6 மாத குழந்தைக்கு சளி-pls help

ஹாய், என் 6 மாத குழந்தைக்கு 3 நாளாக நெஞ்சுசளி. கர் கர் என்று இழுக்கறான். டாக்டர் கிட்ட காட்டியும் சரி ஆகலை.மூக்கில் வடிகிறது.
ரொம்ப கஷ்ட படுகிறான். என்ன syrab கொடுக்கலாம். அல்லது வீட்டு வேய்தியம் சொல்லுங்க.இப்போ இருமல் வருகிறது.இந்த climate kku சளி வரும் என்கிறார்கள். please help me friends.

குழந்தைகளுக்கு ஏற்படும் தொடர் இருமலுக்கு :- சிறிது பெருங்காயத்தை வெந்நீரில் கரைத்து தெளிந்த நீரை கொடுத்து வர குறையும்.

SUMI

veathalaila konjam vicks thadavi atha light da thila kate uruhunathum atha eduthu thadavi vedaum sare ahum

ரொம்ப நன்றி . நான் நீங்க சொன்னபடி செய்து பார்கிறேன். இப்போ வெற்றிலை இல்லை. காலையில் வாங்கி பார்கிறேன்.இப்போதும் சளி இருக்கு. morning vicks தடவிகிறேன். உங்க குறிப்புக்கு நன்றி.

god is great

தோழி இந்த க்ளைமேட்டில் எல்லா குழந்தைகளுக்கும் சளிதான் பிடிக்கின்றது.
நாமும் எத்தனை தடவை டாக்டரிடம் காண்பித்து மருந்து வாங்கி கொடுத்தாலும் கேட்ட பாடில்லை.ஒரு சில கை வைத்தியங்களை அவ்வபோது செய்யலாம்.
நீங்கள் இந்தியாவில் தான் இருக்கின்றீர்கள்.உங்கள் வீட்டின் அருகில் துளசி இலை கிடைத்தால் அதில் ஆறு இலையை பரித்து கழுவி விட்டு அதனுடன் இரண்டு மிளகு,ஓமம் கொஞ்சம்,பூண்டு ஒரு பல் சேர்த்து ஒரு ஸ்பூன் சுடு நீர் தெளித்து நசுக்கி வடிக்கட்டி சாறெடுத்துஅதில் சிறுது தேன் நன்கு கலந்து குழந்தைக்கு காலையில் கொடுங்கள்.மூன்று தொடர்ந்து கொடுத்தாலே போதும்.நன்றாக சளி வாந்தி வழியாகவோ...மோஷன் வழியாகவோ வெளியாகும்.
நான் ஊரில் வந்தால் குழந்தைகளுக்கு அதைதான் கொடுப்பேன்.இங்கிலீஷ் மருந்தெல்லாம் நிறுத்தி விடுவேன்.என் மூன்று குழந்தைகளுக்கும் கை குழந்தையிலிருந்தே இதை செய்து வருகின்றேன்.
எனவே முயன்று பாருங்கள்.குழந்தைகள் கொப்பாளிப்பார்கள்.கத்துவார்கள்.கொஞ்சம் சடக்கென்று வாயில் புகட்டி விட வேண்டும்.உடனே பாலோ தண்ணீரோ அரை மணி நேரத்திற்க்கு வேண்டாம்.என் குழந்தைகள் கை குழந்தையில் எல்லாம் சடக்கென்று அழுது கொண்டே உடனே வாந்தி எடுக்கும் வெரும் கொழ கொழவென்று சளிதான் வந்து விழும்.மூன்று நாட்கள் கடந்ததும் நல்ல பலன் தெரிவதை உணரலாம்.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

குறிப்புக்கு ரொம்ப நன்றி. இப்போ கொஞ்சம் பரவாயில்லை.

god is great

மேலும் சில பதிவுகள்