கர்ப்ப கால வாந்தியினால் 6.5 கிலோ எடை குறைந்து விட்டது.

அன்பு தோழிகளே நான் அறுசுவைக்கு புதிது. என் பெயர் கலைவாணி. சென்னையில் வசிக்கிறேன்.

நான் இப்பொழுது 16 வாரம்(4மாசம்) கர்ப்பமாக உள்ளேன். 3 மாதமாக அதிக வாந்தி மயக்கம். சாப்பிட முடியாமல் தண்ணீர் குடிக்கமுடியாமல் வைட்டமின் மாத்திரைகளையும் சாப்பிட முடியாமல் அவஸ்தை பட்டேன். டாக்டர் வாந்தி வராமல் இருக்க மாத்திரை கொடுத்தார். இருந்தும் பலனில்லை. 53கிலோ எடை 46.5 ஆக குறைந்துவிட்டது. இப்பொழுது 2 வாரமாக மாத்திரை சாப்பிட்டால் வாந்தி வருவதில்லை. ஓரளவிற்கு சாப்பிட முடிகிறது. ஆனால் தண்ணீர் நிறைய குடிக்க முடியவில்லை. அரை லிட் மட்டுமே குடிக்கிறேன். வைட்டமின் மாத்திரைகள் சாப்பிட முடியவில்லை. உடனே வாமிட்.

கான்ஸ்டிப்பேஷன், காஸ், ஒய்ட் டிஷ்சார்ஜ், ஸினஸ், தொடை வலி அத்தனை கொடுமைகளையும் அனுபவிக்கிறேன். எனக்கு நல்லது கெட்டது கூற பெரியவர்கள் உடன் இல்லை. கணவர் மட்டுமே அருகில் உள்ளார். சிறிது நடந்தாலும் நின்று கொண்டு சமையல் செய்தாலும் கால் வலிக்கிறது. டாக்டரிடம் என் ப்ராப்லம் எதை சொன்னாலும் பலனில்லை. மிகவும் பிரபலமான ஹாஸ்பிட்டல்தான். எனக்கு பயமாக உள்ளது. நான் ஆரோக்கியாமான எதையுமே சாப்பிடாமல் என் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு என்ன சத்து கிடைக்கும். நான் ஆரோக்கியாமான குழந்தையை எப்படி பெற்றெடுப்பேன்? 2 மாத லீவுக்கு பின் 1 வாரமாக ஆபீஸ் செல்கிறேன். நான் என்ன செய்ய வேண்டும் என்ன சாப்பிட வேண்டும் என்று எனக்கு வழி காட்டுங்கள். ப்ளீஸ்...

இளநீர் சளிஎல்லாம் பிடிக்காது நீங்கள் சென்னையில் எந்த இடம்?????????

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

நாளை முதல் இனி இளநீர் குடிக்க ஆரம்பித்து விடுவேன். கோடம்பாக்கத்தில் இருக்கிறேன். என் சொந்த ஊர் கும்பகோணம். நீங்கள் எந்த ஊர்?

i am tambaram (chennai)

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

சாரி கலை. கொஞ்சம் வேலை இருந்தது. அதுதான் பதிவு போட முடியவில்லை.

அன்புடன்
மகேஸ்வரி

உங்களுக்கு குழந்தை பிறந்து விட்டதா? அல்லது நீங்களும் இப்பொழுது?

அட இதுக்கெல்லாம் ஏன் சாரி எல்லாம். அதை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்..

எனக்கு ஒரு பையன் .UKG படிகுறார்.எனது அனுபவத்தை சொன்னேன் உங்களுக்கு .பரவாயில்லை வாந்தி வந்தாலும் சாப்பிடுங்கள் .டாக்டர் அதைதான் சொன்னார் .சரியா !!

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

இனிமேல் முடிந்த வரை சாப்பிடுகிறேன்.

HAI
I know how hard to cope up with vomitting, nanum ungala mathiri than kasta patten ungaluku constipation erukathu ennna unga vayuthula onnum illathapa toilet eppadi varum, gas problem may be due to medicine and empty stomach,leg pain ungaluku strength illathathu nalla than, white discharge normala entha time neraya peruku erukum r nenga vommitting panrapa unga stomach strain agarathunalla erukum,sinus ku nenga steam inhalation (avvi pudikalam)nalla kekum

solution
kaila glucose powder vaichukunga ennna mayakamum erukum nenga atha vittu tinga, ungalala romba mudiyalana doctor ta solli drips glucose pottukunga because nenga velayku poringa leg pain kudam may be vitamin and mineral level low vaga erukalam, sweeet kaila vachikunga konja nal thanni kudika muduyathu parava illa, yelani(minerals eruku) or fresh juice sip by sip kudinga nanum ungala mathiri than kasta paten eppo 7months ennaku 5th monthlenthu vommiting illa 4months mudiyum pothu ellorukum vomiiting ninru vidum so dont worry
unga babyku onnum agathu kavala padathinga 5th month lenthu than babyku nenga sapidurathu pogum athu varai unga udambula erukarathu pothum athuvum illama babyku eppo konja strength than thevai. ungaluku fever mattum varamal pathukonga unga vommiting ninnuta nengale jasthi sapiduvinga nanum ungala mathiri than velinattula eruken eppo enaku entha problemum ulla im enjoying my pregnancy nengalum enna mathiri sari agiduvinga kadavulai vendikuren. take care

டியர் கலைவாணி ...நான் மயிலாப்பூர் இல் இருக்கறேன் .....நீங்க எங்க இருக்கிங்க? தும்மல் ,சளி ,முக்கடைப்பு க்கு சுடு தண்ணீர் குடிங்க.. நல்லா ரிசல்ட் உடனே கிடைக்கும் ....நாமலே வச்சு சாப்டனும் ..அது தா கஷ்டமா இருக்கும்.. இளநீர் குடிச்சா சளி பிடிக்காது.. பயப்பட வேண்டாம்....தண்ணீர் குடிக்க கஷ்டமா இருக்கும் இப்போ ...அதனால் நான் ஒரு நாளைக்கு 4 இளநீர் குடிப்பேன் ....நீர் கடுப்பும் இருக்காது..உடம்புக்கும் நல்லது ...தினமும் காலையில் எழுந்த உடன் பல் விலக்கி விட்டு ஒரு கிளாஸ் பால்,ரெண்டு பேரிச்சம் பழம்,ரெண்டு பாதாம் பருப்பு சாப்டுங்க .....உங்களுக்கு இரும்பு சக்தியும் ,கால்சியமும் கிடைக்கும்.. ஓட்ஸ் சாப்டுங்க .....உங்களுக்கு என்ன என்ன பிடிக்குமோ சாப்டுங்க .வாந்தி வந்தா கவலை படாதீங்க ...வந்தா வரட்டும் னு சாப்டுங்க .....

Hope is necessary in every condition:)

மேலும் சில பதிவுகள்