமார்.
வலி தானாக தான் வரும்.எல்லாம் நார்மலாக இருக்கிறது என்றால் ஒன்றூம் பயமில்லை.நல்லபடியாக சுகப்பிரசம் ஆக வாழ்த்துக்கள்
இந்த நேரத்தில் சூடாக உடம்புக்கு பொருக்கும் அள்வுக்கு இடுப்பில் வெண்ணீர் ஊற்ற சொல்லுஙக்ள்.

முட்டை சோறு செய்து கொடுங்கள்.

சுக்கு பால்.இது வயிற்றில் உள்ள வாயுவை வெளியேற்றி தலை இறங்க உதவும்.
பூண்டு பால்
எல்லாமே என் குறிப்பில் இருக்கு,
செல்வி அக்காவும் சோம்பு கஷாயம் கொடுத்து இருப்பாங்க.,
வலது புறம் லேபிலில் கர்பிணி பெண்களுக்கு என்று இருக்கும் அந்த குறிப்புகளை சொடுகி பார்க்கவும்.

\மேலும்.
சீதாலக்‌ஷ்மி அக்கா, ஜேமாமி வேறு யாரும் பதில் போடுவார்கள்

Jaleelakamal

பொதுவா பிரசவம் நெருங்க, நெருங்க பயமாகயிருக்கும்( எனக்கும் இருந்தது) முதலில் பயபடுவதை விட்டுவிடுங்கள். தலை திரும்புவது இயல்பாக நடக்கும். மாடி எறாமல் வராண்டாவில் நடந்து பழகவும். முச்சிறைத்தால் ஒய்வு எடுத்துகொள்ளவும். யாரவது அவருடன் துணையாக இருங்கள். நான் செய்தது இடுப்பு எலும்புக்கு வேலை தருமாரு பார்த்துகொள்ளவும். ( சப்பாத்தி போடுவது, துணிக்கு brush போடுவது)குழந்தை நார்மலாக இருக்கு என்று doctor சொன்னால் செய்யலாம். வலி வந்தால் சோம்பு , சீரகம் கருக வருத்து, வெந்நீர் ஊற்றி , கஷாயம் வைத்து கொடுக்கவும்.
சூட்டு வலி என்றால் மேலும் வலி வராது. பிரசவ வலி என்றால் வலி அதிகமாகும்.

உங்களிடம் எப்படி சொல்வதென்று தெரியவில்லை. இருந்தாலும் உங்கள் மனைவிக்காக சொல்கிரேன். வலி மட்டும் ஒரு அறிகுறியல்ல. உதிரபோக்கு போல் வெள்ளை பட்டாலும் (ஒருவித வாடை) doctor இடம் செல்லுங்கள். எனக்கு 2வது குழந்தைக்கு இப்படிதான் சென்றேன். நார்மல் டெலிவரி. பயபடாமல் இருங்கள்.

எதிர்பார்த்தால்தானே எமாற்றம்

பதில் அளித்த சகோதிரி/அம்மா அவர்களுக்கு மிக்க நன்றி....
உங்களின் பதில்கள் எனக்கு ஆறுதலை அளிக்கிறது...

வாழ்க வளமுடன்

குமார்

சிலருக்கு 40 வாரங்கள் கழித்தும் கூட வலி வராது. சிலருக்கு தலை சீக்கிரமே திரும்பி விடும். ஒவ்வொருத்தருக்கும் வித்தியாசப்படும். உங்களின் மருத்துவர் கூறுவதை மட்டும் கருத்தில் கொள்ளவும். இந்த மாதிரி நேரத்தில் இவர் சொன்னார் அவர் சொன்னார் என்று எதையும் குழப்பி கொள்ள வேண்டாம்.

சிலருக்கு வலியே இருக்காது. ஷாந்தி சொன்ன மாதிரி உதிரப்போக்கு அல்லது வெள்ளை பட்டாலோ மருத்துவரை அணுகவும். வலி வரும் போது அது என்ன செய்தாலும் போகவே போகாது அப்பொழுது மருத்துவமனைக்கு உடனடியாக செல்லவும்.

ஜலீலா அக்க மற்றும் செல்வி அக்காவின் குறிப்பில் கர்பிணி பெண்களுக்கென்று கஷாயம் எல்லாம் இருக்கு. பாருங்க.

சுகப் பிரசவமாய் அமைய வாழ்த்துக்கள்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

திரு. செல்லா குமார் , vr.scrop அவர்கள் சொன்ன மாதிரி யார் சொன்னாலும் கேட்காதிர்கள். அதாவது நாங்கள் தரும் தகவல்கள் உங்களுக்கு தெரியவேண்டும், பயபடகூடாது என்பதற்காகதான். Doctor என்ன சொல்கிறார்களோ அதன்படி செய்யவும். கஷாயம் ஒரு கை வைத்தியம்தான் தவிர அது மருந்தாகது. நான் உங்கள் சகோதரிதான். என் முதல் மகன் 2002லும், 2 வது மகன் 2010(ஏப்ரல்) தான் பிற்ந்தார்கள். அப்ப நான் உங்களுக்கு சகோதரிதானே.

எதிர்பார்த்தால்தானே எமாற்றம்

மிக்க நன்றி சகோதிரி, தங்களின் பதிலால் கொஞ்சம் பயம் போய் விட்டது எனது மனைவிக்கு...உடனடியாக என்னால் பதில் தர முடியவில்லை...

வாழ்க வளமுடன்...

குமார்

சகோதரர் குமார் அவர்களுக்கு

தங்களுக்கு பெண் குழந்தை 01 / 01 / 11 அன்று பிறந்தது அறிந்து மிக்க மகிழ்ச்சி . உங்கள் செல்வ மகள் எல்லா வளங்களையும் பெற்று, பேறும் புகழும் பெற்று , சீரும் சிறப்புடன் வாழ இறைவனை வேண்டிகொள்கிறேன். செல்லாவும் குட்டி தேவதையும் ஆரோக்கியத்துடன் வாழ இறைவனை வேண்டுகிறேன். இந்த புத்தாண்டில் கடவுள் உங்களுக்கு அளித்த மாபெரும் பரிசு உங்கள் செல்ல மகள். செல்லாவும், பப்புகுட்டியும்,வீட்டிற்க்கு திரும்பி விட்டார்களா ?

கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society

Thozhigale enaku may 10 delivery date koduthu ullargal. Indru madhiyam 2 maniyil irundhu pin pakkam idupil irundhu aasana vaai varai vali vittu vittu varugiradhu. Melum irandu naatkalaai gel pola vellai padugiradhu. Idhu delivery kaana ariguriya? Pls badhil koorungal vayiru lesaga valikiradhu but idupil irundhu aasana vaai varai nandraga vali irukiradhu

God is love

Ithu pirasava valitan sis nenga hospital ponga sis en nathanarku April 29date kodutanga but April 16 pain vanthu boy baby piranthatu sis

வாழ்க்கை ஒ௫ புத்தகம்!
முதல் பக்கம் க௫வறை!
கடைசி பக்கம் கல்லறை!
அதன் நடுவில் புன்னகையால் எழுது!
கண்ணீரால் அழிக்காதே!

K sis thank u

God is love

மேலும் சில பதிவுகள்