நான் இணையத்தளத்திற்கு புதிது. நான் உறுப்பினர் ஆகி பல நாட்கள் ஆகிறது. ஆனால் பயன்படுத்த முடியாததற்கு காரணம் ஒவ்வொரு தடவையும் எனது கடவுச்சொல் தவறு என்றே சொல்லும். ஆனால் சரியான கடவுச்சொல் தான் நான் பதிவுச்செய்திருப்பேன். பின்பு நான் எனது இணையத்தள முகவரிக்கு சென்று மாற்றிவிட்டு வர வேண்டும்.
இந்த தடங்கலை எப்படி போக்க வேண்டும் என்று சொல்லுங்கள். மேலும் எனக்கு தெரிந்த சமையல் குறிப்புக்களை ( புகைப்படத்துடன் மற்றும் புகைப்படம் இல்லாமலும் ) எப்படி அனுப்பி வைக்க வேண்டும் என்று சொல்ல வேண்டும்.
மீனா
இந்த மாதிரி பிரச்சனை நிறைய முறை எல்லாருக்கும் வந்து தான் இருக்கிறது. எனக்கு இதுவரை இப்படி நடந்ததது இல்லை, அதனால் சரியாக தெரியவில்லை. நீங்கள் பண்ணும் சமையல் குறிப்பை படங்களுடன் ////////arusuvaiadmin@gmail.com/////// இந்த மெயில் ஐடி க்கு அனுப்புங்க.
சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***
தவறான கடவுச்சொல்
// காரணம் ஒவ்வொரு தடவையும் எனது கடவுச்சொல் தவறு என்றே சொல்லும். ஆனால் சரியான கடவுச்சொல் தான் நான் பதிவுச்செய்திருப்பேன்..//
கண்டிப்பாக இருக்காது. பயனீட்டாளர் பெயரும், கடவுச்சொல்லும் சரியாக கொடுக்கப்பட்டிருக்கும் பட்சத்தில், தவறு என்று வரவே வராது. அடித்துச் சொல்வேன். :-) கம்ப்யூட்டரில் ஒரு சில நேரத்தில் பாஸ்வேர்டை ஏற்றுக்கொண்டு, ஒரு சில நேரங்களில் தவறு என்று காண்பிக்க எல்லாம் வாய்ப்பே கிடையாது.
//பின்பு நான் எனது இணையத்தள முகவரிக்கு சென்று மாற்றிவிட்டு வர வேண்டும்.//
இது எனக்கு புரியவில்லை. இணையதள முகவரி என்று எதைக் குறிப்பிடுகின்றீர்கள்??
உங்களது ப்ரொஃபைல் பக்கத்தினை குறிப்பிடுகின்றீர்களா? அங்கே சென்று உங்களது பாஸ்வேர்டை மாற்றுகின்றீர்களா? அங்கே செல்ல வேண்டுமென்றால் நீங்கள் லாகின் செய்திருக்க வேண்டுமே.. உங்களின் பாஸ்வேர்டு ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில் எப்படி நீங்கள் லாகின் செய்திருப்பீர்கள்?
//இந்த தடங்கலை எப்படி போக்க வேண்டும் என்று சொல்லுங்கள்.//
கண்டிப்பாக இது தடங்கல் அல்ல. உங்கள் பக்கம் நடக்கும் ஏதோ ஒரு தவறு. ஒன்று நீங்கள் கடவுச்சொல்லை தவறாக கொடுக்க வேண்டும். இல்லையென்றால் உங்கள் சிஸ்டமில் வேறு ஏதேனும் பிரச்சனைகள் இருக்க வேண்டும். ekalappai, NHM போன்றவற்றை பயன்படுத்தும்போது, அது தமிழ் mode ல் இருக்கும். நாம் அதை கவனிக்காது, ஆங்கில பாஸ்வேர்டை டைப் செய்வோம். நாம் டைப் செய்யும் பாஸ்வேர்டு என்னவென்பது நமக்கு அந்த பெட்டியில் தெரியாது என்பதால், நாம் டைப் செய்தது சரி என்றே எண்ணுவோம். அப்படி ஏதேனும் பிரச்சனை இருக்க வாய்ப்புள்ளது. ஒரு சில வைரஸ்களினால்கூட இந்தப் பிரச்சனை வரலாம்.
அடுத்த முறை உங்களுக்கு இந்த பிரச்சனை ஏற்பட்டால், நீங்கள் உங்களது பாஸ்வேர்டை ஒரு நோட்பேடில் டைப் செய்து, பிறகு அதை காப்பி செய்து, பாஸ்வேர்டு கொடுக்கும் இடத்தில் பேஸ்ட் செய்து பாருங்கள். அப்படியும் பிரச்சனை வந்தால், பாஸ்வேர்டு, யூசர்நேம் இரண்டையும் மாற்றாமல் எனக்கு மெயிலில் அனுப்புங்கள். நான் சரி பார்க்கின்றேன்.
மற்றபடி உங்கள் சமையல் குறிப்புகளை(படங்களுடன் கூடிய குறிப்புகளை மட்டும்) மேலே சுகந்தி அவர்கள் குறிப்பிட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அதனைப் பார்த்த பிறகு, படங்கள் இல்லாத குறிப்புகளை நீங்களே நேரடியாக சேர்ப்பதற்கான வசதி உங்களுக்கு வழங்கப்படும்.
admin sir
அட்மின் சார் நலமா? என்னுடைய computer-ல் தான் பிரச்சனை. இப்பொழுது சரியாகிவிட்டது. இப்பொழுது அறுசுவை இணையத்தளத்தை திறந்தவுடன் என்னுடைய முகவரி மூலம் உள்ளே போக முடிகிறது. உங்களுடைய பதிலுக்கு மிக்க நன்றி.
Expectation lead to Disappointment