கர்ப்ப கால வாந்தியினால் 6.5 கிலோ எடை குறைந்து விட்டது.

அன்பு தோழிகளே நான் அறுசுவைக்கு புதிது. என் பெயர் கலைவாணி. சென்னையில் வசிக்கிறேன்.

நான் இப்பொழுது 16 வாரம்(4மாசம்) கர்ப்பமாக உள்ளேன். 3 மாதமாக அதிக வாந்தி மயக்கம். சாப்பிட முடியாமல் தண்ணீர் குடிக்கமுடியாமல் வைட்டமின் மாத்திரைகளையும் சாப்பிட முடியாமல் அவஸ்தை பட்டேன். டாக்டர் வாந்தி வராமல் இருக்க மாத்திரை கொடுத்தார். இருந்தும் பலனில்லை. 53கிலோ எடை 46.5 ஆக குறைந்துவிட்டது. இப்பொழுது 2 வாரமாக மாத்திரை சாப்பிட்டால் வாந்தி வருவதில்லை. ஓரளவிற்கு சாப்பிட முடிகிறது. ஆனால் தண்ணீர் நிறைய குடிக்க முடியவில்லை. அரை லிட் மட்டுமே குடிக்கிறேன். வைட்டமின் மாத்திரைகள் சாப்பிட முடியவில்லை. உடனே வாமிட்.

கான்ஸ்டிப்பேஷன், காஸ், ஒய்ட் டிஷ்சார்ஜ், ஸினஸ், தொடை வலி அத்தனை கொடுமைகளையும் அனுபவிக்கிறேன். எனக்கு நல்லது கெட்டது கூற பெரியவர்கள் உடன் இல்லை. கணவர் மட்டுமே அருகில் உள்ளார். சிறிது நடந்தாலும் நின்று கொண்டு சமையல் செய்தாலும் கால் வலிக்கிறது. டாக்டரிடம் என் ப்ராப்லம் எதை சொன்னாலும் பலனில்லை. மிகவும் பிரபலமான ஹாஸ்பிட்டல்தான். எனக்கு பயமாக உள்ளது. நான் ஆரோக்கியாமான எதையுமே சாப்பிடாமல் என் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு என்ன சத்து கிடைக்கும். நான் ஆரோக்கியாமான குழந்தையை எப்படி பெற்றெடுப்பேன்? 2 மாத லீவுக்கு பின் 1 வாரமாக ஆபீஸ் செல்கிறேன். நான் என்ன செய்ய வேண்டும் என்ன சாப்பிட வேண்டும் என்று எனக்கு வழி காட்டுங்கள். ப்ளீஸ்...

ஹாய் யமுனா, உங்களுக்கு என் வாழ்த்துக்கள். நீங்கள் கொடுத்த பதில் எனக்கு சற்று மனக் கவலையை குறைத்துள்ளது.

ரேகா, நீங்கள் கொடுத்த டிப்ஸ் ஃபாலோ இனி பண்றேன். ஆனால் காலையில் பால் குடித்தால் உடனே வாமிட் வந்துவிடுகிறது.

நான் இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட ஆரம்பித்துவிட்டேன். ஆனால் நான் சாப்பிடுவது ஆரோக்கியமானதா இல்லையா என்ற சந்தேகத்திலேயே சாப்பிடுகிறேன். தினமும் காலை 15 நிமிடம் மாலை 15 நிமிடம் ஆபீஸ்க்கு நடக்க வேண்டும். 2 நாட்களாக என்னால் முடியவில்லை. கால் பிடித்து இளுத்துக் கொள்கிறது. வாந்தி வராமல் இருக்க மாத்திரை சாப்பிடுகிறேன். இப்பொழுது கன்ட்ரோல் ஆகிவிட்டது. மாத்திரை சாப்பிட்டால் குழந்தைக்கு எதாவது பாதிப்பு வருமா

நீங்க என்ன உணவு சாப்பிடுறீங்க ?வாந்தி கண்ட்ரோல் ஆக மாத்திரை சாப்டலாம் ...ஆனால் ரொம்ப வேணாம் ...எனக்கும் வாந்தி கண்ட்ரோல் ஆக மாத்திரை குடுத்தாங்க...ஆனால் நான் சாப்டல ....வந்தா வரட்டும் னு நான் மாத்திரை சாப்டல ...என்னோட அக்கா ரொம்ப வாந்தி கண்ட்ரோல் மாத்திரை சாப்பிட வேண்டாம் னு சொன்னாங்க...நீங்க நல்லா ரெஸ்ட் எடுங்க ...வேலைக்கு ஒரு மாசத்துக்கு அப்புறம் போங்க ...நல்லா உடம்ப பாத்துகோங்க

Hope is necessary in every condition:)

ரேகா,

நான் ஆரஞ்சு, திராட்சை, ரைஸ், தோசை, ரஸ்க், சம் வெஜிடபில்ஸ், சில நாட்கள் முட்டை, ராகி கஞ்சி சாப்பிடுகிறேன். நான்வெஜ் சாப்பிட பிடிக்கிறது. ஆனால் அதிகம் சாப்பிடுவதில்லை.

நானும் உங்களை போல் பயந்தாங்கொல்லிதான். நான் ஒரு ப்ளாக் படித்தேன். அடிக்கடி அதை படித்து மனதை தேற்றிக்கொள்வேன். நீஙகளும் படிங்க.

சுகந்தி, யமுனா, ரேகா, அஸ்வதா, மகேஸ்வரி மற்றும் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.....

dear kalaivani... wish u a happy and prosperous new year 2011......

Hope is necessary in every condition:)

ஹாய் கலைவாணி ....

http://www.eegarai.net/-f14/-t1007.htm

நீங்க இந்த லிங்க் இல் போய் பாருங்க ...உங்களுக்கு மிக உதவி ஆக இருக்கும் ......

Hope is necessary in every condition:)

நன்றி ரேகா, உண்மையில் இந்த லிங்க் உபயோகமாக இருந்தது. cocoa butter என்ன ப்ராண்ட் கிடைக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா?

cocoa butter pathi enaku theriyathu kalai...sorry..tholigal yarathu sonnal enakum sollugal

Hope is necessary in every condition:)

ஹாய் கலைவாணி ....
எப்படி இருக்கீங்க நீங்களும் உங்க குழந்தையும் ? இன்னும் உங்களுக்கு வாந்தி இருக்கா?

Hope is necessary in every condition:)

எனக்கு இன்னமும் வாந்தி இருக்கிறது. வேறு வழி இல்லாமல் நான் tablet எடுக்கிறேன். அதனால் இப்பொழுது சாப்பிட முடிகிறது. வாந்தியும் குறைந்து விட்டது. tablet நிறுத்தினால் கஷ்டம். நீங்கள் எப்படி இருக்கின்றீர்கள்? குழந்தையின் அசைவு தெரிகிறதா?

மேலும் சில பதிவுகள்