பராசாப்பம்

தேதி: December 23, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (2 votes)

 

ஆப்பம் மாவிற்கு:
பச்சரிசி - 2 டம்ளர்
சாதம் - மூன்று கையளவு
உளுந்து - 2 தேக்கரண்டி
வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
கலப்பதற்கு:
முட்டை - ஒன்று
சின்ன வெங்காயம் - அரை கப்
தேங்காய் துருவல் - 3 தேக்கரண்டி
சோம்பு - ஒரு தேக்கரண்டி
மஞ்சள்தூள் - 1 1/2 தேக்கரண்டி
பச்சைமிளகாய் - 2
நெய் - சுடுவதற்கு
உப்பு - தேவைகேற்ப்ப
சமையல் சோடா - சிறிதளவு
சீனி - ஒரு தேக்கரண்டி


 

ஆப்பம் தயாரிக்க கொடுத்தவைகளில் சாதத்தை தவிர மற்றவைகளை இரண்டு மணி நேரம் ஊர வைத்து பின் நன்கு கழுவி விட்டு சாதத்தை சேர்த்து பிசைந்து மிக்ஸியில் நைசாக தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்.(கொஞ்சம் கெட்டியாக இருக்க வேண்டும்.)தேவையான உப்பு சேர்த்து புளிக்க விடவும். மற்ற தேவையான பொருட்களையும் தயார் நிலையில் வைத்து கொள்ளவும்.
தேங்காய் துருவல், சோம்பையும் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றிவிட்டு, பின்பு வெங்காயம், பச்சைமிளகாய், மஞ்சள் தூள் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
புளித்திருக்கும் ஆப்பமாவில் முட்டையையும் சோடா உப்பும் சேர்த்து நன்கு அடித்து கலக்கி விட்டு பின்பு அரைத்தவற்றையும், சீனியையும் சேர்த்து நன்கு ஒன்று சேர கலக்கி பத்து நிமிடம் வைக்கவும்.
பின்பு ஒரு தோசைகல்லை அடுப்பில் வைத்து சூடுவந்ததும், ஒரு கரண்டி நிறைய மாவு எடுத்து ஊற்றி தோசை போல் தடவாமல் நடுவில் மட்டும் லேசாக தளர்த்தி விட்டு (இப்படி செய்தால் ஒரே அளவாக இருக்கும்) சுற்றிலும் ஒரு ஸ்பூன் நெய் அல்லது எண்ணெய் விட்டு ஒரு மூடி போட்டு மூடி மிதமான தனலில் சிவக்க விடவும்.
சிவந்ததும் லேசாக திருப்பி விட்டு மறுபடியும் நெய் சுற்றிலும் விட்டு சிவக்கவிட்டு எடுக்கவும். ஓரமெல்லாம் மொறுவலாக சாப்பிட நல்ல சுவையுடன் இருக்கும்.
குழந்தைகளுக்கு ஒரு ஸ்பூனில் எடுத்து ஊற்றி சிறிது சிறிதாக சுட்டு சாப்பிட தரலாம். வெறுமெனவே குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். லன்ச் பாக்ஸிற்கும் கொடுக்கலாம்.

இதனுடன் கறி, கோழி குழம்பு தொட்டு சாப்பிட நன்றாக இருக்கும். வெங்காயம், தக்காளி சட்னியும் நன்றாகவே இருக்கும். முட்டை இல்லாமலும் இதை செய்யலாம். நன்றாகவே வரும். கறிவேப்பிலை இலைகளையும் சேர்த்து சுடலாம் மணமாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

இந்த பராசாப்பம் இப்பதான் நான் முதலில் கேள்விபடுகிறேன்..வாழ்த்துக்கள் புதிது புதிதாக குறிப்புகள்தருகிறீர்கள் செய்துபார்க்கிறேன் அப்சரா மீண்டும் வாழ்த்துக்கள்..

வாழு, வாழவிடு..

