அன்பு தோழிகளுக்கு வணக்கம்

<!--break-->அன்பு தோழிகளுக்கு வணக்கம்.

தோழிகளே நான் மிகுந்த மன வருத்தத்தில் உள்ளேம் பதில் போடுங்கள் .

என்ன மன வருத்தம் உங்களுக்கு? நான் இங்கு புதிது. என்னிடம் கூற மனம் இருந்தால் கூறலாம்.

அதான் மேலே கூறியுள்ளேனே மா.

எனக்கு உதவி பண்ணமாட்டீங்களா?

எனக்கு சென்னை இல்ல அதனால உங்களுக்கு உதவ முடியல தப்பா நெனச்சுகாதிங்க ப்ளீஸ்.

என்றும் அன்புடன்,
சுபா ராம்.

உங்களுக்கு திருமணமாகி 1 வருடம் தான் ஆகிறது என்று சொல்கிறீர்கள் . திருமணமான 6 மாதத்திலிருந்தே treatment செய்ய ஆரம்பித்து விட்டீர்கள். treatment இல்லாமல் இயற்கையாக கருத்தரிக்க விடவில்லை என்பது போல் தெரிகிறது . இது போல் ஆரம்பத்திலேயே மருத்துவரை நீங்கள் பார்க்க ஆரம்பித்ததால் என்ன நடந்தது . 6 மாதமாக ஒரு மருத்துவரை பார்த்துவிட்டு இப்பொழுது அடுத்த மருத்துவருக்கு மாற விரும்புகிறீர்கள் . இப்படி நீங்கள் செய்வது சரிதானா என்பதை யோசித்தீர்களா ??
ஏன் இப்படி உங்களுக்கு சொல்கிறேன் என்றால் நானும் இந்த தவறை செய்தேன் . எனக்கு திருமணமாகி 6 மாதத்தில் கரு உருவாகவில்லை என்று மருத்துவரிடம் சென்றோம் . அதற்கு அந்த மருத்துவர் திருமணமாகி 6 மாதம் தான் ஆகிறது அதற்குள் எந்த treatment செய்ய முடியாது என்று அனுப்பி விட்டார் . பிறகு அடுத்த இரண்டு மாதங்களில் இயற்கையாகவே கரு உருவானது. உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருந்தால் ஒரு முறை கும்பகோணம் அருகிலுள்ள கர்ப்பரட்சாம்பிகை கோவிலுக்கு சென்று வாருங்கள்.
அது மட்டுமின்றி இந்த அறுசுவை தலத்தில் நிறைய பேர் இது பற்றி பேசி இருக்கிறார்கள். அதில் உங்களுக்கு உதவுமா என்று பாருங்கள் .

http://www.arusuvai.com/tamil/forum/297

இல்லை ரம்யா நானாக ஆஸ்பிட்டல் செல்லவில்லை.எனக்கு திருமனம் ஆகும் முன் பிரீயட்ஸ் 32 நாளைக்கு ஒருமுரை கரெக்டா வந்துவிடும். திருமனத்திற்கு பின் 5 நாள் தள்ளி போனது நானும் நல்ல விஷயம் என்று நினைத்து யூரின் டெஸ்ட் செய்தோம். நெகட்டிவ் வந்தது.அதோடு 2 மாதம் வரவில்லை அப்போதுதான் நான் மருத்துவரிடம் சென்றேன். அவர்கள் ஸ்கேன் செய்ய சொன்னார்கள். அப்போதுதான் இந்த ப்ராப்ளம் தெரிந்தது. அதிலிருந்து இன்னமும் எனக்கு இர்ரெகுலர் பிரியட்ஸ் ஆக உள்ளது. எனவே நீங்கள் தான் தோழிகளே ஹெல்ப் பண்ணனும். நான் கண்டிப்பா கோவிலுக்கும் போகிறேன் பா.

