நான் செய்யும் சப்பாத்தி ஹோட்டலில் சாப்பிடும் சப்பாத்தி போல் மிருதுவாக இருப்பது இல்லை. என்ன காரணம்? நானும் அவர்கள் செய்வது போல் தான் செய்கின்றேன். ஒன்று கடினமாகி விடுகின்றது. இல்லை என்றால் மொறுமொறுவென்று போய் விடுகின்றது. மென்மையான சப்பாத்தி சுடுவதற்கான ரகசியத்தை யாராவது சொல்லுங்கள்.
chappathi
Anusha,
Try adding 2 spoons of curd while mixing the flour
நன்றி ஷாம்
தவறாக நினைக்க வேண்டாம். நான் இப்போதுதான் சமையல் கற்றுக் கொண்டு வருகின்றேன். புத்தகத்தைப் பார்த்து, அடுத்தவர்களைக் கேட்டு நான் முயற்சி என்னவெல்லாம் முயற்சி செய்தேன் என்று சொல்லுகின்றேன்.
1. சிறிது தயிர் சேர்த்துப் பார்த்தேன்
2. டால்டா சேர்த்தேன் (ஒரு ஹோட்டலில் சொன்னார்கள்)
3. ஒரு ஸ்பூன் சீனி சேர்த்துப் பார்த்தேன்.
4. வாழைப்பழம் சேர்த்துப் பார்த்தேன்.
5. சிறிது மைதா சேர்த்துப் பார்த்தேன்.
6. அடுப்பு தீயின் அளவை மாற்றி மாற்றிப் பார்த்தேன்.
இவை ஒவ்வொன்றையும் ட்ரை பண்ணும்போது டேஸ்ட் மாறி வந்ததே தவிர சாப்ட்னெஸ் இல்லை. சற்று ஆறின உடனே அப்பளம் போல் ஆகிவிடுகின்றது.
எண்ணெய் நிறைய ஊற்றினால் கொஞ்சம் சாப்டாக இருக்கின்றது. ஆனால் எண்ணெய்யே ஊற்றாமல் நிறைய பேர் சாப்டாக சப்பாத்தி செய்கின்றார்கள்.
தவறு என்னிடம்தான் இருக்கின்றது என்பது தெரிகின்றது. ஆனால் எங்கே தவறு செய்கின்றேன் என்பதுதான் தெரியவில்லை.
அன்புள்ள
அன்புள்ள அனுஷா!
ஒரு கப் கோதுமை மாவிற்கு 2 டேபிள் ஸ்பூன் மைதா மாவு சேர்த்து அத்துடன் 1/2 டீஸ்பூன் பேக்கிங் பெளடரையும் ஒரு ஸ்பூன் எண்ணெயையும் தகுந்த உப்புடன் சேர்த்து சற்று சூடான நீரை உபயோகித்து சற்று இளக்கமான மாவு தயாரியுங்கள். குறைந்த பட்சம் அரை மணி நேரம் ஊற வையுங்கள். சப்பாத்தி இடும்போது ரொம்பவும் மெல்லியதாக இல்லாமல் சற்று கனமாக இடுங்கள். தீ சிறிது அதிகமாக இருக்க வேண்டும். சப்பாத்தியை தோசைக்கல்லில் இரு பக்கங்களும் பிரட்டிப் போடும்போது இலேசாக எண்ணெயைத் தடவினால் போதும். ஒரு துணியை வைத்துக் கொண்டு இரு பக்கங்களும் press செய்தால் சப்பாத்தி புஸ்ஸென்று உப்பிக்கொண்டு வரும். அல்லது நல்ல தீயில் 2 வினாடிகள் இரு பக்கங்களையும் போட்டெடுத்து, பிறகு ஒரு கிடுக்கியால் பிடித்துக் கொண்டு நேரடியான தீயில் இரு பக்கங்களையும் வேக வைத்தால் சப்பாத்தி மிக மிக மெதுவாக இருக்கும்.
Success ..
very very thanks Mrs. Mano. கிட்டத்திட்ட நெருங்கிவிட்டேன். உங்கள் முறையில் செய்த போது சப்பாத்தி சாப்டாக வருகின்றது. ஒரு சிறியப் பிரச்சனை. மைதா கலப்பதால் சப்பாத்தி வெள்ளையாக தெரிகின்றது. அது மட்டுமல்லாமல் டேஸ்டில் வித்தியாசம் இருக்கின்றது. ஆனால் கிட்டத்திட்ட நான் எதிர்பார்த்த சாப்ட்னெஸ் வந்துவிட்டது. அடுத்த முறை மைதாவை குறைத்துப் பார்க்கின்றேன். இன்னொரு விசயம், சப்பாத்தி சரியாக வேகாதது போல் இருக்கின்றது. திக்னெஸ்சை குறைக்க வேண்டும் என நினைக்கின்றேன்.
தீயில் இரண்டு பக்கங்களையும் நேரடியாக வேக வைப்பது எப்படி? புகை அடித்து கருகி விடாதா?