என் தங்கை இது மாதிரிதான் செய்வாள்,நல்லா இருக்கும்.நல்ல குறிப்பு.வாழ்த்துக்கள்

பார்க்கும்போதே பசியை தூண்டுகிறது...
நானும் முதன் முதலாக இந்த பேரை கேள்விபடுகிறேன்..
நீங்க இப்படியே குறிப்புகள் கொடுத்துட்டு இருந்தா சீக்கிரம் துபாய்க்கு வர்றது தவிர வேற வழி தெரியல...
நல்ல குறிப்பு வாழ்த்துக்கள்

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

சாலம் அப்சரா அக்கா. நானும் இது மாதிரிதான் செய்வென் ஆணால் வெந்தயம் சேர்க்க மாடேன்.அடுத்த முரைய் இது மாதிரி சேய்து பார்கிரென்.

அப்சரா வித்தியாசமான பேராஇருக்கு இப்போதான் கேள்விப்படுறேன் புதுசு புதுசா குறிப்பா குடுக்குறீங்களே ரூம் போட்டு யோசிப்பிங்களோ?? வாழ்த்துக்கள் (தங்கையே)

அஸ்ஸலாமு அலைக்கும்
அக்கா இப்படி ஒரு பெயரையே இப்பத்தான் கேள்வி படுறென் வித்தியாசம இருக்கு.தொடரட்டும் தங்கள் பணி......வாழ்த்துகள்.......

நலமா..புது விதமான குறிப்பா இருக்கு அப்சரா.கண்டிப்பாக செய்து பார்க்கிறேன்.இது மயிலாடுதுறை ஸ்பெஷலா! வாழ்த்துக்கள்.

radharani

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அவர்களுக்கு முதலில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும் ருக்‌ஷானா...,நலமா...?
முதல் ஆளாக வந்து கருத்தினை தெரிவித்த தங்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.இது எங்கள் ஊர் பகுதிகளில் அனைவரும் அறிந்ததே....
முடிந்த போது செய்து பாருங்கள்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர்.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

ரீம் எப்படி இருக்கீங்க?
ஓ...அப்படியா...உங்கள் தங்கை செய்திருக்கின்றார் என்றால் நிச்சயம் உங்களுக்கு இந்த டேஸ்ட் தெரியும்.
வாழ்த்து தெரிவித்தமைக்கு மிகவும் நன்றி ரீம்.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

இளவரசி சொல்லி கொண்டே இருக்கின்றீர்களே.....
எப்போது வருகின்றீர்கள் என்று மட்டும் சொல்லுங்கள்.
சும்மா விருந்து உபசரிப்போடு அசத்திட மாட்டோமா என்ன...?(பயந்து ஓடாம இருந்தா சரி..பா.....)
முடிந்த போது செய்து பாருங்க இளவரசி.....
தங்கள் வாழ்த்துக்களுக்கும்,கருத்துக்கும் மிக மிக நன்றி இளவரசி.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

வ அலைக்கும் சலாம் ரினோஸ்.
நீங்களும் இப்படிதான் செய்வீங்களா...ரொம்ப சந்தோஷம் பா.
உங்கள் கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு மிகவும் நன்றி மா ரினோஸ்.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

ஆமாம் அக்கா.... இதன் பெயர் கொஞ்சம் வித்தியாசம் தான்.ஆனால் புது குறிப்பல்ல...கலம் காலமாக எங்கள் ஊர் பகுதிகளில் செய்து வருவதுதான்.
மாப்பிள்ளை சாப்பாட்டில் கூட ஐந்தாறு வகை காலை சிற்றுண்டியில் இதுவும் ஒரு வகையாக இருக்கும் அக்கா.
கறி குழம்போடு சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும் அக்கா.
முடிந்த போது முயன்று பாருங்கள்.
தங்கள் வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி அக்கா.மிக்க மகிழ்ச்சி.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

வ அலைக்கும் சலாம் மீரான் துணைவி அவர்களே...,
உங்கள் கருத்து கண்டு மிக்க மகிழ்ச்சி மா......
தங்கள் வாழ்த்துக்கும் மிக மிக நன்றி மா.....