ஹாய் தோழி முகி...,மனம் வருத்தம் அடைய வேண்டாம்.எனக்கு தெரிந்த விஷயங்களை உங்களுக்கு சொல்கிறேன் சரியா....
இன்றைய கால கட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்கு கர்ப்ப பைய்யில் நீர் கட்டி வருவது சகஜமாகி விட்டது.ஒரு சில மருத்துவர்கள் அதையே ட்ரீட்மெண்ட் என்ற பெயரில் பணத்தை கரக்க செய்கின்றார்கள்.இதை நான் கண்ணால் மற்றும் அனுபவபட்ட உண்மை.
எனது சிறிய நாத்தினார் காலேஜ் படித்து கொண்டிருக்கும் போது அவளுக்கு அல்சர் ப்ராப்ளம் வந்தது. மாதவிடாயும் சரியாக வராமல் இப்படி தள்ளி போவது இல்லையென்றால் நீங்கள் சொல்வது போல் இரண்டு மாதம் கூட தள்ளி போவது என்றே இருந்து வந்தது.படிப்பு முடிந்து கல்யாணமும் பேசி வைத்தோம்.வயிற்று வலியும் அவ்வபோது ஏற்பட வயிற்றுபுண்ணினால் இந்த ப்ராப்ளம் இருக்கலாம் என நினைத்து நானும் எனது பெரிய நாத்தினாரும் அவளை குடல் சம்பத்தபட்ட டாக்டரிடம் அழைத்து சென்றோம்.அவர் ஸ்கேன் செய்ய சொல்லி சொல்லவே ஸ்கேன் ரிப்போர்ட்டில் அல்சர் லேசாக இருக்கு என்றும் சொல்லி விட்டு கர்ப்ப பைய்யில் சிறு சிறு நீர் கட்டி உள்ளது.என்று சொன்னார்.மகளிர் மருத்துவரை அணுகி பாருங்கள் என்றும் சொல்லி விட்டார்.
அவள் வெளியே வந்து (மெடிக்கல் வாசலில்..)ஒரே அழுகை.எனது பெரிய நாத்தினாருக்கும் பயமும்,கவலையும்...எனக்கும் லேசாக பயம் இருப்பினும் நான் அதை வெளிகாட்டி கொள்ளாமல் அவர்களை ஆறுதல் படுத்தி கொண்டிருந்தேன்.
அப்போது மெடிக்கலில் வேலை பார்த்து கொண்டிருந்த பெண்மணி என்னவென்று கேட்க நாங்கள் சொல்ல அவர் சிரித்து கொண்டே “இதுக்காகவா அழறீங்க....?
இப்போது எல்லா பெண்களுக்கும் இது ஒரு நார்மலான ப்ரச்சனையாக இருக்குமா....பசங்க படிக்கிறேன்னு சரியா சாப்பிடாம இருப்பதால் சத்து இல்லாம ஏற்படுறதுதான் இது.....
மாதவிடாய் வரும் காலம் நெருங்கும்போது 75% பெண்களுக்கு கர்ப்பபைய்யில் இது போன்ற சிறு சிறு நீர் கட்டி உருவாகும்.அதுவே மாதவிடாய் முடிந்ததும் ஸ்கேன் செய்து பாருங்கள் ஒன்றுமே இருக்காது.எல்லாம் உடைந்து போய் விடும்.
இது ஒரு நார்மலாக நம் உடம்புகளில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள்.இதை உங்களுக்கு அடித்து சொல்கின்றேன்.என்னை நம்புங்க.உங்களை ஆறுதல் படுத்துவதற்க்காக சொல்லவில்லை.இந்த பெண் மாதவிடாய் வந்ததும் தலைகுளித்த பின் அழைத்து வாருங்கள் நானும் கூட வருகிறேன்.ஸ்கேன் செய்து பாருங்கள் நான் சொல்வது உண்மை என்று புரியும்.”என்று சொல்லவும் அவரும் பெண் தானே என்று நம்பிக்கை கொண்டு வந்து விட்டோம்.
இருப்பினும் எனக்கும் சரி..,எனது நாத்தினாருக்கும் சரி உள்ளுக்குள் பயம் லேசாக இருந்தது உண்மைதான்.எனது மாமியார் பயந்த சுபாவம் என்பதால் நாங்கள் யாரிடமும் சொல்லவில்லை.

