plz say frnds

karba kalathil husbend and wife seralama?serthu iruthal normal delivery agum nu solraga?ithu unmaya?but clear a enaku ethum purila?tell me frnds

ஹாய் ரேகா...,தாங்கள் கர்ப்பமாக இருக்கின்றீர்களா....வாழ்த்துக்கள்.
எத்தனை மாதம் ஆகின்றது?
முதல் ஐந்து மாதங்கள் ஜாக்கிரதையாகதான் இருக்க வேண்டும்.
எனக்கு முதல் குழந்தை பிரசவத்திலேயே டாக்டரும் ,நர்ஸும் சொன்னது எட்டு மாதத்திற்க்கு பிறகு சேர்ந்தால் சுக பிரசவம் லேசாக நடக்கும் என்று.....
அதையும் தாண்டி கடவுள் என்ன நாடியிருக்கின்றாரோ அதுதான் நடக்கும்.
ஆனால் சேருவதால் பயமில்லை என்றே சொல்வேன்.
உங்கள் உடம்பு நிலையை பொருத்து நீங்கள் நடந்து கொள்ளுங்கள்.
ஆனால் ஐந்து மாதம் வரை ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

hai Apsara madam..romba thanks...enaku ipo 7 months nadakuthu....and first delivery ....na romba payatha subhavam...delivery ninacha konjam payama iruku..normal delivery aga na enna enna seiyanum.....husbend enna seiyanum?plz soluga?

Hope is necessary in every condition:)

ரேகா...முதல் பிரசவம் என்றாலே எல்லோருக்கும் ஏற்படும் பயம்தான் உங்களுக்கும் உள்ளது.இருந்தாலும் மனதை கொஞ்சம் தைரியமாக வைத்து கொள்ள முயற்ச்சி செய்யுங்கள்.சின்ன சின்ன விஷயங்களுக்கும் பயப்பட வேண்டாம்.
இதுவரை டாக்டர் கொடுத்த ரிப்போர்ட் என்ன எல்லாம் நார்மலாக இருப்பதாக சொன்னார்களா...?அதாவது குழந்தை வளர்ச்சி,உங்களுடைய ஹெல்த் கண்டிஷன் இவைகளை பற்றிதான் கேட்கிறேன்.
அவை எல்லாம் ஓகே என்றால் சந்தோஷமாகவே குழந்தையின் வரவை எதிர்பாருங்கள்.
ஓரளவு பழங்கள் கொஞ்சம் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.
முடிந்தால் கணவரின் கைகோர்த்து தினமும் வாக்கிங் சிறிது நேரம் செல்லுங்கள்.(அதில் இருக்கும் இன்பமே தனிதான்)
வீட்டு வேலைகளை முடிந்தவரை நீங்களே பாருங்கள்.எட்டு மாதத்திற்க்கு பிறகு நன்கு குனிந்து நிமிர்ந்தே வேலைகள் செய்யலாம்.(உங்கள் உடம்பு நார்மல் கண்டிஷனுடன் இருப்பின்....என்னை பொருத்தவரை நான் பிரசவம் ஆகும் நிமிடம் வரை என்ன வேலயானாலும் ஈஸியாகவே செய்து விடுவேன்.கை குழந்தை வந்ததும்தான் நினைத்த நேரத்தில் வேலைகள் செய்ய முடியாதே அதை சொல்கிறேன். )
வயிற்றில் மிகவும் அழுத்தம் கொடுக்காமல் நீங்கள் இருவரும் சேரலாம்.
இனிதான் ஆங்காங்கே வலி இருக்கும்.உடனே பயப்பட வேண்டாம்.
குழந்தையின் அசைவுகள் நன்றாக இருக்கின்றதா என்பதை கவனியுங்கள்.இனிதான் அதிக அசைவுகள் தெரியும்.
வீட்டில் பெரியவர்கள் இருந்தால் நிச்சயம் கஷாயம் எல்லாம் போட்டு தருவார்களே.....?அதெல்லாம் நம் உடம்பு சூடை தணிக்கதான்.

வேறு என்ன சந்தேகம் இருப்பின் கேளுங்கள்.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

apsara last time edutha scan report la elam normala aga iruku sonaga...but enaku yesterday nite nenju payagarama erichala iruthathu...hot water kudichen..konjam nala iruthathu..but mid night la again vanthathu...yen ipdy varuthu...and en leg konjam veekama iruku..na ela work um pantren..but dizziness athikama iruku...apo oru work um pana mudila...na ipo chennai la iruken..nanum husbend um tha irukom...so nane ela work um pananum...and tamil la type pantrathu epdy nu clear a soluga plz

Hope is necessary in every condition:)

ரேகா
கால் வீக்கம் ஒரு சிலர்க்கு கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஒன்றுதான் . நாற்காலியில் கால் தொங்க விட்டு உட்கார்வதை தவிர்க்கலாம் . நீண்ட நேரம் நின்று கொள்வதை தவிர்க்கலாம் . நெஞ்சு எரிச்சலுக்கான கரணம் எனக்கு தெரியவில்லை. மருத்துவரை சந்திக்கவும் .
மற்ற தோழிகளும் உங்களுக்கு உதவுவார்கள் .
http://www.google.com/transliterate/தமிழ் . தமிழில் டைப் செய்ய இது உங்களுக்கு உதவும்.

i got it ramya..thank u very much

Hope is necessary in every condition:)

படுக்கும் பொது கால்களுக்கு இரண்டு pillow வைத்து கொள்ளலாம்

அடிக்கடி மயக்கம் வருது ரம்யா...நான் நல்லா தான் சாப்பிடுகிரென்...ஏன் இப்படி வருது...ரொம்ப கேள்விகள் கெட்கரென் ..தப்பா நினைகாதெஙா

Hope is necessary in every condition:)

ரேகா ,
உங்களை போன்று தான் நானும் . அதாவது நாங்கள் இருவர் மட்டுமே எங்கள் வீட்டில் . அணைத்து வேலைகளையும் நானே எங்கள் வீட்டில் செய்யவேண்டும் . வேலை ஆட்கள் கிடையாது . அடுப்பில் சாம்பார் வைத்து விட்டு வந்து படுத்து கொள்வேன் poriyal செய்து விட்டு வந்து படுத்து கொள்வேன் . அதெல்லாம் இயற்கையே . நீங்கள் மயக்கம் வரும் வரை வேலை செய்துகொண்டு நிற்காமல் சற்று ஓய்வு எடுத்து கொண்டு வேலை பாருங்கள்.

ரொம்ப நன்றி ரம்யா...apdye pantren...

Hope is necessary in every condition:)

மேலும் சில பதிவுகள்