மேலும் சப்பாத்தி பற்றி
அன்புள்ள அனுஷா!
உங்களுக்கு ஓரளவு மிருதுவாக சப்பாத்தி கிடைத்ததில் மகிழ்ச்சி. முதலிலேயே எழுத மறந்து விட்டேன், சப்பாத்தி மாவு பிசையும்போது கிட்டத்தட்ட 15 நிமிடமாவது நன்கு அடித்துப் பிசைய வேண்டும். மஹாராஷ்ட்ராவில் வெறும் ரேஷன் கோதுமை மாவில் உப்பும் நிறைய தண்ணீர் மட்டும் சேர்த்து ஒரு கட்டையால் அடிப்பார்கள், நிறைய நீர் சேர்த்து கையால் பிசைவது இயலாது என்பதால். அடிக்க அடிக்க நீரெல்லாம் குறைந்து மாவு மிருதுவாக திரண்டு வரும்.
நேரடித்தீயில் வேக வைக்கும்போது, ஒரு கிடுக்கியால் பிடித்துக்கொண்டு இரு பக்கங்களும் வாட்டலாம். கருகாது. புகை வாசனையும் அடிக்காது. கடைகளில் வலைகள் பின்னப்பட்ட நீண்ட கைப்பிடி கொண்ட, டென்னிஸ் ராக்கெட் போன்ற சாதனம் கிடைக்கிறது. சென்னையில் ரங்கனாதன் தெருவில் உள்ள கடைகளில் நிச்சயம் கிடைக்கிறது. சூடான தோசைக்கல்லில் முதலில் இரு பக்கங்களும் இலேசாக சூடாக்கிக் கொண்டு உடனேயே இந்த கருவியில் போட்டு நேரடித்தீயில் சற்று உயரத்தில் பிடித்துக் கொண்டு ஒரு பக்கம் இலேசாக வாட்டி, பிறகு அடுத்த பக்கம் வாட்ட வேண்டும்.அதிலேயே புஸ்ஸென்று உப்பி வரும். இதற்கு சப்பாத்தியை மெல்லியதாகவே போட்டெடுக்கலாம். மிக மிக மிருதுவாக இருக்கும். வாட்டிய பிறகு இலேசாக எண்ணெய் தடவிக் கொள்ளலாம்.
சில சமயங்களில் வெளியில் வாங்கும் கோதுமை மாவின் texture நன்றாக இருப்பதில்லை. மைதா சேர்ப்பதால் சப்பாத்தியின் texture நன்றாக வர உதவி செய்கிறது. அதன் அளவை நீங்கள் குறைத்துக்கொள்ளலாம். நாமே தயாரிக்கும் கோதுமை மாவுதான் அதிக சுவையாக இருக்கும்.
Dear Anusha,
Try Making the chappathi dough using hot (not warm) water & salt.Keep for atleast 15 minutes and make chappathis.
Vazhga Tamil!!!
அனைவருக்கும் நன்றி
நான் ஒரு வழியாக சப்பாத்தி ஸ்பெஷலிஸ்டாகிவிட்டேன் என்று நினைக்கின்றேன். சித்ரா துரை அவர்கள் கொடுத்த டிப்ஸ் நன்கு வேலை செய்கின்றது. இன்று காலை அந்த முறையில்தான் சப்பாத்தி செய்தேன். நன்றாக வந்துள்ளது. எங்கள் வீட்டுக்கு அருகில் வசிக்கும் ஒருவரும் இதே ஐடியாவைத்தான் சொன்னார். வெந்நீரில் மாவினைப் பிசைவதால், பிசையும் போதே மாவு சற்று வெந்துவிடும். பிறகு லேசாக சூடு செய்தாலே போதுமானது. சப்பாத்தியும் மிருதுவாக இருக்கும் என்றார். இதுதான் Secret behind a soft chappathi என்று நினைக்கின்றேன். நெருப்பில் காட்டி சுடும் முறையையும் கற்றக் கொண்டு விட்டேன். சிறிய பிரச்சனை. கிடுக்கியில் பிடித்து சப்பாத்தியை தூக்கும் போது, பிய்ந்து விழுந்துவிடுகின்றது. எனது கிடுக்கியின் முனையில் பல் பல்லாக உள்ளது. வேறு கிடுக்கி வாங்க வேண்டும். எனக்காக உங்கள் நேரத்தை செலவு செய்த அனைவருக்கும் மிக்க நன்றி.
capathi
naan ouru china karuthu soligeran capathi chimuri mavu upu cirthi sarikari sudana thaniri kondu pesyaum sirthu oil pesyaum siruthu naran mudi yikaum peragu chpathi chivandum
thanks for the tips, mrs.
thanks for the tips, mrs. chithra durai & mrs.mano.....it worked for me too.....
நன்றி...
Soft Chappathi
Live&Let Live. Thanks forum 4 ur useful tips for making Soft Chappathi's. its working fine 4 me
Live&Let Live