அவளுக்கு திருமணம் முடிந்து இப்படிதான் ஒரு வருடத்திற்க்குள்ளாக ஒரு விஷேசமும் இல்லை என்று அவளது நாத்தினார் டாக்டரிடம் அழைத்து சென்று முழு பரிசோதனை செய்ய டாக்டர் எல்லாம் சரியாக உள்ளது.கர்ப்ப பைய்யில் இவள் கரு உருவாகுவதற்க்கான எல்லா சிம்டம்ஸும் உள்ளது.இவளுக்கு உடல் பலகீனமாக இருப்பதால் காலதாமதம் ஏற்படுகின்றது என்றனர்.
இப்போது அவள் ஏழு மாதம் கர்ப்பமடைந்து உள்ளாள்.இந்த மாதத்தோடு திருமணமாகி சரியாக இரண்டு வருடம் முடிவடைந்து விட்டது.
இவ்வளவு விளக்கமாக உங்களுக்கு ஏன் சொல்கிறேன் என்றால் நீங்கள் பயப்பட தேவையில்லை என்று உங்களுக்கு புரிய வைக்கதான்.
திருமணத்திற்க்கு பின் நம் உடம்பில் ஒரு சில ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படலாம்.அதனால் ஏற்படுவதுதான் மாதவிடாய் காலதாமதமாவது.சரியாகி விடும்.பொறுமையுடன் இருங்கள் முகி......
நிறைய மாத்திரைகளை எடுத்து கொள்ளாதீர்கள்.அய்யோ நமக்கு குழந்தை பாக்கியம் கிடக்கணுமே என்று அங்கு காண்பிக்க போகிறேன் இங்கு காண்பிக்க போகிறேன் என்று முடிவெடுக்காதீர்கள்.இப்போது உங்களுக்கு தேவை நம்பிக்கையும்,பொறுமையும் தான்.அதை மட்டும் கைவிட்டு விடாதீர்கள்.
\\\\இன்னும் ஒரு விஷேசமும் இல்லையா...//// என்று எல்லோரும் கேட்பார்கள் தான்.அது உங்களுக்கு கடும் வேதனையை அளிக்கும்தான்.நான் இல்லையென்று சொல்லவில்லை.உங்கள் வேதனை எனக்கு புரிகின்றது.
இன்றைய சூழலில் நிறைய பெண்களுக்கு கர்ப்பமாவது காலதாமதம் ஏற்படுகின்றது.இரண்டு வருடத்திற்க்கும் மேலாக இருப்பின் நீங்கள் டாக்டரை அணுகுங்கள்.அதுவரை உங்கள் உடம்பை தெம்பாக இருக்க கவனித்துக் கொள்ளுங்கள்.நம்பிக்கையுடன் கடவுளை பிரார்த்தியுங்கள்.
கடவுள் நமக்கு குழந்தையை சுமக்க கூடிய அளவிற்க்கு நம் உடம்பில் தெம்பும்,வளர்த்து ஆளாக்க கூடிய தெம்பும் நமக்கு வந்ததும் நிச்சயம் கொடுப்பார் என்று உறுதியாக நம்புவோமே....
முகி நம்பிக்கையோடும் தைரியத்தோடும் அன்றாட வாழ்க்கையை சந்தோஷமாக உங்கள் கணவருடன் நேரத்தை கழியுங்கள்.நிச்சயம் திடீரென்று ஒரு நல்ல செய்தியை விரைவில் எங்களுடன் இங்கே பகிர்ந்து கொள்வீர்கள் சரியா....

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

அப்சாரா ரொம்ப நன்றி. எனக்காக பதில் அளித்ததிற்கு மிகவும் ஆறுதலாக உள்ளது பா. என் சொந்தங்கள் அனைவரின் கேள்வியும் இதுதான் பா. என்ன விஷயம் எதுவும் இல்லையா?. அதனால் தான் பா எனக்கு வருத்தம். இனி நான் எதற்கும் கவலைப்பட மாட்டேன். நல்ல விசயம் கண்டிப்ப நடக்கும். அதனை உங்கலுடன் பகிர்ந்துக்கொள்வேன். நன்றி தோழி

ennakum intha problem than madam ennaku marriage agi 3 months agirathu. nannum treatment eduka arampichuten annanulum innum baby agala ennaku romba payama iruku ennoda husband romba aasaiya irukaru ennaku enna pannarathunu theriyala so neenga nalla pathila sollunga ippo ennaku susten 100 tablet 15days sapida solli kudithirukkanga.

மேலும் சில பதிவுகள்