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

நான் நலம் ராதா....நீங்கள் நலமாக இருக்கின்றீர்களா...?
உங்கள் பின்னூட்டம் கண்டு மிக்க மகிழ்ச்சி.
ஆமாம் ராதா எங்கள் ஊர்களில்(காரைக்காலிலும்)மிகவும் தெரிந்த ஒரு குறிப்பு தான் இது.
முடிந்த போது செய்து பார்த்துட்டு சொல்லுங்க ராதா...
தங்கள் வாழ்த்துக்கு நன்றி.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

அப்சரா நீங்க மாயவரத்துக்காரரா?என் ஊருக்கு பக்கம் தான் உங்க ஊர்,பராசாப்பம் நம் ஊர் ஸ்பெஷல்,நான் இந்த குறிப்பை வெளியிடலாம் என்று இருந்தேன்,நீங்கள் முந்தி கொண்டீர்கள்,ரொம்ப சந்தோஷம்,பராசாப்பம் பேரை பலர் கேள்விபட்டதே இல்லை என்று சொல்வதை கேட்டு ஆச்சர்யம்!நானும் இந்த முறை படிதான் செய்வேன்,ஆனால் வெந்தயம்&உளுந்து சேர்க்க மாட்டேன்,குறிப்புக்கு நன்றி!

Eat healthy

அப்சரா..இந்த பெயரும் புதிது, செய்முறையும் புதிதாக உள்ளது.இந்த உணவு உங்கள் தயாரிப்பா?
புதிது புதிதாக குறிப்புகள்தருகிறீர்கள் செய்துபார்க்கிறேன் அப்சரா மீண்டும் வாழ்த்துக்கள்..

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

அப்ஸ், வீட்ல சும்மாவே இருக்க மாட்டீங்க போலிருக்கே? புதுசு புதுசா எதாவது புது சமையல் குறிப்பை பத்தி யோசிச்சுட்டே சமையல் பண்ணுவீங்களா பா? இந்த குறிப்பும், பெயரும் இப்போது தான் நான் கேள்விபடுறேன் பா. குறிப்பை படிக்கும் போதே அதன் சுவையையும் உணர முடிகிறது. இருந்தாலும், நம்ம அப்ஸ்-க்காக கண்டிப்பா நான் செய்து பார்த்துடறேன். வாழ்த்துக்கள் பா. தொடர்ந்து அசத்துங்க அசத்தல் அப்ஸ் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

அஸ்ஸலாமு அலைக்கும் ரஸியா....நலமாக இருக்கின்றீர்களா?
நான் மாயவரத்துக்கும் அருகே ஒரு கிராமம்.
அம்மா ஊர் திருவாளப்புத்தூர்.
கணவர் ஊர் வேலம்புதுக்குடி ரஸியா....
இது எல்லாம் நம்ம ஏரியாதானே...?
தடுக்கி விழுந்தால் எங்களுக்கு மாயாவரம்தான்.
தங்கள் ஊர் எது என்று தெரிந்து கொள்ளலாமா...

அப்புறம்,மன்னிக்கவும் ரஸியா....உங்கள் கைவண்ணத்தை நான் கெடுத்துவிட்டேன் போலிருக்கே....
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் பிடித்த உணவு இது.
என் அம்மா உளுந்து,வெந்தயம் சேர்த்துதான் வெள்ளை ஆப்பமே செய்வார்கள்.
அதே முறையைதான் நானும் செய்து கொண்டிருக்கின்றேன்.
தங்கள் கருத்துக்கு மிக மிக நன்றி ரஸியா....

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

யோகராணி எப்படி இருக்கீங்க?
இது எங்கள் ஊர் பக்கம் மற்றும் எங்கள் குடும்பங்களில் காலம் காலமாக செய்து கொண்டிருக்கும் ஒரு டிபன் வகை.
இது என் கணவர்,குழந்தைகளுக்கு விருப்பமான ஒன்று என்பதால் அடிக்கடி செய்வேன்.
முடிந்தபோது செய்து பாருங்கள்.உங்களுக்கு பிடிக்கும்.
தங்களை போன்றவர்களின் வாழ்த்து எனக்கு மிகவும் சந்தோஷத்தை தருகின்றது.
மிகவும் நன்றி யோகராணி மேடம்.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

கல்பனா எப்படி இருக்கீங்க?
உங்களுடைய தொடர் பின்னூட்டம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகின்றது.
நீங்கள் சொல்வது உண்மைதான்...சும்மா உட்கார்ந்தா என்னடா செய்யலாம்னுதான் யோசிப்பேன்.தினமும் செய்யும் சமையலிலேயே கொஞ்சம் மாற்றி சமைச்சா எப்படி இருக்கும்னு சமைச்சு பார்ப்பேன்.
ஆனால் இந்த குறிப்பு எங்கள் குடும்பங்களில் பழைய காலத்தில் இருந்து செய்து வருவது...அதை உங்களோடு பகிர்ந்து கொண்டேன்.
நிச்சயம் செய்து பாருங்க.....
தங்கள் பாராட்டுக்கும்,வாழ்த்துக்களுக்கும் மிகவும் நன்றி கல்ப்ஸ்.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

சலாம் அக்கா.உங்க கணவர் ஊர் வேலம்புதுக்குடி ய. என் கணவர் ஊர் இலுப்புர்.பக்கம் பக்கம் தான் நெரிகிடொம்

வ அலைக்கும் சலாம் ரினோஜ்....
வாவ்வ்வ்வ்வ்வ்வ்...... ஆமாம் மிகவும் பக்கம்தான்.
எப்போது ஊருக்கெல்லாம் வருவீங்க?
வரும்போது அவசியம் எங்கள் வீட்டிற்க்கு வரலாம் இல்லையா அதான் கேட்கிறேன்.
விரும்பினால் நாம் தொடர்பு கொள்ளலாம் ரினோஸ்.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

அலைக்கும் சலாம் அப்சரா,நான் நலம் நீங்க நலமா?நான் மாயவரத்தை அடுத்த தரங்கம்பாடி என்ற ஒரு கிராமம்,கோட்டைக்கு பேர் போன ஊரு,இந்தியாவிலேயே ஓசோன் காற்று வீசும் ஒரே ஊர் என் ஊர்தான்,இங்கே சூப்பரான பீச் இருக்கு,நீங்க கேள்வி பட்டிருப்பீங்கன்னு நினைக்கிறேன்,
என்ன இருந்தாலும் உங்க கைவண்ணம் போல் ஆகுமா?!அது தனி சுவைதான்,நம்ம ஊர் பராசாப்பத்தை நீங்க செஞ்சா என்ன,நான் செஞ்சா என்ன!எல்லாமே ஒன்னுதான்,உங்க கருத்துக்கும் நன்றி அப்சரா!!!

Eat healthy

அக்கா எப்படி இருக்கிக? வீட்டில் எல்லாரும் எப்ப்டி இருக்கிக?இன்ஸா அல்லா ஊருக்கு வரும் பொது காண்டிபா வர்ரென்.இப்பொ உஙகல எப்படி தொடர்பு கொலுவது?

அஸ்ஸலாமு அலைக்கும் ரினோஸ்.நானும் வீட்டில் உள்ளவர்களும் நலமாக உள்ளோம்.இன்ஷா அல்லாஹ் நிச்சயம் சந்திக்கலாம் மா.....
என் ஐடியை கொடுப்பேன்.ஆனால் அட்மின் என்ன சொல்வார்கள் என்று தெரிய வில்லையே.....?இருந்தாலும் தருகின்றேன் apsarafareej@yahoo.co

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

அடடே....தரங்கம்பாடியா.....அதுவும் நமக்கு பக்கம் தான் ரஸியா....
புகழ்பெற்ற இடமாச்சே கேள்விபடாமல் இருப்போமா...?
என்னை தவிர எங்கள் வீட்டில் அந்த கடற்கரைக்கு வந்து இருக்கின்றார்கள்.
ஏனோ அந்த இடத்திற்க்கு வர அல்லாஹ் எனக்கு இதுவரை நாடவில்லை.
இதோ அங்கே எனக்கு தெரிந்தவர் என்று இனி உங்களை நான் பெருமையாக சொல்லிக்கொள்ளலாம்.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

இன்ஷாஅல்லாஹ் நான் ஊருக்கு வரும்போது இங்கே வாங்க,நான் உங்களை பீச்சுக்கு அழைச்சிட்டு போறேன்,தெரிந்தவர் என்று சொல்வதை விட உங்கள் தோழின்னு சொல்லலாமே?!

Eat healthy

சலாம் அப்சரா,
பராசாப்பம் சம்ம டேஸ்டா இருக்கும்.உங்க குறிப்பு சூப்பர்.எங்க வீட்டிலும் செய்வாங்க.
கொஞ்சம் வித்தியாசம்.
சாப்பிட்டு ரொம்ப நாள் ஆகுது. இதை பார்த்தவுடன் செய்யநும் போல் உள்ளது.
அப்சரா உங்க id யை நானும் குரிதுக்கொள்ளலாமா?
சாரி உங்களிடம் கேட்காமல் குறித்து accept கேட்டு விட்டேன்.சாரி அப்சரா.நீங்க denied செய்து விட்டீர்கள்.
என் id என் பெயரில் வராது.நான்தான் தெரியாமல் செய்துவிட்டேன்.once again sorry

ஹசீன்

வ அலைக்கும் சலாம் ஹசீனா....
தங்கள் கருத்து கண்டு மிக்க மகிழ்ச்சி
நன்றி மா...
நீங்கள் தானா அது ரொம்ப ரொம்ப ஸாரிமா....
ஆண் பெயர் வந்ததும் சற்றே யோசிக்கும்படி ஆகிவிட்டது.
தங்கள் மனம் வருத்தப்பட்டால் அதற்க்காக நான் வருந்துகிறேன் ஹசீனா....
நிச்சயம் நான் உங்களின் நட்பு கிடைப்பதை விரும்புவேன்.
நீங்கள் எதற்க்கு ஸாரி கேட்கின்றீர்கள்?
சீக்கிரமே நாம் இருவரும் chat பண்ணலாம்.(இன்ஷா அல்லாஹ்)

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

இறைவன் கொடுப்பதை தடுப்பவர் எவருமில்லை,

இறைவன் தடுப்பதை கொடுப்பவர் எவருமில்லை

என்ன அருமையான கருத்து எல்லாம் வல்ல இறைவனின் சக்தி மனித சிந்தனைக்கு உட்பட்டதல்ல.மேலும் எதோ ஒரு காரணத்திற்காக நம்மை சோதிக்கிறர், எல்லாம் நல்லதற்கே என்று எடுத்துக்கொள்வது மன அழுத்தம் இல்லாமல் செய்யும்

அச்சமில்லை

அக்கா நான் உங்கல yhaoo ல add பன்னீடென்.

ரினோஸ் எனக்கு இப்ப request பண்ணுங்க...நானும் add பண்ணிக்கொள்வேன் இல்லையா... அல்லது ஒரு msg அனுப்புங்க சரியா...?

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

மறுபடி request செய்து உள்ளேன்.accept செய்யுங்க.reply plsssssssss

ஹசீன்

என்னையும் உங்க ப்ரண்டா சேர்த்துக்குவீங்களா???உங்க ஐ.டி நானும் நோட் பண்ணிட்டேன்.

ஹாய்.. அப்சரா அக்கா ... எப்டி இருக்கிங்க ... உங்க ரெசிபி சுபெர் ... வீட்டில் அனைவரும் நலமா ..??

Express Yourself .....

அஸ்ஸலாமு அலைக்கும் ஹசீனா...
ஸாரி மா.... உங்க request எனக்கு வரவில்லையே.....

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

ரீம் நிச்சயமா..... சீக்கிரம் என்னை தொடர்பு கொள்ளுங்கள்.
அப்போதுதானே உங்க ஐடியை நான் சேர்க்க முடியும்.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

அஸ்ஸலாமு அலைக்கும் ஷாகியா....
நாங்கள் அனைவரும் நலமாக உள்ளோம்.
நீங்களும்,அண்ணனும்,பிள்லையும் நலம்தானே...?
தங்கள் கருத்து கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.
மிகவும் நன்றி ஷாகியா...

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

அக்கா உங்கலை add பன்னீ msg பன்னிடேன் உங்கலுகு வந்துசா?

இதுவரை வரவில்லை ரினோஸ்.மெசேஜ் மாதிரி ஏதும் அனுப்புங்களேன்.
ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

சலாம் அக்கா, எப்படி இருக்கிக? உங்க id எனக்கு add பான்னவே முடியல. sorry அக்கா எங்க வீடில் heater work அகுலை அதன் நான் எங்க அம்மா வீடுக்கு போய்டென் அதன் replay பன்ன முடியலை தப்ப நினைக்கதிக.

வ அலைக்கும் சலாம் ரினோஸ்.நான் நலம் நீங்கள் நலமா?
பரவாயில்லை மா ரினோஸ்.உங்க ஐடியை வேணும்னா கொடுங்க.நான் உங்களுக்கு மெயில் பண்றேன்....(விரும்பினால்...)

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

கண்டிபா தரென். riyasrabia@yahoo.fr